இன்று ஒரு தகவல் 35- அறிவுக்கு விருந்து !!!

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .

’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை நம் எல்லோருக்கும் நன்கு தெரியும் . நாமும் அதிகமுறை பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இந்த ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் என்று நம்மிடம் கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . இந்த ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நம் தமிழர் செண்பகராமன்தான்  முதன் முதலில் பயன்படுத்தி இருக்கிறார் !

னிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில் மட்டும்தான் காணப்படுகிறதாம் !

லகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதானாம் தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம் !

லகத்தின் மிகவும் பெருமை வாய்ந்த கட்டிடமாக அனைவராலும் அதிசயத்து பார்க்கும் வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்தானாம் !

நீரிழிவு நோய்க்கு மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக் ஸôன்டர் ஃப்ளெமிங்தானாம் !

`கொசு கடிக்குது' என்றால் சில அறிவாளிகள் `அதுக்கென்ன பல்லா இருக்கு?' என்று கேலி பேசுவார்கள் பார்த்திருப்போம் . நம்மில் பலரும் அதை செய்திருப்போம் . ஆனால் உண்மையாகவே கொசுக்களுக்கும் பற்கள் இருக்கிறதாம் !

லகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானைதானாம் !

வாத்துக்கு இரு கண்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருக்கிறதாம் . அதன் மற்றொரு கண்ணினால் பார்க்க இயலாதாம் !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

24 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 35- அறிவுக்கு விருந்து !!! :

கக்கு - மாணிக்கம் said...

//நீரிழிவு நோய்க்கு மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக் ஸôன்டர் ஃப்ளெமிங்தானாம் !//
------------------பனித்துளி சங்கர்.

ஏதோ தவறான தகவல் நண்பரே!.
பெனிசிலின் கண்டுபிடிபிற்கும் நீரழிவு நோய்க்கும் தொடர்பில்லை.
நடந்த இரண்டு உலக மகா யுத்தங்களின் போது ஆயிரக்கணக்கான் படை வீரர்கள் தங்கள் வீட்டையும் நாட்டையும் விட்டு
பிற தேசங்களில் கழிக்க நேர்ந்தபோது பாலியல் நோய்களால் மிக அதிகம் பாதிக்க பட்டனராம்.
அந்த நோய்களுக்கு 'ஆண்டி பயாடிக்' தேவைப்பட்டதால் அதனை கண்டுபிடிக்க ஆயத்தமாயினர்.
இறுதியில் பெனிசிலின் அறியப்பட்டது
பெனிசிலின் கண்டுபிடித்தவர் அலக்சாண்டர் பிளெமிங்,இங்கிலாந்த் நாட்டு மருத்துவர்.

Jeyamaran said...

*/உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதானாம் தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம் !/*
இதுதான் டாப்பு அண்ணா

நாடோடி said...

சில‌ த‌க‌வ‌ல்க‌ள் அறியாத‌வை... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

பிரவின்குமார் said...

அனைத்து சிறுசிறு தகவல்களும் அருமை..!
//பனிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில் மட்டும்தான் காணப்படுகிறதாம் !//

கூடுதல் தகவல்
என்ன.. நண்பா ஆச்சரியமா.. இருக்கு?!! மலையை புரட்டிக்கொண்டு மலைப்பான தகவல்களை பதிவுகளில் தரும் பனித்துளி எனும் சீறிப்பாயும் சிறுத்தையும் தற்போது துபாயில்தான் உள்ளதாமே. அதை விட்டுட்டியே தலைவா..!! சரி தொடர்ந்து அசத்துங்க..!

ப.செல்வக்குமார் said...

அருமையான தகவல்கள் ..!!

rk guru said...

நன்றி:தமிழச்சி இணையம் செய்தி குறிப்பு

///´ஜெய் ஹிந்த்´ சுபாஷ் சந்திரபோஸ் என்பது அனேகருக்கு தெரிந்த சங்கதிதானே!

அதையே நானும் சொன்னபோது...

சிரித்துக் கொண்டே இல்லை என்றார். தானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்ததாகவும் ரகமி என்ற வரலாற்று ஆசிரியர் ´ஜெய்ஹிந்த் செண்பகராமன்´ என்ற நூல் எழுதியிருப்பதாகவும் அதிலேயே தான் ´ஜெய் ஹிந்த்´ பற்றி தெரிந்து கொண்டேன் என்றும் சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தார்.

குமரியில் பிறந்த செண்பகராமன் சில காலத்திற்கு பின் திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். மாணவராக இருந்த காலங்களிலேயே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார் செண்பகராமன்.

ஜெர்மன் நாட்டு உளவாளியான சேர் ´வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட்´ செண்பகராமன் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலையும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் உதவி செய்தார். இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, சுவீட்சர்லாந்து, ஜெர்மன் நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்த போது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் படித்திருக்கிறார். பின் சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனியின் தலைநகரான பெர்லியனில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

பட்டப்படிப்பு முடித்த பின் செண்பகராமன் ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே ´இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி´ மூலம் தாய் நாட்டு விடுதலைக்கு ஆதரவு திரட்டத் தொடங்கினார்.

அந்த காலக்கட்டத்தில் தான் ஜெர்மனி வேந்தர் கெய்சரின் நட்பு கிடைத்திருக்கிறது செண்பகராமனுக்கு.

