என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!

ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம்.சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம்.

வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆனால் 2012க்குப் பிறகு?


அது பற்றி எந்தக் குறிப்புகளும் மாயன் நாகரீக ஆதாரங்களில் இல்லையாம்.


ஆக 2012-ஐ பூமியின் எக்ஸ்பயரி டேட் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று இயக்குநர் யோசித்ததன் விளைவுதான் இந்த 2012 திரைப்படம் எனலாம் .


உலகத்தின் முடிவு 2012 ம் ஆண்டு நிகழ்வதை சித்தரிப்பதே இந்த 2012 திரைப்படம். உலகின் அரசாங்கங்கள் அனைத்தும் தயாராகாத நிலையில் மாயன் கலெண்டர் முடிவடையும் 2012 பல இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக இடம் பெற்று உலகை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே படத்தின் கதை.2010 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் புரட்டோகனிஸ்ட்டும் ஆன சட்னம் பூமியின் மைய வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பைக் கண்டு பிடிக்கிறார். படத்தின் கதாநாயகனாக வரும் விஞ்ஞானியும் சட்னத்தின் நெருங்கிய நண்பருமான அட்றியன் ஹெல்ம்ஸ்லி இதை அமெரிக்காவின் அப்போதைய அதிபராக விளங்கும் தோமஸ் வில்சனின் கண்ணோட்டத்திற்கு இச்செய்தியைக் கொண்டு வருகின்றார்.

இதன் பின்னர் கதை 2012ம் வருடத்திற்கு நகருகின்றது. 'யெல்லோவ்ஸ்டோன்' எனப்படும்

உலகின் மிக அபாயகரமான எரிமலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து அமெரிக்காவின் பூர்வ குடிகளான மாயன்களின் உலக அழிவுப் பிரகடனத்தை அறிவுப்புச் செய்யும் சார்லி ப்ரொஸ்ட்டை சந்திக்க செல்கிறார் அட்றியன். இதேநேரம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.மிகவும் மோசமான நில அதிர்வுகளால் பாதிக்கப்படும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் முழுவதும் பசுபிக் சமுத்திரத்தில் மூழ்கி விடுகின்றது. இச்சமயத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலுள்ள அட்றியனின் மக்கள் நகரம் அழியும் போது தப்பி செல்லும் காட்சி மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்த வல்லதாய் அமைந்துள்ளது.

 உலகின் மற்ற பாகங்களான இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டு கடலோரப் பிரதேசங்களில் மிகுந்த
சேதம் ஏற்பட்டு விடுகிறது.
இதேவேளை இத்தாலியின் வத்திக்கான் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு அழிந்து விடுவதுடன் பாப்பரசரும் இறந்து விடுகிறார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள வாசிங்டன் மிகப்பெரிய சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டால் என்ன நிகழும்? என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய நகரங்கள் அத்தனையும் இடிந்து தரைமட்டம் ஆவது போலவும், உலகிலேயே உயரமான இமயமலையையே சுனாமி விழுங்குவது போலவும்யெல்லோஸ்டோன் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சியும் லாஸ் வெகாஸ் நகரம் அதனால் அழிவுறும் காட்சிகள் ரூ 1200 கோடி செலவில் அற்புதமான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


இந்த திகிலுக்கு மத்தியில், பூமியில் தொடர்ச்சியாக ஏற்படும் இவ்வனர்த்தங்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சீனாவை நோக்கி பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் படத்தின் கதாநாயகன் அட்றியன் ஹெல்ம்ஸ்லி பயணித்து கப்பல்கள் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார் , ஒரு குடும்பம் விமானத்தில் தப்பி செல்கிறது. உலகம் அழிந்தபின், அவர்கள் நிலை என்ன? . என்பதே படத்தின் மீதிக்கதை.மனித இனத்தின் முதல் கலாச்சாரமான மாயன் பூர்வீகக்குடிகள் மனிதர்களின் அழிவை முன்னமே எவ்வாறு கட்டியம் கூறியிருந்தார்கள் என்பதையும் இயற்கை அனர்த்தங்கள்
மனித அழிவை எவ்வாறு நிர்ணயிக்கின்றன என்பதையும் சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸுடன் கண்ணுக்கு விருந்தாகப் படைக்கும் 2012 நிச்சயம் தவற விடக்கூடாத படங்களில் ஒன்று.

உலக சினிமா சரித்திரம் பார்த்திராத கிராபிக்ஸ் அற்புதம் எனும் வகையில் உலகம் அழியும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். முன்னோட்டக் காட்சிகள் முடிந்த பின்னும் படம் குறித்த பிரமிப்பு நீங்காமலேயே பலரும் அரங்கை வி்ட்டு வெளியேறினர்.

