இன்று ஒரு தகவல் : மகாகவி பாரதி பேசிய இறுதி உரை



னைத்து நண்பர்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு சிறப்பானத் தகவலுடன் இன்று சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது வரை நாம் இன்று ஒரு தகவல் என்ற தொடரில் பல துறைகளிலும் உள்ள பல அரிய அதிசயத் தகவல்கள் பற்றி அறிந்துகொண்டோம். அதுபோல் பல உயர்ந்த மனிதர்களின் சிறப்புகள் பற்றியும் பல பதிவுகளின் வாயிலாக அறிந்துகொண்டோம். அந்த வகையில் இன்று நாம் அறிந்துகொள்ள இருக்கும் தகவல் .

 இன்று நாம் அனைவரும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு தனது எழுச்சிமிகு கவிதைகளின் வாயிலாக ஒவ்வொரு  உள்ளங்களிலும் விடுதலை தீ மூட்டி சுதந்திரம் ஒன்றே தனது உயிர் மூச்சு என்று தமிழுக்காகவும் , தமிழர்களுக்காகவும் தனது கவிதைகளின் வாயிலாக சமதர்மம் போதித்த முதல் கவிஞன் . தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.உலகத்தில் இல்லை என்ற சொல்லே இல்லையென்று செய்வேன் என்று மேடைகளில் முழங்கிய முதல்வன்.

  "கவிதை எழுதுபவன்  கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி."
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

 முறுக்கு மீசை மிரட்டும் தேகம் விரட்டும் முண்டாசு என வெள்ளையர்கள் அனைவருக்கும் காட்சி பயத்தை இதயங்களில் பதிய செய்த பெருமைக்குரியவர். இன்றும் அனைவரின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எழுச்சி பெற்று விளங்கும் முண்டாசு கட்டிய பாரதியார் பற்றிய ஒரு தகவல் தான் இன்றையப் பதிவு ..

ரி பொதுவாக நம் எல்லோருக்கும் பாரதியாரைப் பற்றி நான்றாகத் தெரியும் . அப்படி என்ன இந்தப் பதிவில் சிறப்பு இருக்கிறது என்று பலருக்கு வினாக்கள் எழலாம் சொல்கிறேன். பொதுவாக யாரேனும் ஒருவரிடம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு தேசத் தலைவர் பற்றியோ அல்லது ஒரு சாதனையாளர் பற்றியோ அவர் எப்பொழுது பிறந்தார். அவர் மறைந்த தேதி அல்லது அவர் இறுதியாக வாழ்ந்த இடத்தின் பெயர் என இப்படி ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்டால் அனைவருக்கும் பதில் தருவது எளிதான ஒன்றுதான் ஆனால் ஏதேனும் ஒரு தலைவர் அல்லது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான மனிதர் இறுதியாக எங்கு எப்பொழுது பேசினார் என்று யாரிடமாவதுக் கேட்டால் இதற்கு நம்மில் பலருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அந்த வகையில் எழிச்சி மிகு கவிதைகளாலும் தீ பறக்கும் பேச்சுக்களாலும் விடுதலை தீ மூட்டிய தேசியக் கவிஞன் பாரதியார் எங்கு எப்பொழுது இறுதியாக பேசினார் என்று உங்களுக்குத் தெரியுமா !?(அதான் தெரியலனு தெரியுதுல... சொல்லி தொலையேன் மக்கா..!!!!)

தோ தெரிந்துகொள்ளுங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு அனைவரையும் ஒன்று திரட்டி போராடத் துடித்த பாரதி 1921 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறை ஈரோட்டிற்கு வருகை தந்திருக்கிறார். ஈரோட்டிற்கு வந்தப் பாரதி கருங்கல்பாளையம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் '' மனிதனுக்கு மரணமில்லை '' என்றத் தலைப்பில் பொங்குகின்றக் கவிதைகளிலும் கொப்பளிக்கின்ற வார்த்தைகளிலும் எழுச்சி மிகு உரையாற்றிய மகாகவிப் பாரதி அதன் பிறகு சென்னை சென்ற அவர் 1921 ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி (11 ) மரணம் அடைந்தார் . இதன் பிறகு மகாகவிப் பாரதி தனது வீட்டைத் தவிர வேறு எங்கும் சென்று உரையாற்றவில்லை என்பதும் , அவர் கருங்கல்பாளையத்தில் ஆற்றிய எழிச்சி மிகு உரையே இறுதியானது என்றும் குறிப்பிடத் தக்க ஒன்று .

 து மட்டும் இல்லாது பாரதி இறுதியாக ஈரோட்டில் ஆற்றிய உரையே இறுதியாக அமைந்ததால் அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்திற்கு ''மகாகவி பாரதியார் நூலகம்'' என்று அவரின் நினைவாக பெயரிடப்பட்டு இன்றளவும் சிறப்பாக திகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . மீண்டுமொரு அறியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் .
  
