மேலும் வாசிக்க.. >>
- Home
- Archive For December 2010
! காதல் எழுதும் கடிதம் : காதல் கவிதை
15
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/30/2010 08:38:00 PM
குறிச்சொல் kavithai in tamil kadhal kavithai in tamil latest tamil kavithai, love poem, tamil kathal, Tamil Kavithai, tamil kavithai gallery, tamil poem in tamil, tamil poetry in tamil, tamil puthu kavithai
குறிச்சொல் kavithai in tamil kadhal kavithai in tamil latest tamil kavithai, love poem, tamil kathal, Tamil Kavithai, tamil kavithai gallery, tamil poem in tamil, tamil poetry in tamil, tamil puthu kavithai
சிரிப்பு திருவிழா : நகைச்சுவை ஜோக்ஸ் கலக்கல் கடி காமெடி சிரிப்பு சிந்தனை துளிகள் PART -7 (28*12*2010 )
21
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/28/2010 09:41:00 PM
குறிச்சொல் Cinima comedy, jokes for kids, Nagaisuvai blog, sirippu, Siripu com, sms jokes, tamil nagaichuvai/comedy, சிரிப்பு, ஜோக்ஸ், நகைச்சுவை, நையாண்டி
குறிச்சொல் Cinima comedy, jokes for kids, Nagaisuvai blog, sirippu, Siripu com, sms jokes, tamil nagaichuvai/comedy, சிரிப்பு, ஜோக்ஸ், நகைச்சுவை, நையாண்டி
சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்நான்...இத சொல்லியே ஆகனும்....
question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think
இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு
பாடல்:
முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே !
************ ***********
கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.
மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.
மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்
************** **************
நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!
எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?
இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !
மனைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?
கணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு !
******* ********
"சிட்டிசன்"
(கோர்ட் சீன்)
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி RDX: எருமையாகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
அஜித்: தெரியாதே...
நீதிபதி RDX: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு...
"காக்க காக்க"
ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா...
"கௌரவம்"
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகாம பின்ன என்ன நீந்தியா போகமுடியும்?
"நாயகன்"
கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
டிராபிக் போலீஸ்: அவன் போறப்ப கிரீன் சிக்னல், இப்ப ரெட்!
"வல்லவன்"
சிம்பு: நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்னு ஆசைப்படற... நான் அம்பானியாவே ஆகணும்னு ஆசைப்படறேன்!
மக்கள்: இந்தக் கொடுமையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு தாண்டா அம்பானி போயிட்டாரு!
"தவசி"
விஜயகாந்த் : புயல் அடிச்சுப் பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இல்லடா!!!
இளவரசு: நீங்க அடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படத்தத் தியேட்டர்ல பார்த்துப் பொழைச்சவங்க யாரும் இல்லையாம்!!
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
இன்று ஒரு அரிய தகவல் : குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !? (27.12.2010)!
33
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/27/2010 09:28:00 PM
குறிச்சொல் ariya artical, Baby, Chaild, GK, interesting matters, Kutti thagaval, news, குழந்தை, தகவல், தாய், நிகழ்வுகள், பொது, மருத்துவம்
குறிச்சொல் ariya artical, Baby, Chaild, GK, interesting matters, Kutti thagaval, news, குழந்தை, தகவல், தாய், நிகழ்வுகள், பொது, மருத்துவம்
அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த அரிய குட்டித் தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் மணிக்கணக்கில் வாசிக்கும் அல்லது கேட்கும் தகவல்களை விட ஓரிரு வரிகளிலோ அல்லது ஒரு சில நிமிடங்களிலோ, எங்கேனும் யதார்த்தமாக வாசிக்கவோ அல்லது கேட்கவோ நேரிடும் குட்டித் தகவல்கள் மிகவும் ரசிக்கும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் அமைவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதுபோலத்தான் இன்றையத் தகவலும் உங்களை ரசிக்க வைக்கும் என்பது திண்ணம்.
இந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இப்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கான காரணத்தை இந்தத் தகவலின் வாயிலாக அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி .
முதல் முத்தம் காதல் யுத்தம் : குட்டிக் கவிதைகள் :பனித்துளி சங்கர் (26.12.2010) !
37
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/26/2010 05:14:00 PM
குறிச்சொல் HAIKKU, kadhal kavithai, kavithakal download, kavithakal lyrics, kutti kavithai, love poem, muththam, panithuli shankar kavithai, punaivu, sms kavithaigal, கவிதைகள், காதல்
குறிச்சொல் HAIKKU, kadhal kavithai, kavithakal download, kavithakal lyrics, kutti kavithai, love poem, muththam, panithuli shankar kavithai, punaivu, sms kavithaigal, கவிதைகள், காதல்
இதுநாள் வரை உனது முத்தத்தால்
சாயம் பட்டதாய் உணர்ந்த என் இதயத்தில்
முதல் முறை
காயம் பட்டதாக உணர்கிறேன் .
நீ
தந்தக் குட்டி முத்தத்தில்
ஒட்டிக்கொண்டதோக் காதல் !????
புதைத்து வைப்பதுதான் கல்லறை என்றால்
உயிர்கொண்ட உடல்கள் சுமக்கும்
ஒவ்வொரு இதயமும் கல்லறையே !!!..............
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
சிரி சிரி சிரி நகைச்சுவை விருந்து சரவெடி காமெடி கடி மொக்கை ஜோக்ஸ் சிரிப்பு : PART - 6 ( 25:12:2010) . !
