போதும் நிறுத்துங்கள் அழித்ததும் அழிந்ததும் !!!

ன்றுவரை யாராலும் வெல்லமுடியாத
அதிசயம் நீ...
தொன்று தொட்டு மெய் ஞானியும் விஞ்ஞானியும்
அடக்கியாள ஆசைப்படும்
இன்னதென்று சொல்லமுடியாத
அற்புத சக்தி நீ
 
பொறுமைக்கு பெயர் போனவளும்
நீ தான்
மறுகணமே பெரும் கோபத்தின்
எடுத்துக்காட்டும் நீதான்

னாலும் நீ இப்பொழுதெல்லாம்
அடிக்கடி கோவப்படுகிறாய் !
உன்னழகை சீர் குலைத்து சீண்டி விளையாடுவதால்
வந்த கோபமா இது ?

ன் கோபம் எனக்கு புரிகிறது!
எனக்கு மட்டுமே புரிந்தென்ன பயன்????????
போதும் நிறுத்துங்கள் அழித்ததும், அழிந்ததும் .!..............


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

20 மறுமொழிகள் to போதும் நிறுத்துங்கள் அழித்ததும் அழிந்ததும் !!! :

வெறும்பய said...

பூமிக்கு புது இலக்கணம்...

அருமை நண்பரே..

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்படிதான் முடியும் போர் தொடர்ந்தால் எனக் கூறும் இறுதிப் படமும், ஆதங்க கவிதையும் அருமை.

அமைதிச்சாரல் said...

நியாயமான ஆதங்கம்தான். கவிதை நல்லாருக்கு.

vijay said...

அழகான காதல் நயம் சொட்டும் வரிகள் தோழரே .. வாழ்த்துக்கள்

பிரவின்குமார் said...
This comment has been removed by the author.
பிரவின்குமார் said...

கவிதை நல்லாயிருக்கு நண்பரே..!
இது போதாது தொடர்ந்து நிறுத்தாமல்.. அசத்துங்க...! இது போன்று இன்னும் நிறைய உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கிறேன் தலைவா...!
என்றும் உங்கள் அன்பிற்கினிய ரசிகனின் ரசிகனாய்....

sandhya said...

கவிதை ரொம்ப அருமையா இருக்கு . பூமி தேவி எவ்ளோ தான் தாங்குவா?

ராசராசசோழன் said...

பெண்ணை வர்ணித்து போலவே இருந்தது...கடைசியில் நமது பூமி.... அருமை நண்பா...

Jayaseelan said...

அருமை....

அக்பர் said...

என்னத்த சொல்ல. "போதும் நிறுத்துங்கள் அழித்ததும் அழிந்ததும் !!!"

கவிதை சுடுகிறது சங்கர்.

தேவன் மாயம் said...

ஆனாலும் நீ இப்பொழுதெல்லாம்
அடிக்கடி கோவப்படுகிறாய் !
உன்னழகை சீர் குலைத்து சீண்டி விளையாடுவதால்
வந்த கோபமா இது ?
///
ஆக்குபவன் எவனோ ஆனால் அழிப்பது நாம்தான்!!!

கோமதி அரசு said...

மனிதன் பூமியில் உள்ளதை அழித்ததும் அழிந்ததும் எவ்வளவு!

இனியாவது ஆக்கட்டும்.


நல்ல கவிதைக்கு நன்றி.

ஜீவதர்ஷன் said...

//ஆனாலும் நீ இப்பொழுதெல்லாம்
அடிக்கடி கோவப்படுகிறாய் !//

ரொம்பவுமே, வானத்தில பறக்கிற விமானங்களை கூட இப்ப விடுறதில்லை.அருமையான பகிர்வு

ஷர்புதீன் said...

அட பூமிய பத்தி என்ன அழகான மேட்டர்

kishore said...

நல்லா இருக்கு....

தமிழ் மதுரம் said...

இயற்கையின் மீதான உங்களின் பார்வை ஒரு கவிதையினூடக இரு பொருளைப் புலப்படுத்தி நிற்கிறது. வாழ்த்துக்கள் தோழா. நல்ல கவிதை.

சி. கருணாகரசு said...

அமைதிச்சாரல் said...

நியாயமான ஆதங்கம்தான். கவிதை நல்லாருக்கு.//

இதையே வழிமொழிகிறேன்.

INNOVATOR said...

புது போஸ்ட் போட்டு இருக்கேன் மறக்காம என்னோட ப்ளோக்ல கம்மேன்ட்போடுங்க

நியோ said...

மிக அவசியமான எச்சரிக்கை தோழர் ...
நிறுத்தாவிடில் நாம் நிறையவே அனுபவிக்க நேரிடும் ...
நன்றி தோழர் பனித்துளி!

பிரசன்னா said...

Superb..