காத்திருப்பு - பனித்துளி சங்கர் கவிதைகள் - Panithulishankar Tamil Kavithaigal

ப்போதோ எங்கேயோ
யதார்த்தமாய் அறிமுகமானாய்....
அன்று முதல் மீண்டும் 
உந்தன் சந்திப்புக்காக தினந்தோறும் 
வந்து செல்கிறேன் அதே இடம்...!

றிமுகத்தின் முதல் நாள்
முழுவதும் உயிர் குடித்தாய் 
தினம் சிந்திச் சிதறும் 
உன் ஞாபகங்களின் உச்சத்தில் 
துரும்பென உயிர் கரைகிறேன்...!

கர்ந்து செல்லும் 
கடிகார நொடிமுள்ளின் 
ஒவ்வொரு அசைவுகளும் 
உன் பிரியங்களின் ஆதிக்கத்தை
என்னுள் ஆழ வீசிச் செல்கிறது..!

வ்வொரு நொடியும் உனக்காக 
ஆயிரம் கற்பனைகள் 
எண்ணப் பெருவெளி எங்கும்... 
கண்விழித்து கனவு காண்கிறேன்
உந்தன் கரம் பிடிக்கும் 
அந்த நாளுக்காக.....

 காதல் கொண்ட 
ஒவ்வொரு இதயத்திலும்
உயிர் பெறுமோ இந்த தாகம்....
கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடத்திலும் 
என்னை கனவுகளுடன் 
மீளச் செய்யும்
உந்தன் நினைவுகளின் 
சிலநேர சந்தோசம் 
மீண்டும் பிறக்கச் 
செய்கிறது குழந்தையாய்....

தினம் வரும் கனவுகளுக்குள் 
உந்தன் காதல் விதைத்தாய்
நித்தம் சிதறும் சிரிப்பிற்குள் 
உந்தன் நினைவுகள் புதைத்தாய்... 
சுவாசமின்றி திணறும் 
ஒரு தேகமாய் உந்தன் 
வருகைக்காய் காத்துக் கிடக்கிறேன்.....
* * * * * * *
நேசத்துடன்
-பனித்துளி சங்கர் -

7 மறுமொழிகள் to காத்திருப்பு - பனித்துளி சங்கர் கவிதைகள் - Panithulishankar Tamil Kavithaigal :

rajamelaiyur said...

அருமையான கவிதை நண்பா

கா.ந.கல்யாணசுந்தரம் said...

சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

MARI The Great said...

அருமை என்ற ஒற்றை வார்த்தையால் இக்கவிதையை பாராட்டிட முடியாது. இருந்தாலும் வேறு வார்த்தைகள் ஏதும் கிடைக்கவில்லை எனக்கு..,

அருமை ...!

Anonymous said...

நல்லா இருக்கு சார்

Unknown said...

நன்றாக உள்ளது. ரசித்து படித்தேன்

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர் சார் ! வாழ்த்துக்கள் !

Naanjil Kishore ♥♥♥ said...

பனித்துளி மலையில் உருகும் போது..
மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பது சாத்தியம்....
உன் மனதில் உருகும் போது..
எங்களின் தமிழ் தாகத்தை தீர்ப்பது சத்யம்....