24
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/25/2010 02:56:00 PM
குறிச்சொல் comedy, doctor jokes, Kadi Jokeskalakkal comedy, mokkai, Nagaichuvai, sardar joke, tamil film jokes, Tamil Jokes, tamil jokes video, tamilkadi thathuvam, ஜோக்ஸ், நகைச்சுவை
குறிச்சொல் comedy, doctor jokes, Kadi Jokeskalakkal comedy, mokkai, Nagaichuvai, sardar joke, tamil film jokes, Tamil Jokes, tamil jokes video, tamilkadi thathuvam, ஜோக்ஸ், நகைச்சுவை
சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
நோயாளி : டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி : எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
நபர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நபர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.
ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
வந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
டாக்டர் : அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
! சிகரெட்டின் சீக்ரெட் கவிதைகள் : பனித்துளி சங்கர் (Cigarete kavithaigal )
26
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/23/2010 10:13:00 PM
குறிச்சொல் cigarette smoke kavithaigal pani kavi, கவிதைகள், புகையிலை, புனைவு, பொது, விழிப்புணர்வு கவிதை, ஹைக்கு
குறிச்சொல் cigarette smoke kavithaigal pani kavi, கவிதைகள், புகையிலை, புனைவு, பொது, விழிப்புணர்வு கவிதை, ஹைக்கு
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு..!
நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ..!.
உன்னை சுவாசித்த நானோ...
கனம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்.
புற்று நோய் முற்றிப்போனதாம்,
மருத்துவர் சொன்னார்..!
இன்று ஆராய்ந்து சொன்ன பொழுது அழுகிறது
புகைத்தலின் உச்சம்தான் இறத்தலோ.. !?
முதல் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!
மெல்ல உயிர் குடிக்கிறது.
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உள்ளுக்குள்
புற்றுநோய் (கேன்சர்) என்ற பெயரில்..!!
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் . நண்பர்களே உங்களுக்கான கிறிஸ்மஸ் பரிசு மற்றும் மடல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் . நண்பர்களே உங்களுக்கான கிறிஸ்மஸ் பரிசு மற்றும் மடல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
இன்று ஒரு தகவல் : மகாகவி பாரதி பேசிய இறுதி உரை
50
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/22/2010 06:19:00 PM
குறிச்சொல் GK, Indru oru thagaval, Interesting Informative Articles, mahakavi bharathi, தகவல்கள், தலைவர்கள், நிகழ்வுகள், மகாகவி பாரதி
குறிச்சொல் GK, Indru oru thagaval, Interesting Informative Articles, mahakavi bharathi, தகவல்கள், தலைவர்கள், நிகழ்வுகள், மகாகவி பாரதி
அனைத்து நண்பர்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு சிறப்பானத் தகவலுடன் இன்று சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது வரை நாம் இன்று ஒரு தகவல் என்ற தொடரில் பல துறைகளிலும் உள்ள பல அரிய அதிசயத் தகவல்கள் பற்றி அறிந்துகொண்டோம். அதுபோல் பல உயர்ந்த மனிதர்களின் சிறப்புகள் பற்றியும் பல பதிவுகளின் வாயிலாக அறிந்துகொண்டோம். அந்த வகையில் இன்று நாம் அறிந்துகொள்ள இருக்கும் தகவல் .
இன்று நாம் அனைவரும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு தனது எழுச்சிமிகு கவிதைகளின் வாயிலாக ஒவ்வொரு உள்ளங்களிலும் விடுதலை தீ மூட்டி சுதந்திரம் ஒன்றே தனது உயிர் மூச்சு என்று தமிழுக்காகவும் , தமிழர்களுக்காகவும் தனது கவிதைகளின் வாயிலாக சமதர்மம் போதித்த முதல் கவிஞன் . தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.உலகத்தில் இல்லை என்ற சொல்லே இல்லையென்று செய்வேன் என்று மேடைகளில் முழங்கிய முதல்வன்.
"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி."நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
முறுக்கு மீசை மிரட்டும் தேகம் விரட்டும் முண்டாசு என வெள்ளையர்கள் அனைவருக்கும் காட்சி பயத்தை இதயங்களில் பதிய செய்த பெருமைக்குரியவர். இன்றும் அனைவரின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எழுச்சி பெற்று விளங்கும் முண்டாசு கட்டிய பாரதியார் பற்றிய ஒரு தகவல் தான் இன்றையப் பதிவு ..
சரி பொதுவாக நம் எல்லோருக்கும் பாரதியாரைப் பற்றி நான்றாகத் தெரியும் . அப்படி என்ன இந்தப் பதிவில் சிறப்பு இருக்கிறது என்று பலருக்கு வினாக்கள் எழலாம் சொல்கிறேன். பொதுவாக யாரேனும் ஒருவரிடம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு தேசத் தலைவர் பற்றியோ அல்லது ஒரு சாதனையாளர் பற்றியோ அவர் எப்பொழுது பிறந்தார். அவர் மறைந்த தேதி அல்லது அவர் இறுதியாக வாழ்ந்த இடத்தின் பெயர் என இப்படி ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்டால் அனைவருக்கும் பதில் தருவது எளிதான ஒன்றுதான் ஆனால் ஏதேனும் ஒரு தலைவர் அல்லது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான மனிதர் இறுதியாக எங்கு எப்பொழுது பேசினார் என்று யாரிடமாவதுக் கேட்டால் இதற்கு நம்மில் பலருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அந்த வகையில் எழிச்சி மிகு கவிதைகளாலும் தீ பறக்கும் பேச்சுக்களாலும் விடுதலை தீ மூட்டிய தேசியக் கவிஞன் பாரதியார் எங்கு எப்பொழுது இறுதியாக பேசினார் என்று உங்களுக்குத் தெரியுமா !?(அதான் தெரியலனு தெரியுதுல... சொல்லி தொலையேன் மக்கா..!!!!)
