இன்று ஒரு தகவல் 'Indru Oru Thagaval'- மிதக்கும் அதிசய அங்காடி


னைவருக்கும் வணக்கம் நண்பர்களே . இன்று நாம் வசிக்கும் இந்த பூமிக்கு இயற்கைகள் அழகு சேர்த்ததை விட அதிகம் அழகு சேர்த்தவர்கள் மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்லவேண்டும் !.
"யற்கை" இதுவரை யாராலும் சரியாக விளக்கம் சொல்ல இயலாத ஒரு அதிசயம் !. ஆனால் இந்த அதிசயத்தையும் அதிசயிக்க வைக்கும் அளவிற்கு. யதார்த்தங்கள் அனைத்திற்கும் புதுமைகள் சேர்த்து அவற்றை அன்னார்ந்துப் பார்க்க செய்த பெருமை மனிதர்களாகிய நம்மையே சேரும். இந்த துறைதான் என்று நில்லாமல் காற்றைப்போல் கட்டுப்பாடுகள் இன்றி தனது கற்பனைகளை அரங்கேற்றி ரசித்து இருக்கிறார்கள் இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறது நமது மனித இனம்.

தவை அடைத்து திறவுகோலை தெரிந்தே தொலைத்தார்கள் . அதிலும் ஓவியத்தால் திறவுகோல் இல்லாத பாதை ஒன்றை அமைத்தான் மனிதன். பறந்து செல்லும் பறவைகளை அன்னார்ந்து பார்த்த அதே மனிதனை விமானம் என்ற ஒன்றை வென்று பறவைகளை விட உயரத்தில் பறக்கச் செய்து ரசித்தான் !.

தூரத்து நிலவைக் காட்டி சோறு ஊட்டிய அதே பெண் இனத்தை நிலவுக்கே சென்று சோறுட்டு என்று ஆனந்தமாய் அனுப்பி வைத்தான் மனிதன் . இவ்வளவு பரப்பரப்பான உலகத்தையும் சில வினாடிகளில் அழிக்கும் சக்தியையும் உருவாக்கினான் மனிதன் . இப்படி மனிதனின் திறமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .

ரி இவற்றிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு குழப்பமாக இருக்கலாம் சொல்கிறேன் . பொதுவாக உலகத்தில் நமக்கு தேவையான எந்த ஒரு பொருளும் ஏதேனும் ஒரு இடத்தில் கிடைக்கும் வகையில்தான் கடைகளோ , அல்லது விடுதிகளோ , அல்லது சந்தைகளோ அமைந்திருக்கும் ஆனால் ஒரு நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தண்ணீரில் மிதக்க விட்டு இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?!! உண்மைதான் நண்பர்களே.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளதாம் இங்குதான் இந்த அதிசய மார்க்கெட்டை உருவாக்கி நீரில் மிதக்கும் வகையில் செய்து வியாபாரம் செய்து வருகிறார்களாம். தரைகளில் அதிக இட வசதிகள் இருந்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இது போன்ற ஒரு புதுமையை உருவாக்கி இருக்கிறார்களாம் . இதில் மிகவும் வியப்பான தகவல் என்னவென்றால் . ஒரு நாள் ஒன்றிற்கு ஒரு கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள பொருட்கள் வியாபாரம் ஆகிறதாம் இந்த மிதக்கும் அதிசய அங்காடியில் !.

ந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு தனித் தனி படகுகளை எடுத்துக்கொண்டு இந்த மிதக்கும் மார்க்கெட்டிற்கு சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது மட்டும் இல்லாது இந்த மிதக்கும் மார்க்கெட்டில் மொத்த நகரத்திலும் தேடிக் கிடைக்காத பொருட்கள் கூட இங்கு கிடைக்கும் என்று அவர்கள் சொல்வது அனைத்திலும் வியப்பான செய்திதான் !. அதுமட்டும் இல்லாது இந்த மார்க்கெட்டில் இருக்கும் மொத்தப் பொருட்களையும் வெளியேற்றுவதற்கு ஆயிரம் வேலையாட்களை நியமித்தாலும் நான்கு நாட்கள் ஆகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எவ்வளவு பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று .

வை அனைத்திலும் மிகவும் வியப்பான செய்தி என்னவென்றால் இதில் மொத்தம் எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்களாம். என்ன நண்பர்களே..! இன்றைய இந்த மிதக்கும் மார்க்கெட் தகவலுடன் நீங்களும் நீண்ட தூரம் மகிழ்ச்சியுடன் மிதந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


* * * * * * * * *

21 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 'Indru Oru Thagaval'- மிதக்கும் அதிசய அங்காடி :

பிரவின்குமார் said...

வழக்கத்தை விட கூடுதல் சுவாரஸ்யத்துடன் கூடிய அதிசய தகவல் நண்பரே..! தொடர்ந்து அசத்துங்க நண்பா..! தங்களது சேவை தொடரட்டும்.

r.v.saravanan said...

அதிசய தகவலுக்கு நன்றி நண்பரே தொடருங்கள்

என்னது நானு யாரா? said...

ஆச்சர்யங்கள் பல இருக்கின்றன உலகத்தில். நன்றி! உங்களின் பகிர்விற்கு!!

Sriakila said...

மிதக்கும் அங்காடியாயா..............ஆ...ஆ...!

மிகவும் அதிசயமானத் தகவல்! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

ஹேமா said...

எப்பவும்போல புதிதான தகவல் சங்கர்.

வானம்பாடிகள் said...

பிரமிப்பாயிருக்கிறது

Chitra said...

Good.

புன்னகை தேசம். said...

அழகான மார்க்கெட்தான்..

வீடுகளும் தண்ணிரீன் மேலேயே..


பாங்காக் தலைநகரிலிருந்து 1 மணி நேர பயணம்..

பாங்காக் சுற்றி பல இடங்களில் இப்படி தண்ணீர் மார்க்கெட் பார்க்கலாம்..

அதுமட்டுமல்ல மிதக்கும் வங்கியும் உண்டு இங்கே..

நல்ல தகவல் .

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கல்.படங்கள் அருமை.தகவல்கள் வியக்க வைக்கின்றன,

வெறும்பய said...

புதிய தகவல் நண்பரே.. பகிர்வுக்கு நன்றி...

rk guru said...

ரொம்ப ஆச்சர்யம் தான்....நல்ல பதிவு வாழ்த்துகள்

சே.குமார் said...

உண்மையில் வித்தியாசமான இந்தத் தகவல் பிரமிப்பூட்டுகிறது.

bava said...

goodnews thanks

Anniyan said...

இதுல இருக்குறது எல்லம் உங்க சொந்த கருத்தா? அச்சு பிசகாம அழக எழுதியிருக்கீங்க.உங்க அனுபவத்தை???????

ம.தி.சுதா said...

தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா...

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

DREAMER said...

அசத்தலான தகவல்கள்... நேரில் சென்று பார்த்தது போலிருந்தது...

-
DREAMER

sudhakar said...

அழகான தகவல..........நன்றி... cx4AE

சி.பி.செந்தில்குமார் said...

கவிதைல கலக்குனது பத்தாதுனு தகவல் களஞ்சியமாகவும் மாறிட்டீங்களா? வாழ்த்துக்கள்

Reena Rajini dsoza said...

மிதக்கும் அங்காடியாயா..............ஆ...ஆ...!

Reena Rajini dsoza said...

மிதக்கும் அங்காடியாயா..............ஆ...ஆ...!