இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigalடலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..!
உடல் விற்றேன் மனந்தவளிடம்
இதயம் விற்றேன் என்னை உணர்ந்தளிடம்.....!

ன் அறிமுகத்தின்
முதல் நாள் மீண்டும் ஒரு குழந்தையாய்
இந்த உலகம் மறக்க செய்தாய்....
உந்தன் சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
இன்னும் சிறிது நீளாத
இந்த கணங்கள் என்ற ஏக்கம்
இப்போதும் இதயத்தில் பசுமையாய் !

நீண்ட உரையாடல்களுக்கு இடையினில்
உன் வார்த்தைகள் இல்லாத மவுனத்தில்
பல முறை
அர்த்தம் தேடி தொலைந்து போயிருக்கிறேன் .!

ன் மடி சாய்ந்து உறங்கிப்போன
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
என் வாழ்வில் நான் பெற்ற
மிகப்பெரிய பொக்கிஷம் என்றாகிப்போனது . !

ன் தனிமைகளின் ஒவ்வொரு
இரவுகளும் உன் ஞாபகங்களின்
எல்லைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறது . !

சிறு எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!

ன்னுடன் உரையாடி
இந்த உலகம் மறந்த நிமிடங்கள் .
இப்பொழுதெல்லாம் உன் நினைவுகள் சுமந்து
இறந்துபோகத் துடிக்கிறது .!

காதல் செய்வதும்
பிரிந்து அழுவதும்
வாடிக்கையாகிப் போன இந்த உலகத்தில்
நமது கண்ணீரும் இன்னும் சில நாட்களே !.....

-பனித்துளி சங்கர்.

27 மறுமொழிகள் to இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigal :

ரெவெரி said...

காதல் வரிகள்..முத்தாய்ப்பாய் திடம்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை அன்பா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

மகாபாரதத்தில் மங்காத்தா

அம்பாளடியாள் said...

வலி சுமந்து நகரும் அழகிய காதல்க் கவிதை .வாழ்த்துக்கள் சகோதரரே .
மிக்க நன்றி பகிர்வுக்கு ..................

Powder Star - Dr. ஐடியாமணி said...

று எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!//////////////

அருமையான வரிகள் நண்பா! ரசனை மிக்க கவிதை! வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வாழ்க்கையில் காதல்
காதலோடு தனிமை
தனிமையில் கவிதை
கவிதையோடு வாழ்க்கை...

அருமை நண்பரே..

வைரை சதிஷ் said...

அருமையான காதல் வரிகள்

Maheswaran.M said...

ரணமாகிப் போன என் நெஞ்சத்துக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்ல வந்த வரிகள்...
மகேஷ் - நீரோடை கவிதை

MUTHARASU said...

கனத்த இதயத்திற்கு
காயம் ஆற்றும்
கச்சிதமான வரிகள்.

கவிதை அருமை....

FOOD said...

//உடலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..! //
ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம்.

விக்கியுலகம் said...

மாப்ள அருமையான கவிதை!

chandru said...

சூப்பர்
மனதுக்கு இதமாக இருந்தது

ஷர்மி said...

அழகான வரிகள். மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்துக்கொண்டேன்...

இராஜராஜேஸ்வரி said...

இதயத்தின் ஓசைகள் ரசிக்கவைக்கின்றன்.

தக்குடு said...

துபாய் 'ஹலோ FM' 89.5-ல அடிக்கடி உங்க கவிதை வருது போலருக்கே!!! வாழ்த்துக்கள் சார்!! :)

Srikar said...

அனுபவித்து எழுதி இருகிறீர்கள்,
காதல் வந்தால் கவிதை வரும், கவிதை வந்தால் காதல் வரும் நண்பரே...,
வாழ்க கவி... :)

கலைநிலா said...

காதல் வரிகள் ,மனதை காதல் செய்கிறது ,

தமிழ் செல்வி said...

உங்கள் காதல் வரிகள் உங்களுடைய காதலை எங்களுக்கு சொல்ல்கிறது.
கொடுத்து வைத்தவள் என் தோழி.
அன்புடன்
தமிழ்

சித்திரவீதிக்காரன் said...

தங்களின் காதல் கவிதைகள் வாசிக்கும் போது பொறாமையாய் இருக்கிறது. மதுரை மீதும், இயற்கை மீதும், புத்தகங்களின் மீதும் எப்போதும் காதல் கொண்டிருப்பதால் தனியாக ஒரு பெண்ணின் மீது எனக்கு காதல் வருவதில்லை. அருமையான கவிதைகள். நன்றி.
-சித்திரவீதிக்காரன்.

ashok said...

Nanbane ithanai Naatkal Thangalin Kavidhaigali Naan Paarkka thavariyatharkku Migavum Varundhugirean Thangalai pondra Kavinjargal Iruppathalthan Tamizhnaattil Innum Thamiz Azhindhu Pogamal Irukkindradhu Ungal Kavidhaigalai Naan Min Anjal Vazhiyaga Pera Virumbugirean! Mudiyuma..........

ashok said...

Nanbane ithanai Naatkal Thangalin Kavidhaigali Naan Paarkka thavariyatharkku Migavum Varundhugirean Thangalai pondra Kavinjargal Iruppathalthan Tamizhnaattil Innum Thamiz Azhindhu Pogamal Irukkindradhu Ungal Kavidhaigalai Naan Min Anjal Vazhiyaga Pera Virumbugirean! Mudiyuma..........

rdy said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://rdyislamicbayan.blogspot.com/ ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.rdyislamicbayan.blogspot.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

martin said...

anbulla nabarukku en peyar martin ungaludaiya kavithai varigal kangalai kalanga vaikirathu kathalargalin puthiya kaviyam umathu padaippugal.............

Sharm Viki said...

Arumayana kavithai thogupu.

ARCHANA RITHI said...

ungal kavithaigal padikkum pothu ethayathiku ethamai erukirathu.