இதோ தெரிந்துகொள்ளுங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு அனைவரையும் ஒன்று திரட்டி போராடத் துடித்த பாரதி 1921 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறை ஈரோட்டிற்கு வருகை தந்திருக்கிறார். ஈரோட்டிற்கு வந்தப் பாரதி கருங்கல்பாளையம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் '' மனிதனுக்கு மரணமில்லை '' என்றத் தலைப்பில் பொங்குகின்றக் கவிதைகளிலும் கொப்பளிக்கின்ற வார்த்தைகளிலும் எழுச்சி மிகு உரையாற்றிய மகாகவிப் பாரதி அதன் பிறகு சென்னை சென்ற அவர் 1921 ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி (11 ) மரணம் அடைந்தார் . இதன் பிறகு மகாகவிப் பாரதி தனது வீட்டைத் தவிர வேறு எங்கும் சென்று உரையாற்றவில்லை என்பதும் , அவர் கருங்கல்பாளையத்தில் ஆற்றிய எழிச்சி மிகு உரையே இறுதியானது என்றும் குறிப்பிடத் தக்க ஒன்று .
இது மட்டும் இல்லாது பாரதி இறுதியாக ஈரோட்டில் ஆற்றிய உரையே இறுதியாக அமைந்ததால் அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்திற்கு ''மகாகவி பாரதியார் நூலகம்'' என்று அவரின் நினைவாக பெயரிடப்பட்டு இன்றளவும் சிறப்பாக திகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . மீண்டுமொரு அறியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
பனித்துளி சங்கரின் கவிதைகள் : காதல் அரங்கேற்றம்
31
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/20/2010 08:54:00 PM
குறிச்சொல் Cute tamil sms, kavingar kavithai, kavithakal lyrics, love haikku, Love Love love kavithai, love poem, Tamil sms Love Kavithai, கவிதைகள், காதல் கவிதைகள்
குறிச்சொல் Cute tamil sms, kavingar kavithai, kavithakal lyrics, love haikku, Love Love love kavithai, love poem, Tamil sms Love Kavithai, கவிதைகள், காதல் கவிதைகள்
நீண்டதொரு வழிப்பாதை
இருந்தும் வழி மறந்த விழிகளுடன்
குழந்தையென தவழ்கிறது உள்ளம்
உன் காலடித் தடம் தேடியே..!
குபுக்கென்று பீறிட்டு வெளிவரும்
கண்ணீர்த் துளிகளிலெல்லாம் இன்னும்
மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின்
காதல் முகவரி மெல்லக் கசிந்து
எனது உள்ளம் நிரப்பி செல்கிறது .
எழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலாய் உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கிறது உனக்கானப் பிரியங்கள்
என் இதயமெங்கும் .
எனக்கானக் கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மவுனத்தில் இடருகிறாய் !?
தனக்குத் தானே பேசிகொள்வதில்தான்
எத்தனை ஆனந்தம்
முதல் முறை இதையும்
உனக்கான நினைவேட்டில் நிரப்பிக் கொள்கிறேன்
நீயும் நானும்
உரையாடிக் கரைந்த தருணங்களில்
தடை பட்டு தொலைந்து போன
வார்த்தைகளின் மிச்சங்களிலெல்லாம் புதிதாய்
சில சொற்தொடர்
உயிர் பெற்று மீண்டும்
சுவாசிக்கத் தொடங்கிவிட்டது
நம் இருவருக்கும் இடையேயான காதலென.......
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது : பனித்துளி சங்கர் (19.12.2010 )
22
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/19/2010 10:33:00 PM
குறிச்சொல் charlie chaplin, comedy video, funny jokes clips, jjoke video clips, joke clips in tamil, Kadi mokkai clips, Nagaichuvai Virunthu, sms joke, ஜோக்ஸ், நகைச்சுவை
குறிச்சொல் charlie chaplin, comedy video, funny jokes clips, jjoke video clips, joke clips in tamil, Kadi mokkai clips, Nagaichuvai Virunthu, sms joke, ஜோக்ஸ், நகைச்சுவை
அனைவருக்கும் வணக்கம் . பொதுவாக சில நிகழ்வுகளைப் பற்றி கேட்பதைவிட பார்ப்பதே பலருக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் அதிலும் நகைச்சுவைகள் பற்றி என்றால் சொல்லவே வேண்டாம் . அதுபோல்
எதார்த்தமாக நேற்று நான் பார்த்து ரசித்த சில நகைச்சுவை வீடியோக்கள்( Comedy Video Clips ) என்னை வெகு நேரமாக மகிழ்ச்சியில் மிதக்க செய்தது . பொதுவாக நாம் பார்க்கும் நகைச்சுவை வீடியோக்களில் ( Comedy Video Clips )சிலர் அதிகம் பேசினால் சிரிப்பு வரும் இன்னும் சிலர் மெதுவாகப் பேசினால் சிரிப்பு வரும் ஆனால் வார்த்தைகள் எதுவும் இன்றி தங்களது செய்கைகளில் மட்டுமே அனைவரையும் சிரிக்க வைப்பது என்பது எளிதான ஒன்று இல்லை என்பது நாம் உணர்ந்ததே.! அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோக்களும் ( Video Clips ) வார்த்தைகள் அதிகம் இன்றி தனது குறும்பான செய்கைகளால் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்க இதோ சில வீடியோ கோப்புகள் ( Comedy Video Clips ) .இதுவரை இதுபோன்று செய்கைகளால் Charlie chaplinக்கு அடுத்ததாக நான் பார்த்து அதிக நேரம் சிரித்த ஒரு நகைச்சுவை என்று இதை சொல்லலாம் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
அரிய தகவல்கள் ஆயிரம் : இமயம் விழுங்கும் பசிபிக் பெருங்கடல் PART 2
32
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/18/2010 04:34:00 PM
குறிச்சொல் GK artical, hills, pacific, thagaval blog, அதிசயம், உலகம், கடல், தகவல், நிகழ்வுகள், பசுபிக், மலை, வரலாறு
குறிச்சொல் GK artical, hills, pacific, thagaval blog, அதிசயம், உலகம், கடல், தகவல், நிகழ்வுகள், பசுபிக், மலை, வரலாறு
அனைவருக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நாம் அனைவரும் அறியத் தகவல்கள் ஆயிரம் என்ற பகுதியில் பசுப்பிக் பெருங்கடல் தோன்றிய வரலாறு பற்றிய பல வியப்பானத் தகவல்களை முதல் பகுதியின் அறிந்துகொண்டோம் . முதல் பகுதியை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம் .
அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1
சரி நண்பர்களே கடந்தப் பதிவில் இந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின் பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். (அதான் எழுவது தெரியுதுல.. சொல்லித் தொல...) சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16,000 கி.மீ., அகலம் 11,200 கி.மீ., பரப்பளவு 1,28,000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு என்பதுடன் தொடரும் என்று முடித்திருந்தேன் இதோ அதன் தொடர்ச்சி வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம் .
இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு போர்வை போல் உருவாக்கி இந்தக் கடலை மூட நேர்ந்தால் இந்தக் கடலின் 60 சதவீதம் மட்டுமே மறைக்க இயலும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் பரப்பளவை. உலக வரைபடத்தில் அதிகமாக காட்சி தருவதும் இந்தக் கடலின் தோற்றமே என்பது நாம் அறிந்த ஒன்றுதான். சரி இந்தக் கடலின் பரப்பளவுதான் இப்படி என்றால் இதையும் தாண்டிய ஒரு ஆச்சரியம் இந்த கடலின் ஆழத்தை பற்றி நாம் அறிந்து கொள்ளும் பொழுது கசிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
சரி அப்படி இந்தக் கடலின் ஆழத்தில் என்ன ஆச்சரியம் என்றால் ஒருவேளை உலகத்தில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் இமய மலையை இந்தக் கடலுக்குள் தூக்கி போட்டால் மூழ்கி போய்விடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (அப்ப தூக்கி போட வேண்டியதுதானே.. என்றெல்லாம் கேட்கப்படாது... நான் ஜஸ்ட் பனிமலையை மட்டுமே உருட்டுபவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.. ஹி..ஹி..)
இதுமட்டும் இல்லாது இந்தக் கடலில் ஆயிரத்திற்கும் அதிகமானத் தீவுகள் இருக்கின்றதாம் இந்தத் தீவுகளில் என்ன ஒரு வேடிக்கையான விஷயம் என்றால் உலகத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய எந்த ஒரு நாடும் இதன் பரப்பளவில் பெரியதாக இல்லை என்பதே இந்தத் தீவுகளின் வேடிக்கையான விஷயம். அப்படியென்றால் இந்த கடலில் காணப்படும் ஒவ்வொரு தீவுகளின் பரப்பளவை சற்று கற்பனை செய்து நீங்களேப் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த தீவுகளில் மாரியானஷ் என்ற தீவு மிகவும் வினோதங்கள் நிறைந்த தீவு என்று சொல்லப்படுகிறது காரணம் இந்தத் தீவில் இதுவரை எந்த காடுகளிலும் இல்லாத விலங்கினங்கள் மற்றும் பறவைகள் இங்கு வசிக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்த தீவின் அருகில் மட்டும் இந்தப் பசிப்பிக் பெருங்கடலின் ஆழம் 10,795 மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு அதிக சுழல்கள் ஏற்படுவதால் பொதுவாக யாரும் இங்கு செல்ல பயப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
இன்னும் இந்த கடலில் பல விநோதமானத் தீவுகள் கானப்படுகின்றனவாம் அவற்றில் என்ன ஆச்சரியம் என்றால் எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும் இந்த தீவுகளில் திடீர் என்று எரிமலைகள் உருவாகி நெருப்புக் குழம்புகளை கக்கத் தொடங்கிவிடுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கடலில் பெரிய அளவிலானப் பவளத் தீவுகளும் காணப்படுகின்றனவாம். தேன் பசிபிக் தீவுகளில் வாழும் மக்களுக்கு இந்த தீவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது தகுந்த தட்ப வெப்ப நிலைகள் இந்த தீவுகளில் காணப்படுகின்றனவாம். இதைவிட இந்தக் கடலுக்கு மலைகள் பற்றிய தகவல்கள் இன்னும் சுவராசியமானவை.
அனைவரும் அறிந்த ஹவாய் தீவுகளின் இந்த மலைத் தொடரின் தொடக்கத்தில்தான் அமைந்துள்ளனவாம். இந்தப் பசிபிக் பெருங்கடல் பற்றி நம் அனைவருக்கும் பதினாறாம் நூற்றாண்டில்தான் தெரிய வந்தது. ஆனால் 1768 முதல் 1799 வரை கேப்ட்டன் குக் என்பவர் இந்தக் கடல் முழுவதையும் ஆராய்ந்து பல அறிவியல் பூர்வமானத் தகவல்களையும், இந்தக் கடல் இவ்வளவு பெரியதாக இருப்பதற்காக தகுந்த அறிவியல் ஆதாரங்களையும் நிருப்பித்து இருக்கிறார். இந்த மிகப் பிரமண்டமான அதிசய பசிபிக் பெருங்கடலை ஆராய்ச்சி செய்த குக் என்பவரின் அறிக்கையில் இந்த பசுப்பிக் பெருங்கடல் பூமியில் இருந்து பிரிந்த ஒரு பகுதியே என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பூமி தோன்றிய ஆரம்பக் காலத்தில் பூமிக் கோளானது அதிக அளவில் இறுகியா நிலையில் காணப்படவில்லையாம். அந்த தருணத்தில் அதிக வேகத்துடன் சுழன்ற நேரத்தில் இந்த பூமிக் கோளிலிருந்து ஒரு மிகப்பெரியப் பகுதி பிரிந்து போயிற்று என்றும், அது இன்றிருந்த இடமே இந்த பசுபிக் பெருங்கடலானது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை நிலப்பரப்பில் தோன்றி மறைந்த உயிர்களைப்போல் பல மடங்கு அதிகமான உயிர்கள் இந்த பசிபிக் பெருங்கடலில் வாழலாம் என்று கணித்திருக்கிறார்களாம்.
