அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

 தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! 
 வசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன ! 

பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.! 

ழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!

ருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

27 மறுமொழிகள் to அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!! :

Chitra said...

வாவ்! காதல் கவிதைகளும் அதற்கேற்ற படங்களும் அருமை. பாராட்டுக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

சில நினைவுகள் இறப்பதில்லை - நாம் இறந்த பின்பும். நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

வருடிச்செல்லும் காற்றைப் போல
தழுவிச்செல்கிறது கவிதை...

க.பாலாசி said...

//அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி தாழிட்டு செல்கின்றது.!//

நல்லாருக்குங்க சங்கர்....கவிதையும்... படமும்....

சந்ரு said...

//ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம்...//

அத்தனை வரிகளும் அருமை இருந்தாலும் இந்த வரிகள் அதிகம் பிடித்திருக்கின்றது.

S Maharajan said...

//ஒருவேளைநான் இறந்து போகும்போதுஅவளைமறந்துபோகலாம்//
மனதை தொட்ட வலி(வரி)கள்

தனி காட்டு ராஜா said...

//பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.! //

//அழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!//

அருமை .............

VELU.G said...

மனதைத்தொடும் வரிகள் நன்பேரே

அக்பர் said...

காதல் ரசம் சொட்ட கவிதைகள் அருமை.

LK said...

arumai

soundar said...

பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!
சூப்பர்...

ஜிஎஸ்ஆர் said...

\\ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!\\

கவிதைக்கு மகுடம் வைத்தாற்போல் இந்த வரிகள் அருமை நண்பா

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

meenavan said...

சில நினைவுகள்...........
இறந்தாலும் இயலாது மறக்க.
வார்த்தைகளாக உலவும்
அவனது நினைவுகள்.
--
ப்ரியமுடன்
M.MEENU

பிரவின்குமார் said...

கவிதை மிகவும் நன்றாக உள்ளது. பாராட்டுகள் நண்பரே..!

ஸ்ரீராம். said...

புன்னகையின் அழுகுரல்...? அட..என்னவொரு வார்த்தைப் பிரயோகம்...!

தமிழ் உதயம் said...

படங்கள், கவிதைகள்... எல்லாமே அழகு.

ப்ரின்ஸ் said...

When i came to u i had nothing
then u offered me your heart & i had everything i could feel your soul my life had meaning. u become my reason 4 being i may not talk that much 2 u but u will find me waiting,every minutes.. just to listen to every pieces your heart says.that U maybe out of my sight,
but not out of my heart. u maybe out of my reach, but not out of my mind. i may mean nothing to u
but u will always be my soul...In my life i learned_how to love_how to smile_how to happy..
but couldn't learn how to
stop remembering u...

புலவன் புலிகேசி said...

காதல் ரசம் சொட்டும் கவிதைகள்...

நிலாமதி said...

அருமையாய் வந்திருக்கிறது கவிதை. உணர்வுள்ளவர்கள் தான் உருவகிக்க முடியும். பாராடுக்கள்.

சேட்டைக்காரன் said...

ஹூம், எடுத்த எடுப்பிலேயே ஸ்ரேயா படம் போட்டு பெருமூச்சு விட வைச்சிட்டீங்களே! அருமை............

கிறுக்கல்கள் said...

காதல் கவிதைகள் என்றாலே வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்து தான் விளுகின்றனவோ தெரியவில்லை..
யதார்த்தமான வரிகள்..
அனுபவப்பட்டவர்களுக்கு இதைப் படித்ததும் கண்டிப்பாக ஒரு பளிச் புன்னகை தோன்றும்.
புகைப்படங்களும் அருமை. நன்றாக உள்ளது நண்பரே..

Ananthi said...

//ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!//

ரொம்ப ரொம்ப ரசிச்சேன்...இந்த வரிகளை..
டச் பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)

கலாநேசன் said...

நல்கவிதை

யாதவன் said...

Superb வாழ்த்துக்கள்

செந்தில்குமார் said...

அவள் கொடுத்த
முத்தத்தின்
மிச்சமுல்ல எச்சவடு
இன்னும் (இன்றும்).........

உங்களின் அவள் நினைவுகள்

பனித்துளிசங்கர்

sakthi said...

wow super kavithaikal

மாதேவி said...

அவள் நினைவு....சொட்டுகிறது.