கொட்டும் மழைக்குள்
ஒற்றைக் குடைக்குள்
ஓயாத அடை மழையென
உன் நினைவுகள்..!
சுற்றும் பூமி நிற்கும்போதும்
மறக்காத சுவாசமாய்
உன் ஸ்பரிசம்..!
மழை நின்று போனது
நீயும் நானும்
பிரிந்துசெல்ல மனமின்றி
பிரிந்து சென்றோம்.!.
காலங்கள் கடிவாளங்கள் இல்லாத
குதிரையாய் கால் போகும்
திசை எங்கும் ஓடிப்போனது..!
ஒரே மூச்சில் வாசித்து முடிக்கப்பட்ட
புத்தகத்தின் பக்கங்களாய்
பத்து ஆண்டுகள்
சத்தமின்றி கழிந்து போனது..!
இன்னும் இளமை மாறாமல்
அதே புன்னகையோடு எப்பொழுதும்
தலையசைக்கும் மரங்கள்..!
மண்ணைக் கட்டிக்கொண்டு
இன்னும் நமக்காய்
காத்துக் கிடக்கும் உறவுகளாய்
பார்க்கும் திசை எங்கும்
பச்சை நிறத்தில் புற்கள்..!
இன்னும் பழமை மாறாமல்
அதே பொலிவுடன் அந்த இடம் .
இதோ அதே மழை
அதே ஒற்றைக் குடை
ஆனால் நீ அருகில் இல்லை..!
வெகு நேரம் காத்துக் கிடந்தேன்
நீ வரவில்லை .
அன்று உன்னையும் என்னையும்
ஒன்றாய் நனைத்த
இந்த மழையில் இன்று நான் மட்டும்
தனிமையில் நனைகிறேன்...!
உன் நினைவுகளுடன்
நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு இடங்களிலும்
மழை நின்றபின்னும்
தூறிக்கொண்டிருக்கிறது
உன் ஞாபகங்கள் மட்டும்..!
- பனித்துளிசங்கர்
Tweet |
20 மறுமொழிகள் to ஞாபகத் தூறல் - காதல் கவிதைகள் > Panithuli shankar Tamil New Kadhal Kavithaigal :
அருமை,அருமை
NO 1 அருமை,அருமை
Beautiful...
அழகான காதல் கவிதை..
நீண்டகால காதலியின் காத்திருப்பு கவிதையில் பாய்ச்சியுள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்..
http://sempakam.blogspot.com/
அசத்தல் கவிதை ,..
காதல் இனிமையான சுகமும் கொடுக்கும் கொஞ்சம் தடுமாறினால் சோகத்தையும் கொடுக்கும் காதலியின் உண்மையான காதலின் நினைவு ஒருதவம் இந்த தவத்தை அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள் உங்களின் அந்த வேடந்தாங்கலில் இளைப்பாறிய அந்த வண்ண மலருக்கு ...அன்பு தங்கையே விரைந்து இந்த பனித்துளியை பருகு வசந்தம் பிறக்கட்டும் வாழ்த்துகளுடன் .........
காதலில் காத்திருத்தல் சுகம் தான். ஆனாலும் 10 வருடம் என்பது ரொம்ப அதிகம். அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
மிகவும் அருமையான கவிதை எனது மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது மிகவும் ரசித்தேன்,
ஒரு படைப்பாளியின் வெற்றி அதை படிப்பவர்களுக்கு ஒத்துவர வேண்டும் அந்த வகையில் தங்களின் அனைத்து கவிதைகளும் வெற்றி பெற்றுவிட்டன..
உணர்வை பிரதிபலிக்கும் உன்னத வரிகள்
அருமையாய் இருக்கிறது.
நாவாந்துறையில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் கள அறிக்கை
குறோம் புறொவுசரில் வலப்பக்கம் வரும் ஸ்குரோலிங் வேலை செய்யவில்லை சிரமமாயிருக்கிறது.
@சந்தியா. இங்கு எனக்கு சரியாக கூகுள் குரோம் பிரவுசரில் ஸ்குரோல் நன்றாகவே வேலை செய்கிறது. ஆகவே வலைதளத்தில் எதுவும் பிரச்சினை இல்லை. எனவே, தங்களது பிரவுசரில் ஏதோ பிரச்சினை என நினைக்கிறேன். சரிபார்க்கவும். புரிதலுக்கு நன்றி..!
துளித்துளி சங்கர்
பனித்துளி சங்கர்
அளித்துளீர் கவியே
அருந்தமிழ் வழியே
தெளித்திடும் பன்னிர்
தேன்மலர் பனினீர்
களித்திடத் தந்தீர்
கரும்பென சுவைக்க
என் வலை வருவீர்
பொன் னுரை தருவீர்
புலவர் சா இராமாநுசம்
நினைவுகள் பழமை;
வரிகள் புதுமை,
கவிதை அருமை.
காதல் உயிர்களின் வசீகரித்துக்கு உரிய சொல்லாக்கம் காதல் இல்லையெனின் உலக உயிர்கள் இல்லை உங்களின் கவிதை காதலை அழகாக படம் பிடிக்கிறது பாராட்டுகள்
//வேலைப்பளு காரணமாக தனித்தனியாக நன்றி கூற இயலவில்லை. இப்பதிவுக்கு கருத்திட்டு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..!//
Nice
நல்லதொரு கவிதை
மென்மேலும் உங்கள் படைப்புகளை எதிர்பார்கிறோம்
arumaiyagavum ,alagagavum irukirathu
Post a Comment