ஞாபகச் சிறை : காதல் கவிதை : பனித்துளி சங்கர் 11 January 2011ரணத்தில் சுமக்கும்
அத்தனை வலிகளையும்,
உன் மௌனத்தில் சுமக்கின்றேன்..!
ரணம் பட்ட இதயமாய் உனக்கும் சேர்த்து
வலிகள் சுமக்கிறது எனது தனிமை..!
களைந்து போகும் கனவுகளில் கூட
உந்தன் பிரிதலை எண்ணி,
உடைந்துபோகிறது உள்ளம்...!!
களைய மறுக்கும் மௌனத்திலும்,
கடந்து போகும் நிமிடத்திலும்,
இன்னும் என்னில் எஞ்சியிருப்பது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே..!!
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

33 மறுமொழிகள் to ஞாபகச் சிறை : காதல் கவிதை : பனித்துளி சங்கர் 11 January 2011 :

மைந்தன் சிவா said...

அருமை நண்பா..

மைந்தன் சிவா said...

அய் நான் தான் பெஸ்ட்'டு!!

ஆயிஷா said...

வரிகள் அருமை.நல்ல கவிதை.

வாழ்த்துக்கள்.

அ.செய்யதுஅலி said...

அருமையான கவிதை தோழரே வரிகளில் சிலரின் வாழ்க்கை இருக்கிறது

கோமாளி செல்வா said...

//மரணத்தில் சுமக்கும்
அத்தனை வலிகளையும்,
உன் மௌனத்தில் சுமக்கின்றேன்..!
/

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா !!

Usha said...

மிகவும் அற்புதம் மௌனம் மனிதனை எந்த அளவுக்கு வாட்டுகிறது !!!!!!

polurdhayanithi said...

//களைந்து போகும் கனவுகளில் கூடஉந்தன் பிரிதலை எண்ணி,உடைந்துபோகிறது உள்ளம்...!!//உணர்ந்து எழுதப்பட்ட உணர்வுடன் கூடிய ஆழமான வரிகள் பாராட்டுகள் .போளூர் தயாநிதி

வெங்கட் நாகராஜ் said...

அருமை நண்பரே...

sakthistudycentre.blogspot.com said...

அருமையான கவிதை நணபரே.. வரிகளில் சிலரின் கண்ணீர் இருக்கிறது.

கவிதை கூட போடும் படங்களும் அருமை

மாத்தி யோசி said...

அருமையான வரிகள் நண்பா! எல்லோருக்குமே இந்த வலி உண்டு! ஆகவே எல்லோருக்கும் இந்த வரிகள் பிடிக்கும்!!

கவிநா... said...

ஞாபகங்களின் உடைந்துவிட்ட மௌனம், உங்களின் இந்த கவிதை... அழகு...

gulivers travels said...

We are lucky to have born in this wonderful planet by accident and why don't we live it practically enjoying every moment and living a purposeful life to ourselves and to the society we live in.If i waste my time just because of a girl is utter foolish and i am insulting myself.Lets not be emotional,its fools paradise and i consider the literature is to escape from the reality by not having the courage to face reality.A Girl is a girl,every girl the same and need we to waste a precious life in a meaningless way

கோவை ஆவி said...

ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதே!!

விக்கி உலகம் said...

என்னமோ போங்க !

Priya said...

நல்ல வரிகளைக்கொண்ட உங்க கவிதை... அழகு! வாழ்த்துக்கள்!!!

Jawahar said...

உணர்வுப்பூர்வமா இருக்கு. காதலியின் மெளனம்ங்கிறது அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே புரியும்.

http://kgjawarlal.wordpress.com

கல்பனா said...

அழகுக்கு அழகான வார்ப்பு!!ரொம்ப அருமை ....

சி. கருணாகரசு said...

காதல்... வீரியமாத்தான் இருக்கு...
பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு said...

//மரணத்தில் சுமக்கும்
அத்தனை வலிகளையும்,
உன் மௌனத்தில் சுமக்கின்றேன்..!//

இந்த வரிகள் மிக அழகு.

தோழி பிரஷா said...

அருமையான கவிதை.....

எஸ்.கே said...

//இன்னும் என்னில் எஞ்சியிருப்பது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே..!!
//

touching!

Chitra said...

very nice.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇன்னும் என்னில் எஞ்சியிருப்பது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே..!!ஃஃஃஃ

சில வரியில் பலதை பறைந்து விட்டீர்கள் நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

Philosophy Prabhakaran said...

உங்க வலைப்பூ மாதிரியே கலர்புல்லா இருக்கு கவிதை...

செந்தழல் ரவி said...

உங்களமாதிரிலாம் கவிஜ எழுதமுடியாது நன்பா. புக்கு எதுவும் போட்டிருக்கையா ?

தமிழரசி said...

//அ.செய்யதுஅலி said...

அருமையான கவிதை தோழரே வரிகளில் சிலரின் வாழ்க்கை இருக்கிறது//

இதையே நானும் சொல்லிக்கிறேன்..என் மன நிலையை பிரதிபலிக்கிறமாதிரி கவிதை இன்னும் வலி அதிகரிக்க...

சே.குமார் said...

அருமையான கவிதை நண்பா.
இப்ப வேலை அதிகமா? நம்ம கடைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. அதான் கேட்டேன்.

"உழவன்" "Uzhavan" said...

ஆக்குவதிலும் அழிப்பதிலும் ஞாபகங்களின் பங்கு மிக அதிகம். நல்ல கவிதை

சென்னை பித்தன் said...

//இன்னும் என்னில் எஞ்சியிருப்பது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே..!//
அந்த ஞாபகங்கள் சாகும் வரை போவதில்லை;அதனால்தான் ஒரு கவிஞன் எழுதினான்”என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில் ‘சக்கு’ என்றே ஒலிக்கும்”என்று.
ஞாபகங்கள் சாவதில்லை!
நல்ல கவிதை.

அசோக் குமார் said...

கலக்கலா இருக்கு நண்பா

ஷர்புதீன் said...

love-a??

கந்தசாமி. said...

காதல் வலிகள் அருமை .............

செந்தில்குமார் said...

வலிகளின் வரிகள்....சங்கர்