காசு கொடு கல்வி - பனித்துளிசங்கர் கவிதைகள் -Education poems for children 25 June 2011

 ங்கள் கைகளில் சுமைகளைத் தந்து
தொழிலாளியாக மாற்றத் துடிக்கும்
இந்த சமுதாயம் .
எங்களுக்கு கல்வி தந்து
அறிவாளிகளாக மாற்ற மறுப்பதேன் .!?

கல்வி என்பது
பணம் உள்ளவர்களுக்காகவும்,
பதவி உள்ளவர்களுக்காகவும் மட்டும்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளதோ.. !?

உங்களின் சுயநலங்களில்
எங்களின் எதிர்காலம்
அடகு வைக்கப்பட்டிருக்கிறது .

எங்களின் கல்வியைத்தான்
உங்களால் தடை செய்ய முடியுமேத் தவிர
எங்களின் சுய சிந்தனைகளை அல்ல !

எங்களின் உணவுகளும் ,
உடமைகளும்தான் உங்களின் கைகளிலே
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறதேத் தவிர
எங்களின் உணர்வுகள் அல்ல .!

எங்களின் வளர்ச்சிகளில்தான்
உங்களால் கடிவாளங்களை
பொறுத்தமுடியுமேத் தவிர
எங்களின் முயற்சிகளில் அல்ல !

பிறந்தோம் இறந்தோம்
என்பதுதான் உங்களின் பழமொழி
நாங்கள் இறந்தும் மீண்டும் பிறப்போம்
என்பது எங்களின் புதுமொழி !

நாங்கள் கனவு காண்பதற்காக
பிறந்தவர்கள் அல்ல .
இந்த உலகை கட்டியாளப் பிறந்தவர்கள் !

காசு இல்லாதவன்
கல்வி கற்கக் கூடாது என்று
எவன் சொன்னது !?


சிந்தும் வியர்வை முந்தும்
சிதறும் புன்னகை பிந்தும்
இந்த பூமிப் பந்தும் ஒரு நாள்
எங்கள் வளர்ச்சி கண்டு சுற்றாமல் நிற்கும் .!

இன்று எங்களின் பிஞ்சுக் கைகளில்
நீங்கள் சுமை நிரப்பலாம் .
நாளை இந்த தேசத்தை
உயர்த்தி பிடிக்கபோவது
இன்று நீங்கள் தர மறுக்கும்
எங்களின் கல்விதான் என்பதை
மறக்காதீர்கள் !!....
             
                                        - பனித்துளிசங்கர்


11 மறுமொழிகள் to காசு கொடு கல்வி - பனித்துளிசங்கர் கவிதைகள் -Education poems for children 25 June 2011 :

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்றைய கல்வியின் நிலை கவிதையில் தெரிகிறது..

ஜீ... said...

Very nice!

சத்யன் said...

தோழா ! நிறைய எழுத்துப்பிழை உள்ளது . திருத்தம் செய்யுங்கள் .

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

/////////சத்யன் said...
தோழா ! நிறைய எழுத்துப்பிழை உள்ளது . திருத்தம் செய்யுங்கள் .

/////////////


வாங்க நண்பரே நீங்களும் பதிவை வாசிக்காமல்தான் மறுமொழிகள் போடுவீர்கள் என்று எண்ணினேன் . புரிதலுக்கு நன்றி !

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்றைய கல்வியின் நிலை கவிதையில் தெரிகிறது..////////

தலைப்பில் தெரிகிறது என்று சொல்லுங்கள் நண்பரே . பதிவை இயன்றால் வாசித்து விட்டு மறுமொழி இடுங்கள் . மறுமொழியின் எண்ணிக்கைகளுக்காக போடவேண்டாம் .

Lakshmi said...

காசு இருந்தால் தான் கல்வியா? கொடுமை. இந்த நிலை மாற வேண்டும்.

மாலதி said...

நல்ல கவிதை.

சே.குமார் said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

காதல் தவிர்த்து ஒரு கவிதை இந்த முறை, நல்லாருக்கே மாப்பிளே

நெல்லி. மூர்த்தி said...

அவர் செய்தார், இவர் செய்தார் என்றிடாது நம் முதல்வர்கள் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களின் நலனில் அக்கறைக் கொண்டு மேல்நிலைக் கல்வி வரை தரமான சமச்சீர்க் கல்வி தரவேண்டும். அற்புதமானக் கவிதை!