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


51 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் : மகாகவி பாரதி பேசிய இறுதி உரை :

அமைதிச்சாரல் said...

அருமையான பதிவு. பாரதியாரைப்பத்தி புதுத்தகவல்கள்..

Arun Prasath said...

நல்ல தகவல் அண்ணே... எனக்கு தெரியாது இது வரை

ம.தி.சுதா said...

நன்றி சகோதரம்.. அறியாத விடயங்களை அறிந்து கொண்டேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???

yohannayalini said...

பாரதியை பற்றி உங்களின் பகிர்தலுக்கு மிக்க நன்றி. புதுத்தகவல்கள்....அவரை நினைப்பவர்கள் அரிதாகிவிட்டனர்.மிக்க மகிழ்ச்சி

polurdhayanithi said...

பாரதி பற்றி மாறுபட்ட கருத்துகள் இருபினும் . தமிழிப்பாடியதல் போசப்படுகிறார் .பதிவுக்கு பாராட்டுகள்

மதுரை பொண்ணு said...

இவை எல்லாம் நாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய கருத்து.மிக்க நன்றி நண்பரே.

Kuttymaanu said...

ஈரோடிலேயே சுற்றித்திரிந்த எங்களுக்கு இது தெரியவில்லையே.....நன்றி தோழரே!!! மஹாகவியின் உரையும் இனைத்திருந்தால்.......

தமிழ் உதயம் said...

இறுதி உரையை தேடி கண்டு பிடித்து வெளியிட்டுள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி.

கோமாளி செல்வா said...

///பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.உலகத்தில் இல்லை என்ற சொல்லே இல்லையென்று செய்வேன் என்று மேடைகளில் முழங்கிய முதல்வன்.
//

கண்டிப்பா எனக்கு அதனாலதான் பாரதியார ரொம்ப பிடிக்கும் அண்ணா ..!!

கோமாளி செல்வா said...

//ஈரோட்டிற்கு வந்தப் பாரதி கருங்கல்பாளையம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் '' மனிதனுக்கு மரணமில்லை '' என்றத் தலைப்பில் பொங்குகின்றக் கவிதைகளிலும் கொப்பளிக்கின்ற வார்த்தைகளிலும் எழுச்சி மிகு உரையாற்றிய மகாகவிப் பாரதி//

என்னது எங்க ஊருக்கு வந்தாரா ..?

கோமாளி செல்வா said...

என்னால நம்பவே முடியல .. உண்மைலேயே எனக்கு சந்தோசமாவும் இருக்கு .. எங்க ஊர்ல அவர் வந்து பேசினதால .. உங்க தகவல் அருமை அண்ணா .!

ஆமினா said...

நல்ல பதிவுங்க!!!!

எஸ்.கே said...

fantastic!

அருண் said...

நிச்சயமாய் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.ஈரோடு மக்கள் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள்.
-அருண்-

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க Arun Prasath அறியாத அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு . வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க ம.தி.சுதா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////yohannayalini said...
பாரதியை பற்றி உங்களின் பகிர்தலுக்கு மிக்க நன்றி. புதுத்தகவல்கள்....அவரை நினைப்பவர்கள் அரிதாகிவிட்டனர்.மிக்க மகிழ்ச்சி////////

வாங்க yohannayalini என்ன செய்வது நமது கை விரல்கள் கூட ஒன்றுபோல் இல்லையே . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

கல்பனா said...

இப்பவும் நான் தான் லேட் அஹ்....
ஆனா பதிவு கலக்கல்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////polurdhayanithi said...
பாரதி பற்றி மாறுபட்ட கருத்துகள் இருபினும் . தமிழிப்பாடியதல் போசப்படுகிறார் .பதிவுக்கு பாராட்டுகள்//////

வாங்க polurdhayanithi என்ன செய்வது பொதுவாக கேட்டவர்களை விட நல்லவர்கள் அதிகம் விமர்சிக்கப் படுவது இப்பொழுது வாடிக்கையாகிப்போனது . உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க மதுரை பொண்ணு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////Kuttymaanu said...
ஈரோடிலேயே சுற்றித்திரிந்த எங்களுக்கு இது தெரியவில்லையே.....நன்றி தோழரே!!! மஹாகவியின் உரையும் இனைத்திருந்தால்.......////////

வாங்க Kuttymaanu இன்னும் இது போன்று அறியாத சிறப்புகள் ஈரோட்டில் அதிகம் இருக்கிறது நண்பரே . நாம்தான் அதை அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க தமிழ் உதயம் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க கோமாளி செல்வா வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////கோமாளி செல்வா said...
என்னால நம்பவே முடியல .. உண்மைலேயே எனக்கு சந்தோசமாவும் இருக்கு .. எங்க ஊர்ல அவர் வந்து பேசினதால .. உங்க தகவல் அருமை அண்ணா .!///////


உண்மைதான் நண்பரே . உண்மை என்பதற்கு மற்றொரு பெயர் ஆச்சரியம் என்று பொருள்படும் .

