இன்று ஒரு தகவல் 26- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள் !!!

னைவருக்கும் வணக்கம். உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு . இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பயும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய திமிங்கிலங்கள் ப்பற்றிய  சில வினோத தகவல்களை நாமும் தெரிந்துக்கொள்வோம் .
 திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும்.திமிங்கிலதில் 75-க்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன. 10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஓன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.
 திமிங்கிலம் என்றுச் சொன்னவுடன் நாம் எல்லோரும் உணரக்கூடிய ஒன்று மிகப் பெரிய மீனாகத்தான் இருக்கும் என்பதாகும் .
இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைத் சாராத பாலூட்டி ஆகும். பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இருப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இருப் புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன .பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன .

 லகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும் . இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். "சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும்,'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன் படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்றுச் சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக தொலை தூர கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.
நாம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று தெரியும். அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும் . ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன . என்றால் நம்புவீர்களா ? எதிர்பாருங்கள் இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தப்போகும் திமிங்கிலங்கள் பற்றிய பல வியப்பான தகவல்களுடன் அடுத்தப் பதிவில் சந்திகிறேன் .
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


29 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 26- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள் !!! :

ஜிஎஸ்ஆர் said...

நண்பா நல்ல தகவல் உங்கள் தளத்தில் வரும் இது போன்ற தகவல்கள நிறைய எழுத வேண்டும் இது என் அன்பான வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

butterfly Surya said...

அருமை தகவல்கள்..

திமிங்கலம் பாடுமா..??

ஸ்டார்ட் மியூசீக்..

தேவன் மாயம் said...

அரிய தகவல்கள் நண்பரே!!

LK said...

nice information shankar

vijay said...

மிகவும் அருமையான பதிவு தோழரே....இன்னும் நிறையா எழுத எனது வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

அருமையான தகவல்கள். நன்றி.

இந்தத் திமிங்கிலங்களில் ஒரு வகையை அதன் இயற்கைச்சூழலில் பார்க்க உலகில் ஒரு இடம்தான் இருக்கு.

நியூஸியில் கைக்கோரா என்னும் பகுதி.

இதுக்காகவே சுற்றுலாப் பயணிகள் உலகெங்கிலும் இருந்து வர்றாங்க.

சி. கருணாகரசு said...

அரியத் தகவல்... மிக்க நன்றிங்க நண்பா.

அக்பர் said...

வழக்கம் போலவே பல அரிய தகவல்களை தந்து அசத்துகிறீர்கள் நண்பா.

ராஜன் said...

நீலத் திமிங்கலம் என்ன சைஸ் இருக்கும் தலைவா! ஒரு மூணு யானை சைஸ் இருக்குமா

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்க டெம்ப்ளேட் மாற்றுங்க தலைவா.. ரொம்ப கலர்புல்லா இருக்கு .

Geetha Achal said...

அருமையான உண்மையில் அதிசயதக்க தகவல்கள்...திமிங்கலம் பாடுமா...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பொதுவாக திமிங்கிலம் எனச் சொல்லப்பட்டபோதும்; டொல்பின் - கடற்பன்றி; வேறொன்று தூய வெள்ளை நிறத்தில் வட்ட வடிவ வாலுடன்
கடற்பசு எனவும் தமிழில் வகைப்படுத்தப்பட்ட கடல் விலங்குகளும் இன்னும் பலவும் உண்டு.
தாங்கள் இட்ட முதல் படம் திமிங்கிலம் அல்ல அது திமிங்கிலச் சுறா , இதுவே உலகில் உள்ள மீனினத்தில் மிகப் பெரியதென வகைப்படுத்தப்பட்டுள்ளது.. திமிங்கிலங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுப்பவை. இந்த திமிங்கிலச் சுறா முலையூட்டியல்ல. அத்துடன் ஆய்வாளர்கள் இதுவரை இதன்
குட்டியை காணவில்லை என்ற செய்தியையும் சமீபத்தில் பிரஞ்சுத் தொலைகாட்சியில் கூறினார்கள்.
தாங்கள் திமிங்கிலத்தை மீனினம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் பார்த்த எந்த தொலைக்காட்சி
விபரணத்திலும் அப்படிக் கூறவில்லை.
மீனின் தசை அமைப்பும்; திமிங்கிலத்தின் தசை அமைப்பும் மிக வித்தியாசமானது.
திமிங்கில தசையை இறைச்சி எனக் குறிப்பிடுகிறார்கள்.
அதனால் திமிங்கிலத்தை மீனினமாகக் கொள்ளலாமா?
என் மட்டான ஆங்கில, பிரஞ்சு அறிவை வைத்து நான் புரிந்து கொண்ட தகவல்கள். நான் தவறாகப் புரிந்துமிருக்கலாம்.

