பனித்துளி சங்கரின் நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை !!!


னக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .
ன் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்
சில நேரங்களில் பதில்களற்ற
கேள்விகள் மட்டும்
நம் இருவரின் புன்னகையிலும்
அவ்வப்பொழுது தோன்றி
தொலைந்து போகிறது.

“தா“ என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
“வலி“ என்று சொல்லுமுன் விழிகள் அழுது
உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும் .

ன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
மௌனத்தின் மொழி இவ்வளவு
தெளிவாகக் கேட்கும் என்பதை
உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .

பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் .

ல்லோருக்கும் இல்லை என்ற போதும்
எனக்கு மட்டுமான தேவைகளை
நான் கேட்காமல் வாரி இறைத்துவிடுகிறது
நமது நட்பில் பிறக்கும் வார்த்தைகள் .

ந்தோசத்திலும் ஒரு சோகம்
சோகத்ததிலும் ஒரு சந்தோசமென
அனைத்தையும் ஒன்றாய் ரசிக்க வைக்கிறது
நம் இருவருக்கும் இடையிலான
நட்பென்ற உறவு .

தாய்மடி இல்லையென்றபோதும்
உன் தோழமையின் அரவணைப்பில்
உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்
மெய்மறந்து சிறு குழந்தையாய் .

யிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம் .
உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்
இந்த உலகமே அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும்

தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன
சாலையோரப் பூக்கள் .

வ்வொரு இரவின் இடைவெளிகளிலும்
உன்னை மீண்டும் சந்திக்கப்போகும்
அந்த நிமிடங்கள் எண்ணியே பசியின்றி ,
தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் நட்பின் நினைவுகள் .
மீண்டும் நம் நட்பைக்கொண்டாட
எதற்க்கு இந்த வருடம் என்னும்
நீண்ட இடைவெளி..??
வா தோழா இன்றே தொலைத்துவிடுவோம்
நமது நட்பிற்குள் இந்த வருடத்தை
நிரந்தரமாக.

காதல் கொண்ட உள்ளத்தின்
எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்
கற்பனைகள் நிரம்பி வழிகிறது
இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .

நானும் நீயும் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் நம் அனுமதியின்றியே
நம் இதயங்கள் உள்ளுக்குள்
நம் நட்பை கொண்டாடிக்கொண்டே இருக்கட்டும்
இனி வரும் நாட்களில்...திவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய  ADVANCE நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் .!


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.38 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை !!! :

LK said...

ungalukum nanbargam thina vaalthukkal shankar.. natpai perumai paduthum kavithaigal anaithum arumai

சந்ரு said...

அத்தனையுமே நல்ல கவிதைகள்..

வாழ்த்துக்கள்

மயில்ராவணன் said...

நல்ல கவிதைகள்.நட்புக்கு வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்!!!

தேவன் மாயம் said...

கவிதைகள் அழகு சங்கர்!!

Jeyamaran said...

அன்ன உங்களுக்கும்
ADVANCE நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள.....
மிகவும் அருமையான கவிதை

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள் நண்பரே!

சி. கருணாகரசு said...

பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் //

கவிதை பிடிச்சிருந்தது.... வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

//உன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும் மௌனத்தின் மொழி இவ்வளவு தெளிவாகக் கேட்கும் என்பதை உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .//

சங்கர்,

அத்தனையும் அருமையானவைகளே என்றாலும், மேலே குறிப்பிட்டவை என்னை வெகுவாக கவர்ந்த வரிகள்...!

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

curesure4u said...

ஐயா நட்பு ,கவிதை நன்று - நன்றி ..

தமிழரசி said...

kavithaigalin eeram kanodu....happy friendship day....

ச.அருண்பிரசாத். said...

//ஆயிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும் ஏனோ தனிமையில் இருப்பதாய் தவிக்கும் இந்த உள்ளம் .உன் நட்பு மட்டும் உடன் இருந்தால் இந்த உலகமே அருகில் இருப்பதாய் உள்ளுக்குள் துள்ளும்//
உண்மையான வரிகள்,மீண்டும் மீண்டும் அசை போட்டு பார்க்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துகள்.

ப.செல்வக்குமார் said...

நீ என்மீது கோபப்பட்ட போதும்
என்னைக் கோபப்பட வைத்தபோதும் அமைதியாய் இருந்தது நம் நட்பு ..!
கோபபடுவது நட்பின் உரிமையாம் ..!!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா ...!!

இராமசாமி கண்ணண் said...

நட்புனால ரொம்ப ஸ்பெஷல் சங்கர்.. நல்ல கவிதை(கள்) ! :)

சௌந்தர் said...

நல்ல நேரத்தில் நல்ல கவிதை

உங்களக்கு என் நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் நண்பா...

ஹேமா said...

நட்பின் இறுக்கம் ஒவ்வொரு வரிகளிலும் சங்கர்.வாழ்த்துகள்.

கோவை ஆவி said...

நண்பர் தின வாழ்த்துகள்!!!

சுசி said...

தாய்மடி இல்லையென்றபோதும்
உன் தோழமையின் அரவணைப்பில்
உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்
மெய்மறந்து சிறு குழந்தையாய் .
-------------
அருமையா இருக்கு..

உங்களுக்கும் வாழ்த்துக்கள் சங்கர்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///உன் நட்பு மட்டும்
உடன் இருந்தால்
இந்த உலகமே
அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும் //

அனைத்தும் நட்புக்காக....அருமை
ரசித்தேன்

தங்களுக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சே.குமார் said...

//காதல் கொண்ட உள்ளத்தின்
எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்
கற்பனைகள் நிரம்பி வழிகிறது
இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .//

அருமையா இருக்கு..

உங்களுக்கும் வாழ்த்துக்கள் சங்கர்.

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்கும் என் வாழ்த்துகள் நண்பா,...

நியோ said...

அன்பு நண்பரே!
கவிதை வரிகளில் நெஞ்சம் குளிர்ந்தேன்!
எனது இதயமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழரே!
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு பெரும் நன்றிகள்!

abul bazar/அபுல் பசர் said...

" ஆயிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம் .
உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்
இந்த உலகமே அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும்."

வைர வரிகள் சங்கர்.

நட்பு நிறைந்த " நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்"

யோ வொய்ஸ் (யோகா) said...

அழகான கவி வரிகள் நண்பரே!

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்

வெறும்பய said...

.நட்புக்கு வாழ்த்துக்கள்.

கலாநேசன் said...

//“வலி“ என்று சொல்லுமுன் விழிகள் அழுது//

நல்ல கவிதை.நட்புக்கு வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்...

KANA VARO said...

அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

nis (Ravana) said...

வாழ்த்துக்கள் நண்பரே.
நல்ல கவிதைகள்.

MANO said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

கவிதைகள் அனைத்தும் அருமை.

மனோ

சின்னப்பயல் said...

வியக்க வைக்கும் பனித்துளியின் வரிகள்
நன்றி நண்பா..நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!

"உன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
மௌனத்தின் மொழி இவ்வளவு
தெளிவாகக் கேட்கும் என்பதை
உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன்"

Riyas said...

கவிதை நல்லாருக்கு நண்பா..

Chitra said...

Thank you.
வாழ்த்துக்கள்

jaisankar jaganathan said...

கவிதை நல்லாருக்கு. நாமும் நம்ப நட்பை புதுப்பிச்சுக்கலாமா?

இளம் தூயவன் said...

நட்பு நிறைந்த " நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்"

Meerapriyan said...

nanpargal thina kavithaigal nandru.nadpu thodaraddum. vazhthugal.-meerapriyan.blogspot.com

mkr said...

நட்பை உணர்த்தும் அழகான கவிதை.ப்ராட்டுகள் நண்பா