சிரிப்பு விற்பவன் - Panithuli shankar tamil kadi jokes - நகைச்சுவை -ஜோக்ஸ்- கடி -காமெடி


னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நகைச்சுவை பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதன் பிறர் சொல்லி செய்யாத செயல்களில் தினமும் அரை மணி நேரம் அவனின் சிரிப்பும் இருக்கவேண்டும் என்று ஒரு புதுமையான ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. இது வரை உலகத்தில் நிகழாத புதுமையாய் சிரிப்பதற்கென்றே ஒரு மருத்துவத் துறையை அமெரிக்காவில் துவங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள். 

ரு மனிதன் தினமும் சராசரி அரை மணி நேரம் சிரித்து மகிழ்வதால் அவனது உடலில் ஏற்படக்கூடிய எழுபது சதவீத நோய்களுக்கு இந்த அரை மணி நேர சிரிப்பே சிறந்த தடுப்பு மருந்தா மாறிவிடும் என்று அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எதோ ஒரு ஆய்வில் சொல்லக் கூடிய முடிவிற்காக இல்லை என்றாலும் நாம் தினமும் சில நிமிடங்கள் சிரிக்கும் நேரங்களில் நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை நாமே உணரலாம். 

வ்வளவுதான் நாகரிகத்தின் உச்சத்திற்கும், சுத்தத்தின் உயரத்திற்கும் அறிவியல் வளர்ச்சி நம்மை அழைத்து சென்றாலும் உணர்வுகளின் உற்சாகத்திற்கு மகிழ்ச்சி என்ற ஒன்றைத் தவிர அதற்கு நிகரான மருந்தொன்று இந்த உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று ஆராய்ச்சிகளின் ஆய்வுக் குழு கூறுகிறது. சரி நண்பர்களே..!! இந்த ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும் 
ன்னால் தினமும் நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாவிட்டாலும் வாரத்தில் ஒரு பதிவிலேனும் சில நகைச்சுவை துனுக்களுடன் உங்களுடன் பகிர்ந்து மகிழ்வதில் ஒரு மாபெரும் சந்தோசம். இதோ இன்றைய சில நகைச்சுவை பகிர்வுகள். இயன்றவரை நகைச்சுவைகளை எங்கு வாசித்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நகைச்சுவைகள் என்பது சிரிப்பதற்காக மட்டுமேத் தவிர ஆராய்ச்சி செய்வதற்காக இல்லை. 

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது 
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் 
அது திறந்து கொள்கிறது 
வாழ்வின்மீது இயற்கை தெளித்த 
வாசனைத் தைலம் சிரிப்பு 
எந்த உதடும் பேசத் தெரிந்த 
சர்வதேச மொழி சிரிப்பு.
என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்தில் வருகின்றன .

யன்ற வரை 
இதழ்கள் பூத்திருங்கள் 
உங்களின் இதயங்கள் சிறகுகலாகட்டும் . 
நீங்கள் சிரிக்க நேர்ந்தால் 
அதில் இன்னும் பல
இதழ்களின் மொட்டுக்கள் மலரக் கூடும் .
புன்னகையும் பூமியில் சுற்றித் தெரியும் 
தென்றலும் ஒன்றுதான் 
நாம் சுவாசிக்கும் தென்றலும் , 
நம்மை சுவாசிக்கும் சிரிப்பும் 
எப்போதும் இந்த உயிர் நீட்டிக்கும் 
-பனித்துளி சங்கர் 
* * * * * * *
புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!
* * * * * * *
“டேம்ல வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே! ஏன்?” “தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?” 
* * * * * * *
சிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்? மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
* * * * * * *
“அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே?” “அதான் கொக்கு நறநற கோழி நறநற…ன்னு பாடுறாரே!”
* * * * * * *
"எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"
"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்."
* * * * * * *
“தேங்காயிலும் தண்ணீர் இருக்கு……..பூமியிலும் தண்ணீர் இருக்கு……” “அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா……. இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா…….இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்…."அரசியல்வாதியை மாப்பிள்ளையாக்கியது தப்பாப் போச்சு!""ஏன்?""கல்யாணத்தில் பொண்ணு போட்ட மாலையைக் கழற்றி கூட்டத்தில் வீசுறாரு!"
* * * * * * *
ண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது.

ஒரு உறுப்பினர், “பேருந்தில், யாகாவாராயினும் நாகாக்க என்று எழுதப்பட்டிருக்கிறதே, யாருடைய நாக்கு காக்கப்பட வேண்டும்? பேருந்தின் நடத்துனரா? ஓட்டுனரா? இல்லை பயணிகளா?” என்று முதலமைச்சரான அண்ணாவைப் பார்த்துக் கேட்டார்.