என்ன நண்பர்களே..! இன்றைய பசிபிக் பெருங்கடல் பற்றிய சுவராசியமானத் தகவல்களுடன் நீங்களும் இந்தக் கடலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு வியப்பானத் தகவலுடன் சந்திக்கிறேன் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி சிரிப்பு PART - 5 (16.12.2010)
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி .
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர்
சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா
சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமா
தயாரிப்பாளர் : அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்
உதவியாளர் : என்ன பேரு?
தயாரிப்பாளர் : கக்க...! கக்க...!
டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”
நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”
உதவியாளர் : என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
நடிகர் : போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!
சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!
சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 4 !!!
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
கவிதை கலவரம் - காதல் இடைவெளி
17
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/15/2010 10:24:00 PM
குறிச்சொல் KAVITHAIGAL, love kavithai, love poem, panithuli, thanimai, கவிதைகள், காதல் கவிதை, காத்திருப்பு, தனிமை, ஹைக்கு
குறிச்சொல் KAVITHAIGAL, love kavithai, love poem, panithuli, thanimai, கவிதைகள், காதல் கவிதை, காத்திருப்பு, தனிமை, ஹைக்கு
காற்று இல்லாத பிரபஞ்சம்
மீண்டும் புதுப்பித்து செல்கிறது
இன்னும் நான் மறந்து போகாத
இன்னும் நான் மறந்து போகாத
உந்தன் அழகிய நினைவுகளை .
காலப் பெருவெளியில்
இழுத்துக் கட்டவும் ,
தடுத்து நிறுத்தவும் முடியாமல்
தினம் கரைந்து போகிறது
உனக்கான காத்திருப்பின் தருணங்கள் !....
உனக்கான
காத்திருப்பின் இடைவெளிகளில்
கரைந்துபோகும் தனிமையைக் கூட
சில நேரங்களில்
சுகமாகத்தான் உணர்கிறது
இந்த உள்ளம் !.........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1
19
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/14/2010 09:24:00 PM
குறிச்சொல் ariya thagaval, GK, history of pacific ocean, island, Thagaval, உலகம், கடல் வரலாறு, தகவல்கள், நிகழ்வுகள், பசிபிக்
குறிச்சொல் ariya thagaval, GK, history of pacific ocean, island, Thagaval, உலகம், கடல் வரலாறு, தகவல்கள், நிகழ்வுகள், பசிபிக்
இந்த உலகத்தை மூன்று பகுதி நீரால் சூழ்ந்துள்ள கடல் பல பெயர்களில் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை தங்களுக்குள் வைத்திருக்கிறது அந்த வகையில் கடல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் பசிப்பிக் பெருங்கடல் பற்றிதான் இன்று நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.
சரி உங்களில் பலருக்கு இந்த கடலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது இருந்தாலும். இந்த கடலைப் பற்றிய தகவலில் தொடக்கத்தில் இருந்து நாம் போகலாம் இந்த கடலுக்கு பசிப்பிக் என்று எப்படி பெயர் வந்திருக்கும் என்று பலருக்கு பல கேள்விகள் எழலாம்.!?
இந்த பசிபிக் என்றால் என்ன அர்த்தம் !? பசிபிக் என்பதற்கு அமைதி என்று பொருளாம். ஆனால் இந்தக் கடலோ ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரு குழந்தைக்கு பெயர் வைத்தவர் யார் அன்னையினை கேட்டால் தெரியும் அல்லது ஒரு ஊரிற்கு பெயர் வைத்தவர் யார் என்றுக் கேட்டால் கூட சொல்லிவிடலாம். ஆனால் இந்தக் கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சூட்டியவர் யார் என்றுக் கேட்டால் பலருக்கு விடை தெரியாத மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும் என்பது மட்டும் திண்ணம். சரி இந்த கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சுட்டியவரைப் பற்றி தெரிந்துகொள்வோம். (ங்கொய்யால.. இம்புட்டு நேரம் நீதான் கடலை போட்டு இருக்க..?!! இன்னும் தகவலுக்கு வந்தபாடில்லையேனு.. திட்டுறது நல்லாவே கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்..!!)
1519-ம் ஆண்டு ஒரு முறை ஐந்து கப்பல்கம் மற்றும் 237 மாலுமிகளுடன் உலகை சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலாக பசுபிக் பெருங்கடலை கடக்கத் தொடங்கினார் இந்த போர்த்துக்கீசிய மாலுமி பெர்டினான்ட். அப்பொழுது அவர்கள் செல்லும் வழிகளில் திரளாக சுனாமி பேரலைகள் உருவாவதும் இந்தக் கடலில்தான் இதை அறிந்த பெர்டினான்ட் என்ற போர்த்துக்கீசிய மாலுமி இந்தக் கடலின் கோபத்திற்கு எதிர்மையாக பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணினார் அதன் விளைவாகத்தான். இந்தக் கடலில் அதிகமாக சுனாமி பேரலைகள் அதிக சத்தத்துடன் எழும்புவதால் இதற்கு அமைதியான கடல் என்ற எதிர்மையான பொருள் அமையும் வகையில் பசுபிக் என்று பெயர் சூட்டினாராம்.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இனி இந்தக் கடலின் பரப்பளவைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும் . உலகத்தில் மிகப்பெரிய கடல்களின் வரிசையில் முதன்மையாக திகழ்கிறது.
