அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

னைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதான் . அதில் ஆணும் , பெண்ணும் ஒன்றுபோல்தான் என்ற போதிலும் . வாழ்க்கை பயணத்தில் பெண்களின் வளர்ச்சியே மிகவும் வேகமானது . ஆண்மகனோ எதோ ஒன்றின் மீதான தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் தேங்கிப்போகிறான் . இதோ அந்த அவனுக்கும் அந்த அவளுக்கும் இடையில் உள்ள நீண்ட இடைவெளிகளை நிரப்பபோகும் வரிகள்.
 நான் அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்
அவளும் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்

னக்கு கல்லூரியில் B.E படிக்க இடம் கிடைத்தது
அவளுக்கும் கல்லூரியில் B.COM படிக்க இடம் கிடைத்தது

நான் B.E படித்து கொண்டிருந்தேன்
அவளுக்கு Ph.D. படிக்க இடம் கிடைத்தது .

நான் B.E முடித்திருந்தேன் .
அவளோ அப்பொழுது மருத்துவர் பட்டம் பெற்றிருந்தாள் .

வளுக்கு திருமணம் முடிந்தது .
நான் அப்பொழுதுதான் M.Tech நுழைவுத்தேர்வுக்கு  தயாராகிக்கொண்டிருந்தேன் .

வள் அம்மாவாகி அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது .
நான் அப்பொழுதுதான் M.Tech. படித்துக் கொண்டிருந்தேன் .

வளின் மகள் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
நான் அப்பொழுதுதான் எனது M.Tech. படிப்பை முடித்தேன் .

வளின் மகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள்
நான் அப்பொழுதுதான் வேலையில் சேர்ந்தேன் .

ப்பொழுது நான் எனது வருங்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு சிறந்த வேலையில் சேர்ந்து சிறப்பாக எனது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் .

திருமணம் செய்வதற்காக அவளைப்போலவே ஒரு நல்ல பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன் .

ன்று எனக்கு நிச்சயதார்த்தம் அவளின் மகள்தான் எனது மனைவி .

 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

26 மறுமொழிகள் to அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!! :

Suresh said...

சீக்ரெட்-ல்லாம் இப்படி கூட்டத்தில பேசகூடாதுங்க, அதெல்லாம் மறைமுகமா, சந்திக்கும்போது யாரு காதுக்கும் கேக்ககாம மெதுவா பேசிக்கணும்....ம்ம்..ஹீம்...நீங்க அதுக்கு லாயக்கில்ல....
இருந்தாலும் சூப்பர்......

கலாநேசன் said...

என்ன கொடுமை சங்கர் இது......

LK said...

avv enna ithu

வெறும்பய said...

என்ன கொடுமை சார் இது...

ப.செல்வக்குமார் said...

இப்பூடிஎல்லாமா நடக்குது ..??
என்னால நம்பவே முடியல ...??

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னது இப்டி ஆயிட்டு :) ?????

நாடோடி said...

என்ன‌ இது புது க‌தையா இருக்கு?...

Mohamed Faaique said...

ரசித்தேன். உணர்ந்தேன். இதுதான் உண்மை...

சசிகுமார் said...

//இன்று எனக்கு நிச்சயதார்த்தம் அவளின் மகள்தான் எனது மனைவி//

இது உங்களுக்கே ஓவரா தெரியலையா நண்பரே

ஜீவன்பென்னி said...

romba overunga...... :)

priya said...

this is toooooooooo much shankar

Sriakila said...

இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. பாவம் அந்தப் பெண்.

அப்பாதுரை said...

பெண்களின் மனவளர்ச்சி ஆண்களை விட விரைவானது என்று படிச்சிருக்கேன்; இப்போ புரியுது :)
வித்தியாசமான கற்பனை.

'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

யாரு தம்பி நீங்க ஈப்ப்டி உண்மைய உளறதுக்கு ??

கோவை ஆவி said...

எதார்த்தமாக இருந்தாலும் உணர்வுப் பூர்வமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை!

rk guru said...

கொடுமையோ கொடுமை.......

வானம்பாடிகள் said...

சொன்னா மாதிரி இது ஓவரு:)

பிரவின்குமார் said...

மிக யதாரத்தமான கட்டுரை மிக அருமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எழுத்து நடை மிக இயல்பாய்.... மெருகேறியுள்ளது.

//அவளுக்கு திருமணம் முடிந்தது .நான் அப்பொழுதுதான் M.Tech நுழைவுத்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன்//
அவன் தயாரன நேரம் அவங்க தாயராயிட்டு இருக்காங்க.. என்ன கொடுமை தல இது.

//இன்று எனக்கு நிச்சயதார்த்தம் அவளின் மகள்தான் எனது மனைவி.//

விடாமுயற்சிக்கு கிடைத்த பலனோ....??!!

பிரவின்குமார் said...

தல என்கென்னவொ இந்த பெண் ஒவ்வொரு வகுப்பிலும் 2 வருடம் படித்து இருக்கும்போல.. பயபுள்ள தெரியாம 12ம் வகுப்புல மாட்டியிருக்கான்..... இப்படியெல்லாம் நடக்குமென்றுதான் ஒரே வயதுப்பெண்ணை காதலிக்கவோ, திருமணம் செய்துகொள்ளவோ அந்த காலம் முதலே அதிகமாக எதிர்க்கிறாங்க.. போல....

சே.குமார் said...

athu sari...

ippadi pottu thalichchup puttingaly...

ithai Ellam opena sollak koodathu shankar.

namma ITHU ennakirathu...

nalla irukku.

Kayal said...

enakku idhu pidikavillai...apdina avalukku enna vayadhu..magalukku enna vayadhu.idhu enakku yedhaarthamaga thondravillai...ippadi ondru nadapadharkku avan sammadhithal...idhu kodumaiyilum kodumai...idhu enakku pidika illai...ipadi nadaka oru vaaipillai endre enakku thondrugiradhu...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

இதற்க்கு பெயர்தான் காத்திருதலின் பயனோ...

nis (Ravana) said...

அதிர வைத்துவிட்டீர்கள்.

Anu said...

enna kodhumai idhu...idhai nan aetrukollave mudhiyadhu..nijamaga engavadhu enakarindu nerndhal vanmaiyaga edirppen...mozhi nanragha irukkiradhu shankar.

ரகுநாதன் said...

அருமையாகச் சொன்னீர்கள்.. எல்லா ஆண்கள் வாழ்க்கையிலும் இது நடக்கிறது...

nisha said...

pankalin kodumaikalai kuda rasikum vasakarkalukum,......atharthamana aciriyarkum entha veruthum arasidam kuda ellai