வேற்றுக்கிரக வாசிகள் பூமியைத் தாக்குவதை வெளிப்படுத்தும் 'இண்டிபெண்டென்ஸ் டே', மற்றும் உலக அழிவை சித்தரிக்கும் இன்னொரு படைப்பான 'டே ஆஃப்டர் டுமாரோவ்' ஆகிய பிரசித்தமான படங்களை தந்த டைரக்டர் ரோலண்ட் எம்மெரிச்சின் கைவண்ணத்தில் உருவான 2012 நவம்பர் 13ம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. அசத்தலான கம்யூட்டர் கிராஃபிக்ஸுடன் தயாராகியுள்ள என்ட் ஆப் வேர்ல்ட் 2012 என்ற இந்த ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் 65 மில்லியன் டாலரும் உலகளவில் 225 மில்லியன் டாலரும் வசூலாகி சாதனை படைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரச் செய்தி தெரிவிக்கிறது

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னொட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

45 மறுமொழிகள் to என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!! :

காயத்ரி said...

Hi Shankar ippaththaan nimmathiyaaka irukkiren . kaaranm
ellorum unmaiyaakave ulakam aliyappovathaaka ore pechchu . aanaal unkalathu intha thirai vimarsanam Padiththapirakuthaan ithu mulukka mulukka unmaiyaakave oru flim enru nampukiren .Unkalathu thirai vimarsanam super Kandippa yaar yaar ellaam world aliyapokuthunu sonnaangalo elloridamum ithai patri solven .

பிரியா said...

திரைக்கு சென்று நேரில் படம் பார்த்த ஒரு உணர்வை , உங்களது விமர்சனமும் , புகைப்படங்களும் தந்தது . அற்புதம் சங்கர் வாழ்த்துகள் உங்களின் இந்த பணி மேலும் தொடர

அன்புடன் ,
பிரியா

ஸ்வேதா said...

உங்களின் புதிய பதிவுக்கு நான்தான் முதலில் பின்னொட்டம் இட வேண்டும் என்று எண்ணி இருந்தேன் . இருந்தாலும் .எப்பவும் எனக்குத்தான் நீங்க முதலிடம் கொடுப்பீங்கணு எனக்குத் தெரியும் . உங்களது இந்த விமர்சனம் .எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது . வாழ்த்துக்கள் செல்லம்

உங்கள் ரசிகை
ஸ்வேதா.................

Shanthi said...

உங்களது இந்த புகைப்படங்களையும் ,விமர்சனங்களையும் பார்க்கும்பொழுது உலகம் அழிந்து முடிந்துவிட்டதுபோல் ஒரு உணர்வு . அருமை ..............

அமுதா said...

அற்புதமான புகைப்படங்கள் சங்கர் . நிகழ்வுகளை உண்மையாக கண்முன் நிறுத்துகிறது உங்களின் விமர்சனமும் தகுந்த புகைப்படங்களும் , வாழ்த்துக்கள் .

அமுதா

பருத்தி வீரன் said...

இங்கிலீஷ்காரன் இங்கிலீஷ்காரந்தான் . நம்மாளு படத்தை எடுத்து நம்மளை அலவைக்கிறான் . ஆனால் அவன் அழுவதையே படமா எடுக்கிறான் . அதுதான் நாம இப்படி , அவன் அப்படி , இது எப்படி ? நான் இனிமேல் படம் பார்ப்பதாக இல்லை இதுவே போதும் இதை வைத்தே இன்னும் சில நாட்களுக்கு பொலப்பா ஓட்ட வேண்டியதுதான் .

மொக்கை said...

நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நம்ம ஓட்டு உங்களுக்குத்தான் சாமியோ !
போய்ட்டு மீண்டும் வாறெங்கா சாமியோ !!

Sathish said...

vanakam Shankar, unnoudiya muyarchigal annithum KALAIKAL Than.....innum thotaraittum tamil........... tamil than mudhal, athuthan kadaisium........

ரேவதி said...

உண்மையாகவே படம் ரொம்ப பிரமிப்பாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் . நீங்களே இவலாவுக்கு எழுத்து இருக்கீங்களே . கண்டிப்பா பார்க்கிறேன் சங்கர் . உங்க புளோக் ரொம்ப அழகா இருக்கு .

arun said...

super

Unknown said...

Hi Sankar,

Unmaiyagave Ulagam alinthal ippady than irukkum yenbathai ungalin vimarchanamum pugaipadamum solli irukirathu. Neril parpathu pondra unarvugal. ithu pondra padaipugalai memmelum ungalin padaippugalil thodara yen iniya vaalthukkal.

by

Daisy

Vanmathiy said...