இந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின் பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16 ஆயிரம் கி.மீ . அகலம் 11200 கி .மீ பரப்பளவு 12,8000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு
தொடரும்
இதுவரை பசிபிக் பெருங்கடல் பற்றி நீங்க அறிந்திராத பல வியப்பானத் தகவல்கள் என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் . மறக்காமல் உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க : கடி ஜோக்ஸ் நகைச்சுவை காமெடி சிரிப்பு வெடி
35
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/12/2010 08:35:00 PM
குறிச்சொல் comedy, Kadi Jokes, Mokkai Tamil Jokes, top sirippu, அரசியல் நகைச்சுவை, கடி, காமெடி, சிரிப்பு, ஜோக்ஸ், மொக்கை
குறிச்சொல் comedy, Kadi Jokes, Mokkai Tamil Jokes, top sirippu, அரசியல் நகைச்சுவை, கடி, காமெடி, சிரிப்பு, ஜோக்ஸ், மொக்கை
சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.
மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்
தோழி 1 :உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2: ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!
தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
தலைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!
நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி
தொண்டன் : தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.
தலைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>
சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.
மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்
தோழி 1 :உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2: ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!
தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
தலைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!
நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி
தொண்டன் : தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.
தலைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
! காதல் உடன் படிக்கை : கவிதைகள் பனித்துளி சங்கர்
40
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/11/2010 02:33:00 PM
குறிச்சொல் Anbu kavithai, kadhal kavithai, love poem, panithuli, ஊடல், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், நினைவுகள், புனைவு
குறிச்சொல் Anbu kavithai, kadhal kavithai, love poem, panithuli, ஊடல், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், நினைவுகள், புனைவு
சிறகுகள் இன்றி பறக்கிறது இதயம்,
உன் உறவு வந்ததால...
இத்தனை வருடங்களில் இல்லாத
மாற்றங்கள் கடந்த சில நாட்களாய்
நாட்குறிப்பேட்டில் அழகாய் தெரிகிறது..!
உன்னைப் பற்றிய நினைவுகள்
மெல்ல கசிகிறது
என் ஞாபக பெருவேளிகளில்
பாலைவனங்களின் நீர்வீழ்ச்சியாய்
மனம் தினம் தினம்
மகிழ்ச்சியில் அலை மோதுகிறது..!
இத்தனை நாட்களாய்
முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம் என்னைப்
பார்த்து ஏதேதோ பேசுகிறது...!
எழுத்தாணி தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!
அலைகளாய் நீ
உதிர்க்கும் வார்த்தைகளில் எல்லாம்
தினம் கிளிஞ்சல்களாய்
சிதறிப்போகிறேன்..!
சிதறிப்போகிறேன்..!
அருகில் இல்லாத உன் உருவம்
விழி போகும் திசை எங்கும்
பின் தொடர்கிறது
உடன் வரும் நிழலாய்...!
எங்கோ தூரத்தில் கசியும் இசையில்
மெல்லக் துயில் கொள்கிறது
உன் நினைவுகள..!
உன் நினைவுகளை எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத வார்த்தைகளால்
மீண்டும் என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..!
நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
அசத்தல் நகைச்சுவை கலந்த கொட்டிக் கிடக்குது குட்டித் தகவல்கள் PART- 2
44
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/08/2010 07:57:00 PM
குறிச்சொல் GK, Pothu, Thagaval, அதிசயம், அரிய தகவல், ஆக்கம், உலகம், கட்டுரை, தகவல், நிகழ்வுகள், பொது
குறிச்சொல் GK, Pothu, Thagaval, அதிசயம், அரிய தகவல், ஆக்கம், உலகம், கட்டுரை, தகவல், நிகழ்வுகள், பொது
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் அரியத் தகவல்கள் ஆயிரம் பகுதி இரண்டில் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சரி அப்படி இந்த அதிசயத் தகவல்கள் ஆயிரத்தில் இன்று என்ன சிறப்பு என்று அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உலகத்தில் பொதுவாக நேரத்தை விட மிகவும் விலைமதிப்பு மிக்க ஒன்று எதுவும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் நேரத்தை வீணாக்காமல் நாம் இன்று விரைவில் தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கலாம்.
பனித்துளி : பொதுவாக நாம் நாய் பார்த்து இருப்போம் !?
RDX அந்நியன் : ( ஏலே மக்கா..!! அதுதான் ஒரு நாய் எழுதினத படிக்கிறோமே இதற்கு அப்பறமும் ஒரு நாயைப் பற்றியா என்று யாரும் கொலை வெறியில கோடாரியத் தூக்கப்படாது. சொல்றதை பொறுமையாக கேக்கணும்.)
பனித்துளி : இது வரை நாம் பார்த்த நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்கினால் அவ்வளவுதான் போங்க... பக்கத்து தெருவில் நடந்து போறவன் கூட பயத்தில் பள்ளத்தில் விழுந்து ஓடவேண்டி இருக்கும் அதுபோல் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குரைக்கும். ஆனால் குரைக்கவேத் தெரியாத நாய்களும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா..!?? உண்மைதான் நண்பர்களே..! டிங்கே என்ற இனத்தை சேர்ந்த நாய்களுக்கு குறைக்கவேத் தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லாது இந்த வகை நாய்கள் சுவாசிக்கும்பொழுது மட்டுமே ஒரு குறிப்பிட சத்தத்தை ஏற்படுத்தும் திறமை மட்டுமே பெற்றிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பனித்துளி : நம் எல்லோருக்கும் முதலைகளைப் பற்றித் தெரியும் !?
