உயிரைத் தின்ற சில நொடிகள் - Panithulishankar kavithaigal - பனித்துளி சங்கர் கவிதைகள்

ழை பொழிகிறது குடையில்லை...
உயிர் கரைகிறது விடையில்லை..
இலவம் பஞ்சாய் இதயம் வெடிக்கிறது...
இந்த இளமைத் தாண்டி உயிர் துடிக்கிறது....

ன் வெட்கம் தானடி
நான் எழுதும் காகிதம்....
உன் பார்வை தானடி
என்னை வெல்லும் ஆயுதம்...
உன் அழகிய நினைவுகள் தானடி
எந்தன் உலகின் சிறந்த ஓவியம்...
தயக் கோப்பையில் காதல் ஊற்றினாய்
என் இயந்திர வாழ்க்கையில்
இளம் பூக்கள் நீட்டினாய்
இரவின் உறக்கத்தில் கனவுகள் வீசினாய்...!

ன் ஞாபகம் தின்றே பசித் தீர்க்கிறேன்
என் நிழல்களில் உனக்கு குடை பிடிக்கிறேன் .
இன்னும் ஏனடி என்னை கொல்லப் பார்க்கிறாய்..!!??
நீ வானவில்லாய் வந்து செல்லும்
சில நொடிகளில்
என் உயிர் மீண்டும்
இந்த உடலில் சேர்க்கிறாய்....!!

- நேசத்துடன் 
பனித்துளி சங்கர் -
* * * * * * *

13 மறுமொழிகள் to உயிரைத் தின்ற சில நொடிகள் - Panithulishankar kavithaigal - பனித்துளி சங்கர் கவிதைகள் :

Anonymous said...

நானும் சுவைத்தேன்..

MARI The Great said...

////உன் ஞாபகம் தின்றே பசி தீர்க்கிறேன்/////


அருமை நண்பரே ....!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க ! நன்றி நண்பரே !

கிராமத்து காக்கை said...

அண்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அமையான கவிதையுடன் வந்திருக்கிங்க

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

பாலா said...

காதல் ரசம் சொட்டுகிறது. அருமை

செய்தாலி said...

ம்ம்ம் அருமை

இராஜராஜேஸ்வரி said...

அழகான பார்வைகள்.. பாராட்டுக்கள்..

திவ்யா @ தேன்மொழி said...

//உன் ஞாபகம் தின்றே பசித் தீர்க்கிறேன்
என் நிழல்களில் உங்கு குடை பிடிக்கிறேன்//
இரசித்த வரிகள்..

சிவரதி said...

தெருவோரம் செல்கையிலே
வழியோராம் நின்றவளை
விழியோரம் கண்டதினால்
மனதோரம் - ஒரு வருடல்
என் வாழ்க்கை துணையாக வருவாளா
அழகான பார்வை
அமையான கவிதை

சிவஹரி said...

அருமை என்றே அடித்துச் சொல்றேன்..!

ஷர்புதீன் said...

call me if u are in india 90434 00365

அத்விகா said...

அழகான வரிகள்..