Hi shankar how r u dear ?
sorrypa ore busy commance elutha time kidaikkavillai but athulayum oru suyanalam marakkaama thinamum orumuraiyaavathu patithuviduven .
Intha pdam inimelthaan paarkkavendum but ippave ennudaiya friendskalukku ellaam kathai solla thodankivitten kaaranam unga vimarsanam super shankar .

சுகன்யா said...

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ ,? படம் பார்க்கவில்லை இருந்தாலும் உங்க விமர்சனம் சொல்கிறது அதன் பிரமிப்புகளை . அற்புதமான தகவல்கள் அனைத்தும் .


அன்புடன்
சுகன்யா

வெண்ணிலா said...

சங்கர் ஒருவேளை உண்மையாகவே இந்த உலகம் அழிய நேரிட்டால் இந்த படத்தை எடுத்த இயக்குனரின் நிலை என்னவாக இருக்கும் . ??? அருமையான பதிவு சங்கர் வாழ்த்துக்கள் .

சங்கர் said...

நண்பர்கள் ,

காயத்ரி !
பிரியா !
ஸ்வெதா !
சாந்தி !
அமுதா !
பருதி வீரன் !
மொக்கை !
சதி ஸ் !
ரேவதி !
அருண் !
டைஸி !
வான்மதி !
சுகன்யா !
வெண்ணிலா !

அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

அர்ச்சனா said...

சங்கர் உங்களின் அனைத்து பட்டப்புகலுமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது . அதிலும் உங்களின் இந்த திரை பார்வை இன்னும் எனக்கு படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது .

உங்களின் கரை தொடாத கனவுகள் தொடர்கதை எப்பொழுது வெளியாகிறது ?????????????????????????????????????. உங்களின் பதிழுக்காக காத்திருப்பேன் .

உங்கள் ,
அர்ச்சனா

முனைவர் தாமரை !!! said...

உங்களின் 'பனித்துளி நினைவுகளால்' நாங்கள் எப்போதும் அறிவு மழையில் நானைகிறோம் . அந்த அளவிற்கு எல்லாமே ரசிக்கத்தக்க விசயங்கள் . வாழ்த்துக்கள் சங்கர் உங்களுக்கும் ,உங்களின் பேணாவிற்கும் .

கவிதா said...

எழுதுவது என்பது எல்லோராலும் முடியும் . ஆனால் பிறர் ரசிக்கும் விசயங்களை தேர்ந்தெடுத்து எழுதுவது ஒருசிலரால் மட்டுமே முடியும் . அந்த வகையில் நீங்கள் எழுதும் எழுத்துகளுக்கு இன்றுமுதல் ஒரு சிறந்த ரசிகை .

கவிதா
துபாய்

எபி.எம்.சுந்தர் said...

எதை படிக்கிறத்துனே தெரியாலைங்க அந்த அளவிற்கு உங்களின் அனைத்து படைப்புகலுமே நல்லா இருக்கு .

Raja said...

Eppadiyo ippave ulakam alinthidum enkira payaththai undaakkinaankale . inimelaavathu panathai pathukkuvathai niruthuvaankalaanu paarppom .Really nice shankr

by by by by
Raja

என்ன கொடுமை ஸார் ? கண்ணன் . said...

நம்ம ஆளு பேச்சுலதான் சும்மா அதிருதுல அப்படினு டைலாக் பேசுறாங்க . ஆனா இங்கிலீஷ்காரன் எடுக்கிற படமே சும்மா அதுருதுல . என்னவோபா உலகம் கொஞ்சம் லேட்டா ஆழிஞ்சா சந்தோசம் ஏன்னா நான் இன்னும் பத்தாவது பாஸ் பண்ண பல வருடம் ஆகுமுணு எங்க அப்பா சொல்லிட்டாரே !

நான் பாஸ் ஆகுதர்க்கு முன்னாடி உலகம் அழிந்துவிட்டாள் வரும் எதற்காலம் என்னை தப்பாக பேசாதா அதுக்குதாங்க .

எப்படி ???????

உங்கள் ராட் மாதவ் said...

Deep & Excellent review Shankar....
alongwith phots...very nice to read & view...Congrats

Unknown said...

அன்பின் சங்கர்,

உங்கள் அறிமுகம் மகிழ்வினைத் தந்தது. உங்களால் நான் இன்று 2012 பார்க்கச் செல்லுகிறேன். நன்றி

Word Verification ஐத் தூக்குங்களேன்!

அன்புடன் புகாரி

PUTHUVAI THENRAL said...

ASATHALAANA VIMARSANAM .,PIRAMIPPAANA VAARTHAIKAL NALLA IRUKKU .

பார்வதி தேவி said...

சங்கர் உங்களின் தளம் என் மிகவும் கவர்ந்துவிட்டது குறிப்பாக நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் ஏதேனும் ஒரு ரசிக்கக்கூடிய விசயம் புதைந்து உள்ளது .