RDX அந்நியன்: அப்படி என்ன தெரியும் என்றுக் கேட்டால் எதுவுமே தெரியாது என்ற ஒரு பதிலும் தெரியும்.
பனித்துளி : சரி அதிகமான முதலைகள் பற்றியத் தகவல்களில் முதலை பத்து அடிக்கு நாக்கை நீட்டி தண்ணீருக்குள் இருந்தே கரையில் இருக்கும் உயிர்களை இழுத்துக்கொள்ளும் திறமை உள்ளது என்று படித்திருக்கிறேன். ஆனால் இதில் உண்மையானத் தகவல் என்னவென்றால் முதலையால் தனது நாக்கை வெளியில் நீட்டவே முடியாது என்பதுதான்.
RDX அந்நியன்: ( ஏலே மக்கா..! முதலை நாக்கு வெளியில வராதுன்னு பனித்துளி சொல்றான்னு நம்பி தைரியத்தில குச்சிய வச்சு முதலைய சொரன்டப் போகி முதலைக்கு இரையானா நிர்வாகம் பொறுப்பாகாதுங்கோ...!!)
பனித்துளி : உலகத்தில் உள்ளப் பறவை இனங்களிலே மிகவும் குறுகிய நாட்களில் முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிக்கும் திறமை சிட்டுக்களுக்குத்தான் இருக்கிறதாம். இந்த பறவைகள் பனிரெண்டே நாட்களில் குஞ்சு பொரித்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே .!
RDX அந்நியன்: (தக்காளி என் வீட்லையும்தான் ஒரு கோழி முட்டை இட்டு அடைகாக்க ஆரம்பித்தது ஆறு மாசம் ஆச்சு நேத்து போ பார்க்கிறேன் கோழியையும் காணோம் முட்டையும் காணோம் என்ன கொடுமை சார் இது..!!)
பனித்துளி : மீன்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணையில் வைட்டமின் ”ஈ” அதிகம் இருக்கிறதாம் .
RDX அந்நியன்: ( என்ன கொடுமை சார் இது எங்க வீட்ல அதிகம் ”ஈ” தான் இருக்கிறது ஆனால் மீன் எதுவும் எதுவும் இல்லை.)
பனித்துளி : உலக அதிசயங்களின் ஒன்றான பிரமிடுகளுக்கு பெயர் போன எகிப்தில்தான் முதல் முதலில் குண்டுசி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
RDX அந்நியன்: (யாருட இவன் நானே நேத்து தொலைஞ்சுபோன கன்றுக்குட்டியக் காணோம்னு தேடுறேன் இவன் குண்டுசியக் கண்டு பிடுச்சவனைப் பற்றி சொல்ல வந்துட்டான்)
என்ன நண்பர்களே..! இன்றைய கொட்டிக் கிடக்குது குட்டித் தகவலின் இரண்டாவது பகுதி உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு புதுமையான தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
நான் ஸ்டாப் நகைச்சுவை கலக்கல் ஜோக்ஸ் அசத்தல் கடி காமெடி கதம்பம் !
30
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/07/2010 10:06:00 PM
குறிச்சொல் comedy, Nagaichuvai, sirippu, Tamil Jokes, கடி, காமெடி, சிரிப்பு, ஜோக்ஸ், நகைச்சுவை, நையாண்டி, மொக்கை
குறிச்சொல் comedy, Nagaichuvai, sirippu, Tamil Jokes, கடி, காமெடி, சிரிப்பு, ஜோக்ஸ், நகைச்சுவை, நையாண்டி, மொக்கை
சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.
டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே.
டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.
ரவி : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.
ரவி : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.
கண்டக்டர்: படியில் நிற்பவரிடம்.... யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்
நிற்பவர்: சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன் !
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 1 48766
மாணவன் : : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.
முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்.
நம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.
நண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?
ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மழலை மொழி கவிதை > Panithuli shankar mazhalai SMS kavithaigal
25
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/06/2010 01:04:00 AM
குறிச்சொல் Baby poem, haiku poems, Kavithai, small kavithai, Tamil sms kavithai, கவிதை, கவிதைகள், குழந்தை, மழலை கவிதை, ஹைக்கூ
குறிச்சொல் Baby poem, haiku poems, Kavithai, small kavithai, Tamil sms kavithai, கவிதை, கவிதைகள், குழந்தை, மழலை கவிதை, ஹைக்கூ
இன்று ஒரு தகவல் : இசையால் நோய் தீரும் அதிசயம்
19
கிறுக்கியது
! ❤ பனித்துளி சங்கர் ❤ !
தேதி
12/04/2010 03:40:00 PM
குறிச்சொல் issai, melody, music, musiq, இசை, தகவல்கள், நிகழ்வுகள், மருத்துவம், மெலோடி, மெல்லிசை, ராகம்
குறிச்சொல் issai, melody, music, musiq, இசை, தகவல்கள், நிகழ்வுகள், மருத்துவம், மெலோடி, மெல்லிசை, ராகம்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கு இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று என்னதான் அவசர உலகத்தில் நமது இயல்பான வாழ்க்கை முறைகளை சிலர் மறந்தும் பலர் தொலைத்தும் பயணித்தாலும் இன்னும் ஒரு சில விசயங்கள் நாம் சுவாசிக்கும் காற்றைப்போல் எப்பொழுதும் மாற்றங்கள் எதுவும் இன்றி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் முதன்மையில் இருப்பது இசை. இசைக்கு வசமாகாத எந்த இதயமும் இந்த உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு காலத்தில் இசையில் இந்த பூமியே அசைந்தாடும் என்று குறுப்பிட்டு இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாது ஒரு குறிப்பிட்ட ராகத்தை வாசித்தால் மழையும் மண்ணில் வந்து தவழும் என்றும் பல குறிப்புகள் இருக்கின்றனன். இவை உண்மையும் கூட. ஆனால் இன்று இசையால் பூமி அசைந்தாடுகிறதோ இல்லையோ பூமியில் வசிக்கும் நாம் அசைந்தாடுவது மட்டும் திண்ணம். சரி இன்றைய தகவலுக்கும் இந்த இசைக்கும் என்ன காரணம் என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம் சொல்கிறேன்.