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க ஆமினா நன்றி!!!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க எஸ்.கே நன்றி!!!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////// அருண் said...
நிச்சயமாய் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.ஈரோடு மக்கள் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள்.
-அருண்-///////

வாங்க அருண் நீங்கள் சொல்வது உண்மைதான்.வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி!!!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////கல்பனா said...
இப்பவும் நான் தான் லேட் அஹ்....
ஆனா பதிவு கலக்கல்
////

வாங்க கல்பனா நீங்க எப்பொழுதும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட வருவிங்கனு எனக்கு நல்லவேத் தெரியும் நன்றி!!!!

S பாரதி வைதேகி said...

வழக்கம் போல ஒரு நல்ல அறிந்திராத தகவல். வாழ்த்துக்கள் சங்கர் சார்!

நா.மணிவண்ணன் said...

அண்ணே உண்மைலே புது தகவல்கள் , ஈரோடு பணி நிமித்தமாக செல்வேன் அப்போது கண்டிப்பாக அந்த நூலகத்திற்கு சென்று பார்ப்பேன் .தூத்துகொடி செல்லும் பொழுது எட்டையபுரம் வழியாக பாரதியார் பிறந்த வீடு என்று போர்டு இருக்கும் நானும் அங்கு ஒரு முறையாவது அந்த வீட்டிற்கு சென்று பார்க்கவேண்டும் என்று நினைப்பேன் ஆனாலும் முடியவில்லை நேரமின்மை இங்கு ஒரு சப்பைக்கட்டு காரணமாகவே இருக்கும்

Ganesan said...

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி."

I Like it

பிரவின்குமார் said...

மிகவும் சுவாரஸ்யமான மற்றும் புதுமையான தகவல்கள் நண்பரே..!
பகிர்வுக்கு நன்றி.!

Sathish Kumar said...

இறவா கவியின் இறுதி இடி முழக்கம் ஈரோட்டிலா....!தகவல் தந்தமைக்கு நன்றி ஷங்கர்....!

தேவன் மாயம் said...

படங்கள் அருமை சங்கர்!

தேவன் மாயம் said...

படங்கள் அருமை சங்கர்!

தேவன் மாயம் said...

ஈரோட்டிற்கு வந்தப் பாரதி கருங்கல்பாளையம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் '' மனிதனுக்கு மரணமில்லை '' என்றத் தலைப்பில் பொங்குகின்ற//


புதுத்தகவல்!

அப்பாவி தங்கமணி said...

Nice post... thanks for sharing

கிருபாநந்தினி said...

பாரதி பத்தின சில விஷயங்கள் எனக்குப் புதுசா இருந்துச்சுங்ணா! தேங்க்ஸ். முக்கியமா, அழகழகான பாரதி படங்களைப் பதிவிட்டிருந்ததுக்கு டபுள் தேங்க்ஸ்!

கிருபாநந்தினி said...

பாரதி பத்தின சில விஷயங்கள் எனக்குப் புதுசா இருந்துச்சுங்ணா! தேங்க்ஸ். முக்கியமா, அழகழகான பாரதி படங்களைப் பதிவிட்டிருந்ததுக்கு டபுள் தேங்க்ஸ்!

வெறும்பய said...

நல்ல தகவல் நண்பரே.

சேதுவடிவு said...

அரிய(அரிதான என்னும் பொருளில்) தகவல் என்பதே சரியானது.

பார்வையாளன் said...

பாரதி போன்றவர்களை திட்டுவதுதான் வீரம் என நினைக்கும் பதிவர்களிடையே உங்கள் பதிவு இனிய தென்றலாக வீசுகிறது

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பதிவு

சந்ரு said...

நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

சே.குமார் said...

அருமையான பதிவு. பாரதியாரைப் பற்றி புதுத் தகவல்.

suki said...

அன்பரே ! உங்களடுய ப்ளாக் அருமை அனால் ஒன்று, தவறாக எண்ணம் கொள்ள வேண்டாம் !. இந்த கிளி பச்சை நிறத்தை மாற்றவும் . வளையத்தை பார்க்க கூட இயலவில்லை . நன்றி

marimuthu said...

அருமையான பதிவு! இதுவரை தெரியாத தகவல்கள் ! பாராட்டுக்கள்!

சென்னை பித்தன் said...

”காலா உன்னை சிறு புல்லென நான் மதிக்கிறேன்” என்று பாடிய மகா கவிஞனாயிற்றே! பொருத்தமான கடைசி உரைதான் .புதிய தகவலுக்கு நன்றி.

LOGESH said...

super sir.

karthik bharathi said...

தமிழ் காத்த தமிழனைப் பற்றி அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி இச்சிறப்பான பணி தொடரட்டும்,