சிறந்த தமிழ் நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி சிரிப்பு மொக்கை கடி :Panithuli shankar tamil kadi jokes nagaichuvai sardar jokes comedy tamil film jokes kadi jokes english jokes tamil jokes video sirippu varuthu +18 (05+04+2011)

னைவருக்கும் வணக்கம். இன்றைய அவசரமான உலகத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் பொழுதுபோக்கு என்பதே மிகவும் அரிதான ஒரு விஷயமாகிப்போனது. மருத்துவர்களின் கணிப்பின்படி  சாதாரணமாக தினமும் தன் வாழ்க்கையை கழிக்கும் மனிதர்களை விட தினமும் நகைச்சுவை உணர்வுடன் பேசி அதிகம் சிரிப்பவர்களே நோய்கள் எதுவும் இன்றி நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள் . இதற்காக எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருந்து       பார்ப்பவர்கள் பயத்தில் கற்களை கொண்டு எறிந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பில்லை. (ஹி... ஹி... ஹி...) ஆகவே அளவாக சிரிப்போம்..!! நிறைவாக வாழ்வோம்..!! என்ற எண்ணத்தில் பின் வரும் நகைச்சுவை துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நெடுந்தூரம் ரயில் பயணம் மேற்கொண்ட சர்தாருக்கு தூக்கம் கண்னை கட்டியது. இருந்தாலும் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட கூடாதென கஷ்டப்பட்டு விழித்திருந்தார்.அவரால் விழித்திருக்க முடியவில்லை சட்டென அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன் படி தன்னுடன் பயணம் செய்யும் சக பயனியிடம் தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டால் இருபது ரூபாய் தருவதாகச் சொன்னார். அவரும் சரியென ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டார்.

சர்தார் நிம்மதியாக தூங்கியவுடன். பணம் வாங்கியவருக்கு தாம் சர்தாரிடம் இருபது ரூபாய் வாங்கியது அதிகமோ என எண்ணி... அதிகப்படியான ரூபாய்க்கு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர் தூங்கிக் கொண்டிருக்கும் சர்தாருக்கு முடிவெட்டி சவரம் செய்துவிட்டார்.
பின்னர் சர்தார் சொன்ன இடம் வந்ததும் அவர் சர்தாரை எழுப்பி இறக்கிவிட்டார். நேராக வீட்டுக்கு சென்ற சர்தார் குளித்து முடித்து விட்டு கண்ணாடியை பார்த்த சர்தார் அதிர்ச்சி அடைந்தவராக தன் மனைவியிடம் " ங்கொய்யால! துட்ட வாங்கிகிட்டு வேற யாரையோ எறக்கி விட்டுட்டான்"... என்றார்.
 * * * * * * *
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான்
முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
 * * * * * * *   
டீச்சர் : (1) ஒரு தவளை இருக்கு ,(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு, (3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிலோ. அப்ப எனக்கு வயசு என்ன??
சுட்டிப்பைய்யன் : 32 இருக்கும் சார் .
டீச்சர் : உனக்கு எப்படி தெரியும் ?
சுட்டிப்பைய்யன் : அதுவா சார் ..! , என் தங்கைகு வயசு 16, அவ ஒரு அரை-லூசு, அத வச்சி தான் சொன்னேன்.
 * * * * * * *
சுட்டிப்பையன் : சார் , என் தலை ' ல எரும்பு ஏறுது பாருங்க ..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம , ஏண்டா என்கிட்ட சொல்ற ?
சுட்டிப்பையன் : நீங்க தானே சார் சொன்னீங்க ,! என் தலை' ல ஒன்னுமே ஏறலனு ?
 * * * * * * *
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
 * * * * * * *
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
 * * * * * * *
ன்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
 * * * * * * *
ரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர்.
அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர்.
அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.
மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடுகிறது என்றார்.
 * * * * * * *
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 19 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
 * * * * * * *
  இன்றைய நகைச்சுவை குறும்படம் பார்த்து ரசியுங்கள் 
                  Charlie Chaplin funny comedy clips
                                        
 * * * * * * *
இன்றைய மொக்கைக் கேள்வி பதில் ??????????

ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?

ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்.
 * * * * * * *
திவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லவும்.
 * * * * * * *

19 மறுமொழிகள் to சிறந்த தமிழ் நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி சிரிப்பு மொக்கை கடி :Panithuli shankar tamil kadi jokes nagaichuvai sardar jokes comedy tamil film jokes kadi jokes english jokes tamil jokes video sirippu varuthu +18 (05+04+2011) :

Raja=Theking said...

Super jokes . .

Raja=Theking said...

More jokes visit www.kingraja.co.nr

KADAMBAVANA KUYIL said...

நகைச்சுவை ஜோக்ஸ் ஒவ்வொன்றும் நினைத்து பார்க்க முடியாத அளவு என்னை சிரிக்க வைத்துவிட்டது. இன்னும் சிரிப்பை நிப்பாட்டவே முடியல தோழரே. சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வருகிறது. very nice.

FOOD said...

நகைச்சுவை ஒவ்வொன்றும் நச் ரகம்.ரசித்தேன்.

Jana said...

All are Nice Jokes :)

ஸ்வீட் ராஸ்கல் said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஷங்கர் சார்.சிரிக்கும் படியும் அதே நேரத்தில் சில ஜோக்குகள் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்தன. வாழ்த்துக்கள்...

இசை said...

விஜேந்த் காமெடின்னு வந்தா.. போங்க நீங்க.. இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கீங்க

அமைதி அப்பா said...

good jokes!

செல்வன் said...

நைஸ்..

முரளி said...

சங்கர் சார் கலக்கிட்டிங்க சார்லியோட வீடியோவும் நல்லா இருந்தது..

முரளி said...

சங்கர் சார் உங்களுடைய பக்கங்கள் செம கலர்புல்லா இருக்கே எங்களை மாதிரி புதுசா பண்ணுறவங்களுக்கு எதாவது கலர்புல் டிப்ஸ் கொடுங்க சார்

Thenu said...

நல்லதோர் பதிப்பு.. இயந்திர வாழ்க்கையில் இது போன்ற பதிப்பு நிச்சயமாக தேவைப்படுகிறது.. எனக்கும் தேவையிருந்தது.. நன்றி சங்கர் Sir...

பாட்டு ரசிகன் said...

ரசிக்கும் படி இருந்தது...

வாழ்த்துக்கள்..

பாட்டு ரசிகன் said...

//////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான பதிவு.

Ganpat K said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்தன. வாழ்த்துக்கள்.

Kannan KANNAA said...

நல்ல நகைச்சுவை

Selvam KARU said...

அருமையான நகைச்சுவை

gobinath gobisl said...

அருமையான நகைச்சுவை