1930-இல் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து 1933-வரையில் அரசியலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது செண்பகராமனுக்கு.

1933-இல் ஹிட்லர் ஆட்சி ஏற்பட்ட போது அவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது செண்பகராமனுக்கு.

1933-இல் வியன்னா நடைப்பெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸை முதன்முறையாக சந்திக்கிறார்.

செண்பகராமன் ´இந்திய தேசியத் தொண்டர் படை´ திட்டம் பற்றி கேள்விப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய ´இந்திய தேசீயப் படை´ குறித்து கலந்தாலோசித்து இருக்கிறார். அச்சந்திப்பின் முடிவில் தான் செண்பகராமன் எப்போதும் தான் சொல்லும் ஜெய் ஹிந்த் என்ற மந்திர வார்த்தையை உச்சரித்து இருக்கிறார்.

அச்சொல் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு வெகுவாக ஈர்க்கவே தன்னுடைய தேசீயப்படையின் தாரக மந்திரமாக்கினார். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.///


வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..! நம் தமிழர் இந்தியாவின் சுதந்திர வேட்கை உள்ள வார்த்தையை சொன்னார் எனபது நமக்கெல்லாம் பெருமையானது. "ஜெய் ஹிந்த்" நம் தமிழர் செண்பகராமன் சொன்னார் என்று இன்னொரு பதிவு வெளியுடுங்கள் எங்கள் மேல் வைத்த அன்பான நட்புடன்....

என்றும் நட்புடன்:
Rk.குரு

rk guru said...
This comment has been removed by the author.
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நண்பர் rk guru அவர்களுக்கு ,

தெளிவான குறிப்புகளுக்கு மிகவும் நன்றி நண்பரே ! இப்பொழுதே அதை மாற்றி விடுகிறேன் .

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நண்பர் கக்கு - மாணிக்கம் அவர்களுக்கு ,

நீங்கள் சொல்லி இருப்பதுபோல் இது தவறான தகவல் இல்லை இங்கு உங்களின் புரிதால்தான் தவறானது . நான் நீரழிவு நோயினால்தான் இந்த மருந்துக் கண்டுபிடிக்கப் பட்டது என்று குறிப்பிடவில்லை . நீரழிவு நோயிர்க்கு மருந்தாகப் பயன்படும் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன் . நீங்கள் சொல்லும் கதைக்கும் நான் சொல்லி இருக்கும் தகவலுக்கும் தொடர்பில்லை . நான் பெனிசிலின் கண்டு பிடித்தவர் பற்றித்தான் சொல்லி இருக்கிறேன் . ஆனால் நீங்களோ இந்த மருந்து எதர்க்காக எப்பொழுது கண்டு பிடிக்கப் பட்டது என்பதை சொல்லி இருக்கிறீர்கள் . தெளிவான புரிதலுக்கு நன்றி !


என்றும் அன்புடன்
பனித்துளி சங்கர்

rk guru said...

பெயர் மாற்றி அமைத்தற்கு நன்றி.....

கக்கு - மாணிக்கம் said...

விளக்கத்திற்கு நன்றி நண்பரே.
இதுவர நீங்கள் வெளியிட்டிருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை என்னை மலைக்க வைக்கிறது.
நான் விரும்பும் தரமான வலைப்பூக்களில் தங்களுடையதும் ஒன்று.
வாழ்த்துக்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

//நம் தமிழர் செண்பகராமன்தான் முதன் முதலில் பயன்படுத்தி இருக்கிறார் !//

சென்பகராமன் யாருன்னு சொல்லுங்க முதல்ல...

வானம்பாடிகள் said...

நீரிழிவுக்கு இன்சுலின் தானே!
Insulin is a hormone produced in the pancreas. It was isolated in 1921-22 at the University of Toronto. The scientists involved in the research were Dr. Fredrick Banting, Charles Best (a medical student at the time of the discovery), Professor J. J. R. Macleod and Dr. James Collip. On June 3, 1934, Dr Frederick Banting the co-inventor of insulin was knighted for his medical discovery.

அண்ணாமலை..!! said...

பயன்மிக்க தகவல்கள் நண்பரே!

சூர்ய பிரகாசு.ச.அ. said...

பதிவு அருமை! தகவல்கள் அனைத்தும் முன்னொரு காலத்தில் படித்தவையாக இருந்தாலும், சுவையாகவே இருந்தன!

Mrs.Menagasathia said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி!!

santhanakrishnan said...

உபயோகமான
தகவல்கள்.

M. Azard (ADrockz) said...

thodarnthu asaththunga :)

M. Azard (ADrockz) said...

thodarnthu asaththunga :)

கலாநேசன் said...

நீரிழிவு நோய்க்கு மருந்து இன்சுலின், பெனிசிலின் இல்லை நண்பரே...

மீள்பதிவு நன்று.

ஜிஎஸ்ஆர் said...

நல்ல தகவல்

Mohamed Faaique said...

உலகின் நீந்தத் தெரியாத ஒரே மிருகம் ஒட்டகமாகும்.

Periyannan.PKP said...

நல்ல தகவல்!!!!!!!!!
pkp
tamilstoryz.blogspot.com

Periyannan.PKP said...

visit my blog to more information about tamil languge
http://www.tamilstoryz.blogspot.com