நூலகம் கவிதை !
ஏதோ ஒன்றை தொலைத்து விட்டதாய்
எண்ணும் பொழுதெல்லாம்
என்கால்கள் என்னை இட்டுச்செல்லும்
இடமேன்னவோ நூலகமாகத்தான் இருந்திருக்கிறது,
நுழையும் பொழுதே ஒருவித அமைதி
இடையிடையே மெல்ல கேட்கும் பாதணி சத்தம்,,,
நிசப்த்தத்தை கிழிக்கும் நாற்காலி அசைவுகள் ,,,
இப்படி மாறுபட்ட உலகத்துள் நுழையும் அனுபவம்.
அது என்னவோ தெரியவில்லை உட்காந்து இருக்கும்
அனைவர் முகத்தினிலும் அப்படிஒரு இறுக்கம்...
அடிக்கடி நினத்துப்பார்ப்பதுண்டு ....சொல்லிவைத்தாற்போல்
அப்படி என்னதான் படிக்கிறார்கள் அனைவரும்????
கண்களை சுழலவிட்டு ஒதுக்குப்புறமாய்
ஓர் மூலையில் இருந்த
ஒற்றை நாற்காலியை தேடியாமர்கிறேன் ....
கூடடைந்த பறவையாய்..
சற்று வசதியாய் பின்சரிந்து
உட்கார்ந்து கண்ணை மூடி
நூல்களின் நெடியுடன் கூடிய மூச்சொன்றை
உள் இழுத்து விட்டபோது
உள்ளசுகம் என்ன சொல்ல?
ஆனாலும் கையில் நூலின்றி
ஆறுதலாய் உட்கார்ந்து இருக்கும் என்னை
நூதனமாய் பார்த்தவாறே செல்பவர்களுக்கு
எங்கே தெரியப்போகிறது
நான் தாய்மடி தேடிவந்த கன்று என்று.....
- கவிஞர் பனித்துளிசங்கர்.
Tweet |
2 மறுமொழிகள் to வாசிப்பு பசி - நூல் கவிதைகள் - கவிஞர் பனித்துளி சங்கர் - Panithulishankar Vaasippu tamil kavithai sms :
super.
Really very super.....
Post a Comment