இன்று இந்த உலகத்தில் எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு இசை நமது செவிகளை வருடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த அளவிற்கு இசையால் இந்த மொத்த உலகமும் மயங்கிக் கிடப்பது உண்மைதான். இந்த இசையிலும் பல வகைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் விரல்கள் மட்டுமே தீண்டி உயிர் பெற்ற இசைகள். இன்று கால்களும் தீண்டி இறந்துகொண்டிருக்கிறது. சிலர் இசைக் கருவிகளை வாசிக்கத் தொடங்கினால் நாம் மெய் மறந்தும் அங்கே உறங்கிபோகும் அளவிற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இன்னும் சில பேர் இசையை உருவாக்குகிறேன் என்ற பெயரில் அதுதாங்க...... அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா.....!!!???? என்பது போல அந்த இசையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரன் எல்லோரும் குடும்பத்துடன் சாமியாராபோகிற அளவிற்கு இசையைக் கொலைவெறியுடன் வாசிப்பவர்களும் உண்டு.
சரி இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று நாம் தகவலுக்கு வருவோம். சில நாட்களுக்கு முன்பு இத்தாலி நாட்டில் இசையில் செய்த ஆய்வுகளில் இசை மனிதனில் ஏற்படும் நாற்பதுக்கும் அதிகமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்று அதன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலும் மிகவும் உயிரை குடிக்கும் நோய்களில் ஒன்றான மாரடைப்பு முதன்மையான இடம் வகிக்கிறதாம். இந்தக் குழுக்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செய்த இந்த ஆய்வுக்கு ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள 24 பேர்களை தேர்வு செய்தனர். இவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹெட் போன் மூலம் மெல்லிசையை தினமும் குறிப்பிட்ட நேரம் கேட்கச்செய்தனர். மற்றொரு பிரிவினரை அதிரடியான பாப் இசையை கேட்க வைத்தனர். அப்போது இரு தரப்பினரின் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு மருத்துவ அளவீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் அதிரடியான இசையை கேட்டவர்களுக்கு தோலின் அடியில் உள்ள ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டது. இருதய துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்ந்தது. மூச்சு விடுவது ஒழுங்கற்ற நிலையில் காணப்பட்டது.
அதே நேரத்தில் மெல்லிசையை மிதமான சத்தத்தில் கேட்டவர்களுக்கு இருதய துடிப்பு சீராக இருந்தது. அவர்களது ரத்தக்குழாய்கள் விரிவடைந்த நிலையில் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சீராக காணப்பட்டது.
இதே போன்ற ஆய்வு சாதாரண நோயாளிகளிடமும் நடத்தப்பட்டது. அதில் அதிரடியான இசையைக் கேட்டவர்களுக்கு நோயின் அறிகுறிகள் அதிகரித்துக் காணப்பட்டது. மிகவும் மென்மையான இசையை கேட்டவர்களுக்கு ரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் தெளிவான ஒழுங்கு முறையில் நடைபெறுவதையும் அவர்களின் ஞாபக சக்தி சற்று அதிகரித்து இருப்பதையும் இந்த ஆய்வில் உறுதி செய்து இருக்கிறார்கள். இறுதியாக அந்த குழுக்கள் அளித்த அறிக்கையில் உலகத்தில் அதிக சத்தத்துடன் இசையை கேட்பவர்களைவிட மிகவும் மெல்லிசையை கேட்பவர்களுக்குத்தான் அதிக புத்துணர்வுகள் ஏற்படுவதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
இதில் அதிரடியான இசையைக் கேட்பவர்கள் மென்மையான இசையை கேட்பவர்களின் வாழ் நாட்களின் எண்ணிக்கையில் வருடத்திற்கும் அதிகமான நாட்களில் பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இனி வரும் நாட்களில் அதிக சத்தத்துடன் கூடிய அதிரடியான இசைகளை குறைவான சத்தத்தில் வைத்து ரசித்துக் கேளுங்கள். இதைவிட மிகவும் மெல்லிய இசையை அதிகமாக கேட்க முயற்சியுங்கள். இந்த இசையில் ஆய்வில் மற்றொரு தகவல் என்னவென்றால் சாதரணமாக நாம் ஒரு விஷத்தை மனதில் நிறுத்திக்கொள்ள எடுத்துகொள்ளும் நேரத்தைவிட இசையுடன் அந்த தகவலை மனதில் நிறுத்திக்கொள்ள எடுத்துகொள்ளும் நேரம் என்பது சதவீதம் குறைவு என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது ஆகவே இயன்றவரை தங்களின் குழந்தைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இசையுடன் கூடியக் கல்விகளை அறிமுகம் செய்து அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யுங்கள்.
என்ன நண்பர்களே..! இன்றைய இசைப் பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு அறியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Subscribe to:
Posts (Atom)














































