காத்துக் கிடக்கிறேன் - (Panithulishankar Kavithai - Kaathiruppu)

குடை இல்லாத நேரத்தில்
வந்து செல்லும்
மழை போன்றுதான்
நிகழ்ந்துபோனது
உனது வருகையும்
உன் பார்வையால்
என்னை நனைத்து சென்றாய்.,
சிறு புன்னகையால்
என் இதயம் திருடிச்சென்றாய்.,

மீண்டும் ஒரு மழைக்காக
குடையின்றியே 
காத்துக் கிடக்கிறேன்
உன் வருகையை
உயிரின் இறுதிவரை 
ஏந்திக்கொள்ள !...

-நேசத்துடன்
பனித்துளி சங்கர்-.
* * * * * * *

12 மறுமொழிகள் to காத்துக் கிடக்கிறேன் - (Panithulishankar Kavithai - Kaathiruppu) :

Unknown said...

கவிதை அழகு!

ஒரு சந்தேகம்!
வந்து போனது
புதுமழையோ..!
இனி....
வரவிருப்பதும் புது
புதுமழையே!

பால கணேஷ் said...

ரசனையான கவிதை! அருமை!

MARI The Great said...

அருமை ..!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

மழைதான்
கவிதை மழை

பாலா said...

மழை எப்போதுமே புதிதானதே. அப்படியானால் வேறொரு மழைக்குத்தானா வெயிட்டிங்?

Unknown said...

காத்திருப்புகள் சில வேளைகளில் சுகம்தகன்....

Unknown said...

கலங்க வைத்த வரிகள். அனுபவித்த பொது கூட இந்த வரிகள் எனக்கு தோன்ற வில்லை, ஆனால் வாசிக்கும் போது பழைய நினைவுகளை அனுபவிக்கிறேன்

Anonymous said...

அருமை

உழவன் said...

கவிதை சூப்பர்....
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

Unknown said...

அட என்னமா எழுதுரயா கவிதை மாப்ள.. நானும் இருக்கனே!

செழியன் said...

அருமையான வரிகள்
//மீண்டும் ஒரு மழைக்காக குடையின்றியே காத்துக்கிடக்கிறேன்
உன் வருகையை உயிரின் இறுதிவரை ஏந்திக்கொள்ள!!!//

மாலதி said...

காதலில் காத்திருத்தல் என்பது மிகப் பெரிய செய்தியல்ல அது போலித்தனமில்லா உண்மையான காதல் எனின் ஒருகோடி ஆண்டுகள் ஆனாலும் அந்த காதல் இழப்பு இல்லாமல் மீட்க இயலும் காதல் ஒருதவம் காதல் ஒரு பிரபஞ்சத்தில் இன்பத்தில் நுழைவாயில் காதல் மனித சிருஷ்டியின் மகத்தான பரிமானம் தொடரட்டும் உமது கவியாகாம் பாராட்டுகள்