உடனே அண்ணா, “ யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள், யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவருக்குமே எழுதப்பட்டுள்ளது” என்றார்.
* * * * * * *
நேசத்துடன் 
-பனித்துளி சங்கர்.
* * * * * * *

24 மறுமொழிகள் to சிரிப்பு விற்பவன் - Panithuli shankar tamil kadi jokes - நகைச்சுவை -ஜோக்ஸ்- கடி -காமெடி :

Abdul Basith said...

ஹா..ஹா..ஹா.. முதல் ஜோக் மற்ற எல்லாவற்றையும் விட சூப்பர்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஜோக்ஸ் யாவும் அருமையாக ரசிக்கும்படி இருந்தன. நன்றி.vgk

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அந்த ஆசிரியர் மாணவர் ஜோக் பிரமாதம்..

பாலா said...

நண்பரே சிரிப்பின் மகத்துவத்தை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். அதனால்தான் எனக்கு உடல் நலக்குறைவே வரவில்லையோ?

ஜோக்குகள் அத்தனையும் அருமை. மனைவி ஜோக் இரண்டு முறை பதிவாகி இருக்கிறது. கவனிக்கவும். நன்றி.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//Abdul Basith said...
ஹா..ஹா..ஹா.. முதல் ஜோக் மற்ற எல்லாவற்றையும் விட சூப்பர்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

கருத்துக்கு நன்றி நண்பரே.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...
ஜோக்ஸ் யாவும் அருமையாக ரசிக்கும்படி இருந்தன. நன்றி.vgk//


தங்களது கருத்துக்கு நன்றிங்க ஐயா.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அந்த ஆசிரியர் மாணவர் ஜோக் பிரமாதம்..//

கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பரே.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//பாலா said...
நண்பரே சிரிப்பின் மகத்துவத்தை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். அதனால்தான் எனக்கு உடல் நலக்குறைவே வரவில்லையோ?

ஜோக்குகள் அத்தனையும் அருமை. மனைவி ஜோக் இரண்டு முறை பதிவாகி இருக்கிறது. கவனிக்கவும். நன்றி.//

தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி நண்பரே..!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்கல் .

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
கலக்கல்.// கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!

Lakshmi said...

எல்லா ஜோக்குமே நல்லா இருக்கு

வைரை சதிஷ் said...

அணைத்தும் அருமை

M.R said...

“தேங்காயிலும் தண்ணீர் இருக்கு……..பூமியிலும் தண்ணீர் இருக்கு……” “அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா……. இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா…

அருமையான வரிகள்

ரசித்தேன் நண்பரே

kaleelsms.com said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கள் மீதும் தங்களின் சுற்றார் மீதும்
ஒப்பற்ற ஓற்றையின் வற்றாதா கருனை உண்டாவதாக
தமிழ் வலைப்பூவில் தங்களின் இணையம் தனியிடத்தை
பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

அது சரி எப்படி என் வலைப்பூவிற்க்கு வந்தீர்கள்
ஆச்சரியப்பட்டுப் போனேன் வாசகர்களும் உங்கள்
வலைப்பூவில் எலுத அனுமதியுங்கள் நானும்
எனக்கு தெரிந்ததை எலுதுவேனே

இந்தியாவில் இருந்தால் போன் செய்யுங்கள்
9841306148.kaleelsms@gmail.com

மாய உலகம் said...

ஜோக்ஸ் அனைத்தும் அருமை...சிரித்துக்கொண்டே இருந்தேன் வாழ்த்துக்கள் நண்பரே .. நன்றி

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

RAMVI said...

அனைத்தையும் மிக ரசித்து படித்தேன்.
கடைசியாக கொடுத்திருப்பதில் அண்ணாவின் பதில் அருமை.

கும்மாச்சி said...

எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி.

போளூர் தயாநிதி said...

நல்ல சிரிப்பு துணுக்குகள் அதாவது நாம் சிரிக்கிறபோது உயிர்வளி (ஆக்சிஜன் )மிகையாக நமது நுரையீரலுக்கு செல்கிறது அதனால் தூய்மையான அரத்தம் உண்டாக்க நல்ல வாய்ப்பாக மாறுகிறது எனவேதான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என நம் முன்னோர் கூறி சென்றனர் பாராட்டுகள்

Rajeswaran said...

நல்ல சிரிப்பு வெடி நண்பரே! தொடரட்டும் உங்கள் சேவை.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரரே அருமையான நகைச்சுவையைப் பகிர்ந்துள்ளீர்கள் .மிக்க நன்றி இப் பகிர்வுக்கும் என் தளத்தில்
இணைந்துகொண்டு பாராட்டியமைக்கும்.
வாழ்த்துக்கள்
நீங்கள் மென்மேலும் வளம்பெற .....................

ஆளுங்க (AALUNGA) said...

நகைச்சுவை அனைத்தும் மனதில் இனிய சுவையை ஊட்டுகிறன....

மிகவும் அருமை!

Iniyan said...

arputham thotarattum unkal pani

ronald said...

அணைத்தும் அருமை...