Aravinth said...

Naan Intha padaththi paarpathaaka illai . becoz naan patam paarththukontu irukkumpoluthu ulakam alunthivittathunaa . apram yaar unkalukku commance ippatiyellaam eluthuvaanga ????? Eppadi ???

செந்தில் !!! said...

இப்பத்தான் சங்கர் தெரியுது . உங்களின் திறமைகள் எனக்கு . அனைத்தும் அருமை . இதை சொல்வதில் எனக்கு பெருமை ...

Unknown said...

வணக்கம்,
Unga Pataippugal ellam super but adhu ellam patikkathan mutiyavillai.
Kadalil mulkiyavan
muthu edukkamala
veliye varuvaan..........

என்றும் ப்ரியமுடன் M.MEENU

sprajavel said...

padathai neeril paartha unarvu... makilchi.... (intha padam paarthuttuthan oorla niraiya peru ulagam aliya pokuthunu kathai viduranungala... kavanichikireen...)

duraian said...

இப்படி எல்லாம் எழுதுனா எப்படி !
எனக்கு முழுப் படம் பார்த்த திருப்தி இப்போ!

இனிமே எப்படி தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பேன் :)

MUTHU said...

திரைக்கு சென்று நேரில் படம் பார்த்த ஒரு உணர்வை , உங்களது விமர்சனமும் , புகைப்படங்களும் தந்தது .

புதுமை பெண் said...

சங்கர்,
உங்களின் தாளம் மிகவும் பயனுள்ள பல தகவல்களை எங்களுக்கு தருகிறது . அனைத்தும் அற்புதமான படைப்புகள் வாழ்த்துகள் !!!!!!!!!!!!!!! .

சங்கிலி கருப்பேன் said...

எவளவு விசயங்கள் !!!!!!!! அனைத்தும் படிக்க படிக்க இன்னும் ஆர்வத்தை அதிகாரிக்கிறது. அதிலும் இந்த விமர்சனம் மிகவும் அருமை .

சாந்தி .................... said...

அடடா !!!!
கொஞ்சம் தாமதமாகி விட்டது சங்கர் . இப்பத்தான் ஊரில் இருந்து வந்தேன் . வந்ததும் உங்க பத்திவைத்தான் படித்தேன் . இப்பொழுதெல்லாம் நான் பாடம் நடத்தும் பொழுது . மாணவர்களுக்கு நீங்க எழுதி உள்ள விசயங்களில் தினமும் ஏதாவது ஒன்றை சொல்கிறேன் . அனைத்து மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் . இன்று என்ன விசயம் இன்று எதைப் பற்றி சொல்ல போகிறேன் என்ற ஆர்வத்தில் இருக்காங்க . மிக்க நன்றி சங்கர் . உங்களின் எழுத்துகள் இத்தனை மாணவர்களை ரசிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக உள்ளது .

Thamiz Priyan said...

முடியல... அழுதுடுவேன் போல இருக்கு... நமக்கு நாமே திட்டமா தலைவா?... ;-))))

காக்க said...

நல்ல இருக்கு !!

வசூல் ராஜா said...

Nalla Commance Eluthina Enakku evalavu panam tharuvinga shankar . supera irukkunko !!

அசராத பயபுள்ள said...

அவங்கதான் ஒரு பக்கம் படத்தை எடுத்து எங்களை பயமுறுத்துராங்க . நீங்க வேற இப்ப விமர்சனம் எழுதி எங்களை ஒரே முடிவோட்டத்தான் எல்லோரும் கிளம்பி இருக்கீங்க போல . நடக்கட்டும் ////////////////////

உங்கள் ராட் மாதவ் said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Anonymous said...

it could be told, written /reviewed very well...to tempt the people to see the movie immdtly...nice narration...

Unknown said...

உங்க விமர்சனம் நல்ல இருக்கு... நானும் இந்த படத்துக்கு விமர்சனம் பண்ணி இருக்கேன் முடிஞ்சா படிக்கவும்...

param said...

சங்கர் உங்களின் பதிவுகள் அருமையாக உள்ளன. நன்றி. இன்னும் நான் படத்தை பார்க்கவில்லை.பார்த்து விட்டு பிறகு எழுதுகிறேன்.

Unknown said...

Hai shanker naan innum intha patam parkala but ithu unmayana vishayam jesus 2m varukaiyin pothu ithellam natakkalam bible ithumathiriyana vishayangal irukke example (Bible)Aatrhiyagam nova kalathula ulakathula ulla athna jevankalum alinthana novava, kutumbatharum oru sila mirukakankalai thavira mattathellam alinthu vittana....

பாலா said...

very good

Rajkumar said...

HI sangar i lick your website you are very loveable person
you create more idea in your website
my email is rajkingvgm@gmail.com