இதுநாள் வரை என்னைப் பற்றி மட்டுமே
கிறுக்கிய பேனா இனி வரும் நாளெல்லாம்
நம்மப் பற்றியே கிறுக்கும்
ஒவ்வொரு நாட்களையும்,
ஒவ்வொரு நிமிடங்களையும்
புதிதாய் எனக்கு அறிமுகம் செய்தது
உந்தன் காதல்தான்....
கற்பனைகள் கற்றுத் தராதக் கனவுகளை
எல்லாம் நீ என்னைக் கடந்து
செல்கையில் மட்டுமே உணர்ந்துகொள்கிறேன்....
ஒரு நடைபழகும் குழந்தையாய்
துணைக்கு எப்பொழுதும்
உன் விரல் பிடித்து நடக்க ஆசை.....
ஒரு காகிதத்திற்குள் மறைத்துவைத்த
மிட்டாய் ஒன்றை ஆவேசமாய்
பிரித்துப் பார்க்கும் குழந்தை ஒன்றின்
எதிர்பார்ப்புகளுடன் ஒன்றிப்போகிறது
உனக்கான என் காத்திருப்புகள்.....
சின்னஞ் சிறு வயதில்
கருப்பு வண்ணம் பூசிய
சிலேடுகளில் எல்லாம் முதல் வார்த்தை
அம்மா என்றுக் கிறுக்கி ரசித்த ஞாபகங்கள்
இப்பொழுதும் நீள்கிறது
உனது பெயரை எழுதும்பொழுது........
உன்னைப் பற்றிய இந்த நினைவுகள்
நீண்டுபோகட்டும்....
நம்மைப் பற்றிய கனவுகள்
அதில் தினம் தினம் புதிதாய் மலரட்டும் .
தென்றலின் சுவாசம் குடித்து
இந்த தேகம் மட்டும்தான் வளர்க்கிறது...
ஆனால் உந்தன் நேசம் குடித்து மட்டும்தான்
நான் இப்பொழுதும் உயிர் வாழ்கிறேன்.....
நரைத்துப் போயினும் உன்னை ரசித்திருப்பேன்
இந்த உயிர் மறைந்து போயினும்
உன் நினைவுகள் சுமந்திருப்பேன்...!!
❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
18 மறுமொழிகள் to தொடரும் ஞாபகம் (Thodarum Gnapakam ) - பனித்துளிசங்கர் கவிதைகள் 23 May 2011 :
வழக்கம் போல் கவிதை அருமை அந்நியன்....
குழந்தை ஆவேசமாய் மிட்டாய்க் காகிதத்தை பிரிப்பது போன்ற உணர்வுகள் ....
நல்ல கற்பனையுடன் கவிதை.
பாராட்டுக்கள்
மனதை மயிலிறகால் வருடுவது என்று சொல்வார்களே, அப்படி இருக்கிறது உங்கள் அழகான கவிதை!
very nice. :-)
உந்தன் நேசம் குடித்து மட்டும்தான்
நான் இப்பொழுதும் உயிர்வாழ்கிறேன்.
இந்த உயிர் மறைந்து போயினும்
உந்தன் நினைவுகள் சுமந்திருப்பேன்....
சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். உணர்வபூர்வமான வரிகள் கவிதையில். உயிரை வருடும் இனிய கவிதை.
நெஞ்சை வருடும் மிகவும் அருமையான கவிதை வரிகள் நண்பா..!!!
//ஒரு நடை பழகும் குழந்தையாய்
துணைக்கு எப்பொழுதும்
உன் விரல் பிடித்து நட்க்க ஆசை..,//
என்ன சுகம்,என்ன சுகம்!
அருமை..
//இந்த உயிர் மறைந்து போயினும்
உன் நினைவுகள் சுமந்திருப்பேன்//
இளமைக் காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்..
நன்றி
அன்புடன்,
சிவ. சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com
இனிமை,அருமை
ரசித்த கவிதை!
எட்டாவது வோட்டு என்னதில்லே
:)
கவிதை அருமை.
கவிஞரே கவிதை சூப்பர்
மிகவும் ரசித்த பிடித்த கவிதை கள்...
அனுபவபூர்வமான விரகதாப வரிகள் போல இருக்கே நண்பா :)
இந்த விரல் பிடித்து நடக்கும் ஆசை அநேகமாக எல்லா பெண்களுக்குமே உண்டு என நினைக்கிறேன் :)
அப்புறம்.. சிலேட்டுல எழுதி பாக்குறதும் உண்மை உண்மை! :)
மிக அழகிய உணர்வுகள்!
http://karadipommai.blogspot.com/
வணக்கம்
முதற்கண், நான முதியவனாக
மட்டுமல்ல வலைத் துறைக்கே
புதியவனாக வந்தவன் என்னைப்
பின்தொடர--உரியவனா-?
நன்றி
கவிதையைப் படிக்கும கன்னிப்
பெண் காணாமலே காதல் கொள்வாள்
புலவர் சா இராமாநுசம்
நினைவுகள்தான்
நிமிடங்களை
நகர்த்துகின்றன
எண்ணங்கள்தான்
எல்லா ஜீவனையும்
வழி நடத்துகிறது
இனிய சிந்தனைகள்
வாழ்த்துக்கள்
Post a Comment