இன்று ஒரு தகவல் - உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம் ( 02.09.2010 )

னைவருக்கும் வணக்கம் . சில வாரங்களாக அதிக வேலை பளு . அதுதான் பதிவுகள் புதிதாக எதுவும் தர இயலாத நிலை .நண்பர்களின் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புகளும் தொலைவில் சென்றதாக உணரவைத்தது கடந்த சில நாட்கள் . ஆனால் இன்று பல நாட்கள் சுவாசிக்க மறுத்த நுரையீரல் மீண்டும் சுவாசிக்க தொடங்கியதாக உணர வைக்கிறது உங்களை மீண்டும் சந்திக்கும் இந்த அழகியத் தருணம் . சரி நண்பர்களே இந்த நீண்ட இடைவெளியை நிரப்பும் ஒரு அறிய தகவல் பற்றி இன்று நாம் இன்று ஒரு தகவலில் அறிந்துகொள்ளப் போகிறோம் .

சரி இனி விஷயத்திற்கு வருவோம் . பொதுவாக நம்மில் பலருக்கு சில நிகழ்வுகள் வியப்பாக இருக்கும் . ஆனால் அதே நிகழ்வுகளோ அல்லது தகவல்களோ சிலருக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை .ஆனால் இன்னும் சில காட்சிகளோ அல்லது தகவல்களோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி செல்லும் . அந்த வகையில் நேற்று என்னை வெகு நேரமாக வியப்பில் ஆழ்த்தி சென்றது ஒரு கடிகாரம் . என்னடா இவன் ஒரு கடிகாரத்தை பற்றி இவளவு சொல்கிறானே .!
 
ப்படி வியப்பை ஏற்படுத்தும் அளவில் அந்தக் கடிகாரத்தில் என்னதான் இருக்கப்போகிறது !?  என்று நீங்கள் கேட்க நினைப்பது போலவே நானும் மனதில் பல கேள்விகளுடன் அதை பார்க்கத் தொடங்கினேன் . முதலில் எனக்கு ஒன்றும் அதில் புரியவில்லை . பின்பு சிறிது நேரத்தில் எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் அந்த கடிகாரத்துடன் ஒன்றி போய்விட்டேன் .

லகத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு எத்தனை ஜனனம் நிகழ்கிறது ., ஒரு நாளில் எத்தனை மரணம் நிகழ்கிறது , அதில் எத்தனை விபத்துக்களால் நிகழ்கிறது , எத்தனை இயற்கை மரணம் , ஒரு நாளில் எவளவு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது , ஒரு நாளில் எத்தனை சட்ட விரோதமான செயல்கள் நிகழ்கிறது , ஒரு நாளில் செலவிடப்படும் பணத்தின் அளவு , ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பு , ஒரு நாளில் உலகத்தில் மொத்தம் மனித இனத்தால் உருவாக்கப் படும் சக்தி , ஒரு நாளில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை , ஒரு நாளில் விற்கப்படும் பொருட்களின் மதிப்பு , ஒரு நாளில் அவசர தேவைகளுக்காக அழைக்கப்படும் அழைப்புகளின் எண்ணிக்கை ., ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை ,என்று நாம் உலகத்தில் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றிய தகவல்கள் ஒரு சிறு கடிகாரதிற்குள் அடங்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா !?.

ண்மைதான் நண்பர்களே ! எனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய அந்த கடிகாரம் உங்களையும் வியப்பில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கையில்தான் இந்த தகவலை நீங்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டிருக்கிறேன் . இதில் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் உலகத்தில் ஒரு நிமிடத்தில் நிகழும் மரணத்தைவிட பல நூறு மடங்குக்கும் அதிகமான ஜனனம் நிகழ்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இந்த தகவல்களை நாம் ஒரு நாளில் நிகழும் மாற்றங்கள் என்றோடு மட்டும் இல்லாமல் , ஒரு மணிநேரத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் உலகத்தில் நிகழும் மாற்றங்களையும் அறிந்துகொள்ளும் அளவில் இந்த கடிகாரம் இயங்குகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த அதிசயக் கடிகாரத்தை நான் சொல்வதை விட பார்த்து அறிந்துகொள்வதில் இன்னும் பல வியப்புகளை ஏற்ப்படுத்தலாம் .

ந்த அதிசயக் கடிகாரத்தை நீங்களும் பார்த்து வியப்பதற்கு
இந்த சுட்டியை அழுத்துங்கள் .

ன்ன நண்பர்களே இன்றைய இன்று ஒரு தகவலில் அதிசயக் கடிகாரம் பற்றியத் தகவல் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் என்றும் நம்புகிறேன் . இதுபோன்று இன்னும் நாம் அறியாத , பார்க்காத பல வியப்பான தகவல்கள் இனி வரும் ஒவ்வொரு இன்று ஒரு தகவலிலும் வெளிவர இருக்கிறது . எப்பொழுதும் இந்த பனித்துளிசங்கருடன் இணைந்திருங்கள் அறிந்துகொள்வோம் இன்னும் புதுமைகள் பல .