Kousalya said...

தகவல் அருமை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...

கோமதி அரசு said...

பாடும் திமிங்கிலங்கள் !
அதிசயம் தான் சங்கர்.

Mrs.Menagasathia said...

பயனுள்ள தகவல் சங்கர்!! பாராட்டுக்கள் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்க்கு...

ஸ்ரீராம். said...

திமிங்கிலத்தகவல்கள் அருமை.

Riyas said...

தெரியாத பல தகவல்கள் தெரிந்துகொண்டோம்.. டெம்ப்லேட் கண்ண கடிக்குது சார்..

தமிழ் மதுரம் said...

அதிசயிக்கும் வகையில் தகவல்களைத் தந்து அசத்துகிறீர்கள். திமிங்கலம் ஆளை விழுங்குமாமோ?

தமிழ் மதுரம் said...

தொடர்ந்தும் தங்களின் அறிவியல் பதிவுகள் வீறு நடை போடட்டும்,

ஷக்தி said...

அரியத் தகவல்கள்... மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்.

பிரவின்குமார் said...

தொடர்ச்சியாக பல அரிய தகவல்களை தந்து அசத்துகிறீர்கள் நண்பா..! எங்கிருந்துதான் இதெல்லாம் சேகரிக்கிறிர்கள் என்று நானும் தேடிப்பார்க்கிறேன்..!! கண்டுபிடிக்கவே முடியல..!! எப்படியோ..!! பல புதுமையான தகவல்களை தங்களால் அறிந்து கொள்கிறேன்..! பகிர்வுக்கு நன்றி தலைவா..!

மகேஷ் : ரசிகன் said...

Great Info! Not only this post, but All of yours...

Its good to write like this!

All the very best!

Matangi Mawley said...

wow! mika arumai... ippothu discoveryil 'life' endru oru series kaattappattu varukirathu.. athil varuvatharpondru ullathu! excellent info!! innoru pgm-il, underwater mikes/speakers thayaar seithu.. oruvar thimingalangalin padalkalayum pathivu seithu kaanbiththaar.. very interesting!

thanks for sharing!! :D

Lucky Limat லக்கி லிமட் said...

கலக்கல் தகவல் நண்பரே..
அடுத்த பதிவான தரையில் வாழ்ந்த திமிகிலம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இராமசாமி கண்ணண் said...

interesting.

ப்ரின்ஸ் said...

திமிங்கிலங்கள் பற்றிய பல வியப்பான தகவல்களுடன் அடுத்தப் பதிவில் சந்திகிறேன் ///


ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன்
அரிய தகவல்கள் - அற்புதமான செய்திகள் - அனைவரும் படிக்க வேண்டிய இடுகை.

நல்வாழ்த்துகள் சங்கர்
நட்புடன் சீனா

யூர்கன் க்ருகியர் said...

தமிளிஷ்ல கண்டிப்பா எங்காவது உங்க இடுகை இருக்கும் .
அது சரி... சாட் பண்ணிட்டு இருக்கும்போதே படக்குன்னு கட் பண்ணிட்டு போய்டீங்க ??

ரொம்ப கோவக்கார ஆளா இருப்பீரோ ?

Mohamed Faaique said...

நல்ல தகவல் நன்பா....