அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!

வளவு ஆசைகள்
இந்த குட்டி இதயத்தில்
இங்கும் அங்கும் முட்டி மோதி
நிரம்பி வழிகிறது
உன்னை நினைத்தலின் உச்சங்களில் .!
ழ்ச்சியின் வார்த்தைகள்
மெல்ல கரை உடைக்கிறது
என் பெயரையும் உன் பெயரையும்
ஒன்றாய் இணைத்து உன் இதழ்கள்
உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் .!...

நீ வெட்கத்தால் தலைகுனிந்து
நடப்பதால்தான் என்னவோ
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன
வரும் வழியெங்கும் .
நீ உதிர்த்து சென்ற
சிறு புன்னகையின் ஸ்பரிஷத்தில்
மலர்ந்த பூக்காளாக !தினமணி நாளிதழில் -வெளியாகியுள்ளது நன்றி தினமணி !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.27 மறுமொழிகள் to அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!! :

முனைவர்.இரா.குணசீலன் said...

தென்றல் வீசியது போல கவிதை..

வெறும்பய said...

நீ வெட்கத்தால் தலைகுனிந்து
நடப்பதால்தான் என்னவோ
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன

///

நல்ல கவிதை ...

வரிகளின் நளினம் அருமை..

சே.குமார் said...

தென்றல் வீசியது போல நல்ல கவிதை ...

வரிகளின் நளினம்.

LK said...

arumai,. ungal thunaiviyaar koduthu vaithavargal.

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ந‌ண்ப‌ரே..

VELU.G said...

//வரும் வழியெங்கும் .
நீ உதிர்த்து சென்ற
சிறு புன்னகையின் ஸ்பரிஷத்தில்
மலர்ந்த பூக்காளாக !
//

அருமை சங்கர்

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்கு சங்கர்.

ஹேமா said...

வெட்கமாய் ஒரு தென்றல்க் கவிதை !

மாதேவி said...

குட்டி இதயத்தில் முட்டி மோதி வழியும் காதல் அருமை.

தமிழ் மதுரம் said...

நீ வெட்கத்தால் தலைகுனிந்து
நடப்பதால்தான் என்னவோ
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன//


சங்கர் என்ன அருமையான கற்பனை இலயம் இது! மிக மிக அருமையான கவிதை. உங்களின் ஒவ்வோர் கவிதைகளிலும் இலக்கிய நயமும் கரை புரண்டோடுகின்றது. வாழ்த்துக்கள் சங்கர்!

உங்கள் ஒவ்வோர் பதிவுகளிலும் வித்தியாசமான கற்பனைகள். தொடருங்கோ.

அன்புடன் அருணா said...

உங்கள் வலைப்பூ திறக்க அதிக நேரம் ஆகிறது:(
அதுபோக ஒரே வண்ணங்கள் மயம்.

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கின்றது....

Ananthi said...

///எவளவு ஆசைகள்
இந்த குட்டி இதயத்தில்
இங்கும் அங்கும் முட்டி மோதி
நிரம்பி வழிகிறது
உன்னை நினைத்தலின் உச்சங்களில் ///

ஹ்ம்ம்ம்... ரொம்ப சூப்பர்..
கவிதை கவிதை.. வேறென்ன சொல்ல..!!
கலக்கல்.. :-))

Jeyamaran said...

நீ வெட்கத்தால் தலைகுனிந்து
நடப்பதால்தான் என்னவோ
என் பார்வைகளும் கவிழ்ந்தே
உனக்காக காத்துகிடக்கின்றன
கலகிரிங்க

நிலாமதி said...

காதல் கொண்ட இதயம் கவிதை பொழிகிறதோ.?............நன்றாய் இருக்கிறது

வானம்பாடிகள் said...

இன்றுமொரு அசத்தல். வேறெப்படிச் சொல்ல?

பிரவின்குமார் said...

வழக்கம் போல் தங்களது அருமையான கவிதை வரிகளுடன் தங்கள் வலைப்பக்கம் மிளிர்கிறது..! தொடர்ந்து தினமணியின் நட்சித்திர பதிவராக ஜொலிப்பதற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் நண்பா..!

Kamaraj M Radhakrishnan said...

kadhavai thirandhu vaiyungal
kattru innum nandraaga veesum

Chitra said...

:-) nice.

Kamaraj M Radhakrishnan said...

அன்பரே...தங்கள் தளம் வண்ணமயமாக இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், எமக்கு சற்று சிரமமாக உள்ளது. எனது கணினி பிரசினையா என தெரியவில்லை. மற்றபடி , கவிதையின் கோர்வை அருமை.

ராசராசசோழன் said...

நல்லதொரு காதல் கவிதை...புகைப்படம் ஒரு கூடுதல் சுகம்...

thenammailakshmanan said...

அருமையான கவிதை சங்கர்..

அன்புடன் மலிக்கா said...

வெட்கக்கவிதை வெகு சூப்பர்.

சிறுபிழையின்னு நினைக்கிறேன்

//மழ்ச்சியின்// மகிழ்ச்சியின்

வரவேண்டும் என நினைக்கிறேன்.

ezhilan said...

நல்ல கவிதை.பாராட்டுக்கள். காலிங்கராயர்.

ezhilan said...

நல்ல கவிதை.பாராட்டுக்கள். காலிங்கராயர்.

DREAMER said...

கவிதை அருமை...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கவிதை நல்லா இருக்குங்க.. :)