Indru oru thagaval - Panithuli shankar - kamarajar - சுவாரசியமான சுவையான நிகழ்வுகள் - இன்று ஒரு தகவல்கள்







‘‘புள்ளைங்க படிக்க வழியைக் காணோம்....

நியூஸ் ரீல் காட்டறாங்களாம்!’’ 

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஓர் அதிகாரி அவரிடம், 'குந்தா அணைக்கட்டை மலையைக் குடைந்து அருமையாகக் கட்டியிருக்கீங்க! இதை நமது வாயால் சொல்வதை விட, திரைப்படமா எடுத்துக் காண்பித்தால் பாமர மக்களுக்குக்கூட நன்றாகப் புரியும்!' என்றார்.

அதற்கு காமராஜர் 'சரி, அதற்கு எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார்.அந்த அதிகாரி, 'ஏறக்குறைய மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும்' என்றார்.

காமராஜரோ, 'அடப்பாவிகளா...மூன்று லட்சமா? இந்த மூன்று லட்சம் ரூபாய் இருந்தால், நான் இன்னும் பத்து ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி விடுவேன். புள்ளைங்க படிக்க வழியைக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி அரசாங்கம் செய்ததை எனது சாதனைனு வெளிச்சம் போட்டுக் காட்டப் பாக்குறியா...போ...போ...'என்று மறுத்து விட்டார்.





1 மறுமொழிகள்:

RK GRAPHIC said...

VERY NICE MAN