பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -நிழல்கள் - நினைவுகள் - Tamil Kadhal akavithaigal 09.12.2011


ன் வார்த்தைகளை விட 
உன் மௌனத்தை அதிகம் நேசிக்கிறேன் . 
உன் புன்னகையை விட 
உன் கோபத்தை அதிகம் சுவாசிக்கிறேன் . 
என்னை கொலை செய்ய
 உந்தன் ஒரு சொட்டுக் கண்ணீர் போதும் .
என்னக்கு உயிர் கொடுக்க 
உந்தன் சில நொடி புன்னகை போதும் .
உன்னை எண்ணிக்கொண்டே
 தனிமையில் நடப்பதும் 
உன் நினைவுகள் சுமந்துகொண்டே
 கனவினில் மிதப்பதும்  என்னில் 
நிழலெனத் தொடர்கிறது தினம் தினம்  !..


                                                                       
                                                                                     -பனித்துளி சங்கர் 
                                                     

20 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -நிழல்கள் - நினைவுகள் - Tamil Kadhal akavithaigal 09.12.2011 :

மகேந்திரன் said...

இதயங்களின் புரிதல் நிமித்தம்
அழகிய கவிதை நண்பரே...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Subramanian said...

உணர்வுகள் ததும்பி வழிகிறது. அருமை.

முத்தரசு said...

காதல் கவிதை - நெஞ்சை பிழிந்தது

குடிமகன் said...

காதல் கவிதை அருமையான வரிகளில்! நன்று!

அனுஷ்யா said...

கொன்னுட்டீக ...

என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

ஹேமா said...

அழகான கவிதை சங்கர் !

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

பால கணேஷ் said...

என்றும் பசுமையானது காதல்! உங்கள் கவிதையின் உணர்வுகள் என்னையும் பற்றிக் கொண்டன. வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றி சங்கர் நண்பா!

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டும் படைப்பு
மயிலிறகென மனம் வருடிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

SelvamJilla said...

you kavithai lines are simply super. i written some tamil kavithai in my blog. please check and give ur comments

http://alanselvam.blogspot.com/

ஸ்ரீராம். said...

அருமை ஷங்கர்.

Prem S said...

//என்னை கொலை செய்ய உந்தன் ஒரு சொட்டு கண்ணீர போதும்// @ அருமையான வரிகள்

நகரம் said...

அத்தனையும் அருமை

என்றும் இனியவன் said...

காலையில் இருந்து மாலை வரை
நானும் அவளைக் காண்கின்றேன்!
காதலை அவிளிடம் வெளிப்படுத்த
வார்த்தை இன்றித் தவிக்கின்றேன்!
அவளும் சென்று மறையும் வரை
அசையாமல் நான் நிற்கின்றேன்!
அவளோ சென்ற பின்னாலே
வார்த்தை வந்து தவிக்கின்றேன்!

எத்தனை நாள்கள் இப்படியே
நித்தமும் நினைவிலே வாழுவதோ
அக்கரைச் சூரியன் மறையும் நேரம்
சக்கரை கூடப் பிடிக்கலையே!
எப்படியும் இன்று சொல்வதென
மனதைக் கல்லாய் மாற்றிக்கொண்டு
அவளைத் தனியாய் அழைத்தேனே
அவள் அருகில் நின்று நெளிந்தேனே!

என்ன சொல்லென்று முனுமுனுத்தாள்
நாளைக்கு என்று நான் நகர்ந்தேன்!
சட்டென எந்தன் கை பிடித்து -காதலா?
என்று எனைப் பார்த்தாள்
அதுதான் அன்பே என்றுரைத்தால்
அடிப்பாளோ அனைப்பாளோ
தெரியலயே?
இப்படியும் ஒரு பேரழகை
இறைவா ஏன்தான் நீ படைத்தாய்?
அவள் பிடித்த என் கரம் அதை
விலக்கிக்கொண்டு
ஓட ஒரு கால் எடுத்து வைத்து
உண்மைதான் என்றேன்
தைரியமாய்!
தலைதனைக் குனிந்தாள்
தாமரையாய்
கலங்கிய கண்ணீர்
தரையில் விழ
தாங்கிப் பிடித்தேன்
அவள் தலையை!
ஒரு வருடமாய் என்னிடம்
சொல்லிட முயன்றேன்
முடியலை என்றழுதாள்.

என்றும் இனியவன் said...

உங்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன் தோழரே. வருகைக்கு நன்றி.

aalunga said...

ஆகா...

அருமை அருமை..
அதிலும் அருமை

//என்னை கொலை செய்ய
உந்தன் ஒரு சொட்டு கண்ணீர போதும்
எனக்கு உயிர் கொடுக்க
உந்தன் சில நொடி புன்னகை போதும்//

RMY பாட்சா said...

"உன்னை என்னிக்கொண்டே
தனிமையில் நடப்பதும்
உன் நினைவுகள் சுமத்து கொண்டே
கனவில் மிதப்பதும்"அருமையான வரிகள்.அன்னிய மண்னில் எங்கள் வாழ்க்கையில் தினம் தினம் நடப்பது இது.அருமை நண்பரே அருமை.

dhakshana radha said...

மன மார்ந்த நன்றி

dhakshana radha said...

அருமையான வரி