அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
* * * * *
ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும்.
சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.
* * * * *
கண்ணுல மண்ணு பட்டாலும் சரி பொண்ணு பட்டாலும் சரி தண்ணி வரது நிச்சயம் !!!!!!!
இப்படிக்கு
(கூலிங் கிளாஸ் போட்டு சைட் அடிப்போர் சங்கம்)
* * * * *
பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: விமலா டா...
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
* * * * *
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்...
நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
* * * * *
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
* * * * *
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்
நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
* * * * *
குட்நைட்!இவர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்...
விஜய் : "ண்ணா.. குட்நைட்ங்ணா!"
அஜீத் : "எல குட்நைட்ல!"
சிம்பு : "மச்சி... குட்நைட் மச்சி!"
சூர்யா : "ஹாய் மாலினி குட்நைட்!"
சசிகுமார் : "மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா!"
* * * * *
பிசினஸ் ட்ரிக்ஸ்.-
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்.
ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).
சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)
இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.
அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க.
டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ்.
* * * * *
* * * * *
* * * * *
* * * * *
| Tweet |



15 மறுமொழிகள் to நகைச்சுவைகள் - ஜோக்ஸ் - சிரிப்புகள்..! - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu :
ஹ ஹ கூலிங் கிளாஸ் காமெடி சூப்பர்...அதோட மழை வருமா காமெடி கலக்கல்
செம ஜோக்ஸ் :-))))
எல்லாமே அருமை. அதுவும் வெள்ளை மாளிகை சூப்பர்
அனைத்தும் அருமையான ஜோக்ஸ் .. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..
எல்லாவற்றையும் மறந்து சிரித்தாயிற்று....
தொடருங்கள்...
அருமையான நகைச்சுவைகள் .
பகிர்வுக்கு நன்றி
எல்லாமே அருமை...கலக்குங்க..சகல கலா வல்லவரே...
Suvai!
பன்னிங்க தான் பக்கம் பக்கமா எழுதும்.
என்ன பண்ணிகுட்டியை கேலி பண்ரீங்களா?
எல்லா ஜோக்குகளும் அருமை. குறிப்பாக டார்லிங், போலீஸ் மிக அருமை. நினைத்து நினைத்து சிரிக்கிறேன்.
இந்திய அரசியல் பிஸினாஸ் தான் என்பதை நகைச்சுவையில் புகுத்துள்ளீர்கள்..
ரஜினி விசிறி ஜோக் வாய்விட்டு சிரிக்கவைத்தது..... தொடருங்கள் தொடர்கிறேன்
வாழ்த்துக்கள்
mm supper ehavathu puthusa try pannalamey sir
Business Trick Joke Nice
Business Trick Joke Nice
business tricks super and
rain joke excellent....,
Post a Comment