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

38 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம் ( 02.09.2010 ) :

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு .
பகிர்ந்தமைக்கு நன்றி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள் .

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்குங்க சங்கர்..தொடருங்கள்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

தகவலுக்கு நன்றி.

S.Sudharshan said...

இப்பிடியும் வந்துட்டா .. கடிகாரம் நல்லாயிருக்கு .. பார்த்துக்கொண்டே இருக்கலாம் ..நன்றி பகிர்ந்தமைக்கு ஷங்கர் :)

S.Sudharshan said...

//உலகத்தில் ஒரு நிமிடத்தில் நிகழும் மரணத்தைவிட பல நூறு மடங்குக்கும் அதிகமான ஜனனம் நிகழ்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//
இது ஆபத்தாச்சே !!!

புதிய மனிதா said...

அனைத்தும் அருமையான தகவல்கள் ,

ருத்ர வீணை® said...

ரொம்ப அருமைங்க !!

சைவகொத்துப்பரோட்டா said...

இதோ சுட்டியை பார்த்து விடுகிறேன், தகவலுக்கு நன்றி சங்கர்.

வெறும்பய said...

நல்லாயிருக்குங்க

தகவலுக்கு நன்றி.

Chitra said...

தகவலுக்கு நன்றி.

பிரவின்குமார் said...

வழக்கம் போல் சுவாரஸ்யமான தகவல் நண்பரே..!
அதிசய கடிகாரம் பற்றி
அதிகளவில் அறிந்து கொண்டேன்.

பகிர்வுக்கு நன்றி..!

abul bazar/அபுல் பசர் said...

பயனுள்ள பகிர்வு சங்கர்.
உலகத்தின் அனைத்து விசயங்களையும்
ஒரே இடத்தில் காணக்கிடைக்கிறது.
அவை யாவையும் அறிய தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி சங்கர்.

வானம்பாடிகள் said...

mikka nanri sankar. ty

குத்தாலத்தான் said...

நல்ல இருக்கு தல!

Ananthi said...

நல்லா இருக்குதுங்க.. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி .

rk guru said...

arumai....thagaval vazhthukal

பதிவுலகில் பாபு said...

அந்த கடிகாரத்தைப் பார்க்கறது உண்மையிலயே சுவாரஷ்யமாத்தாங்க இருந்தது...

நல்ல தகவல்..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையான தகவல் நண்பரே. அதிசயமான கடிகாரம் தான்!! பதிவு பிடித்திருந்ததால் நீங்கள் சொன்ன இடத்தில் சொடுக்கியும் விட்டேன். நன்றி.

ம.தி.சுதா said...

நல்ல பதிவு .தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் .

சுசி said...

நல்ல பகிர்வு.. நன்றி சங்கர்.

Thirugnana sambantham said...

ulagame ungal kaiyil. well done and useful information.

Thirugnana sambantham said...

ulagame ungal kaiyil. well done and useful information.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இப்படிப்பட்ட கடிகாரம் இருப்பது இவ்வளவு நாளா தெரியாம போச்சே :(

அறிமுகப்ப்டுத்தியதற்கு நன்றி தல :)

மகாதேவன்-V.K said...

உண்மையில் கடிகாரம் வியக்க வைக்கின்றது பதிவுக்கு நன்றிகள்

ரிஷபன் said...

உண்மையிலேயே அதிசயம்..

Suresh said...

சிறந்த பதிவு தான், மறுப்பதிற்கில்லை. அனால இது எந்த அடிப்படையில் இயங்குகிறது??

வழிப்போக்கன் - யோகேஷ் said...

தகவலுக்கு நன்றி....

Sriakila said...

அருமையான கடிகாரம். இப்படி ஒரு தகவலைக் கொடுத்ததற்கு நன்றி சங்கர்!

Mohamed Faaique said...

நானும் பார்த்து வியந்தேன்...

sam76 said...

sirapaga irunthathu

sam76 said...

sirapaga irunthathu

benzigar said...

it is very amazing. hard to believe. thanks a lot

commomeega said...

முற்றிலும் புதுமையான தகவல் .நன்றி

மீ. குமார் said...

தங்களின் பதிவுக்கு நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

gunalakshmi said...

தோழரே வணக்கம். தங்களின் இன்று ஒரு தகவலை இன்றுதான் முதன்முதலில் படித்தேன். மிகவும் அருமை. மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மேலும் தங்களிடமிருந்து பல தகவல்களை எதிர்பார்க்கும் உங்கள் அன்புத் தோழி...

cheena (சீனா) said...

அன்பின் சங்கர் - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கிளியனூர் இஸ்மத் said...

குட்....நல்வாழ்த்துகள்