நீ இன்றி ஓர் இரவு !!!

சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில்
சந்தோசம்தான் ....
புரிந்தது உன் பார்வை
தீண்டிய நேரத்திலெல்லாம் ..
உன் மன இருந்தாலும்
அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்..
எப்படி இது சாத்தியம் ??
தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு .

நேற்றிரவு ...
உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள்
இன்றும் ஏனோ ஊனமாய்..
என்றும் இல்லாத நிசப்தம்
 அதிலும் ஓங்கி ஒலித்தபடி
வெகு நேரமாய் உன் நினைவுகள் ..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ...
பொம்மையை தவறவிட்ட குழந்தைபோல்....
வேறெதுவும் தோன்றாது கணணியை
வெறித்து நோக்கியபடி நெடுநேரமாய் நான்...
டுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

29 மறுமொழிகள் to நீ இன்றி ஓர் இரவு !!! :

dheva said...

//படுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....//


ரொம்ப நிதானமாய் ரசிக்க வேண்டிய வரிகள் சங்கர்....! வாழ்த்துக்கள்!

தேனுசா said...

கலக்கல்
நினைவுகள் படுத்தும் பாட்டினை அருமையா சொல்லி இருக்கீங்க

//பொம்மை தவற விட்ட குழந்தை போல்//
அழகு

meenavan said...

வெகு நேரமாய் உன் நினைவுகள் ..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ...
பொம்மையை தவறவிட்ட குழந்தைபோல்....

நினைவுகளின் அழகான பிரதிபலிப்பு அழகான வரிகளில்....

ப்ரியமுடன் M.MEENU

ஸ்ரீராம். said...

அடடா என்ன ஆச்சு சங்கர்...ஏன் பிரிவு..? யார் அது?

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

சேட்டைக்காரன் said...

//கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....//

மிகவும் அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! பாராட்டுக்கள்!!

முரளிசாமி said...

சுவையாக உள்ளது நண்பரே!

அக்பர் said...

வாவ்! அருமையான வரிகள். காதல் வழிகிறது.

சூப்பர் சங்கர்.

ர‌கு said...

ந‌ல்லாருக்கு ச‌ங்க‌ர்!

சின்ன அம்மிணி said...

நல்லா இருக்குங்க கவிதைகள்

சைவகொத்துப்பரோட்டா said...

அட!!!! பனித்துளியா உருகி,
எங்களையும் உருக்கிட்டீன்களே
சங்கர். அருமை!!!

Anonymous said...

'பொம்மையை
தவறவிட்ட
குழந்தையைப்போல'
ம்..சூப்பர்.
அசத்துறீங்க தல..
வாழ்த்துக்கள்.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

Anonymous said...

'பொம்மையை
தவறவிட்ட
குழந்தையைப்போல'
ம்..சூப்பர்.
அசத்துறீங்க தல..
வாழ்த்துக்கள்.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

Anonymous said...

'பொம்மையை
தவறவிட்ட
குழந்தையைப்போல'
ம்..சூப்பர்.
அசத்துறீங்க தல..
வாழ்த்துக்கள்.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

ஹேமா said...

உங்கள் கவிதைக்குள் சிறைப்பட்டுப்போவதும்
ஒரு சந்தோஷம்தான் சங்கர் !

காதல் பனித்துளி !

பிரவின்குமார் said...

//கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....//

மிகவும் அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! பாராட்டுக்கள்!!

Mrs.Menagasathia said...

கலக்கல் !!

அண்ணாமலையான் said...

பாராட்டுக்கள்...

ரிஷபன் said...

கவிதை கட்டிப் போட்டது..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல்..
வாஸ்தவம்.. அப்படிப்பட்ட ஒரு உணர்வை அனுபவம் சொல்லும்..

நிலாமதி said...

கணணியை வெறித்துப் பார்த்த்படி...

வரவேண்டியவைகள் வரா விடால் துக்கம் தான்.....வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம். நன்றாக் எழுதியிருகிரீங்கள்.

இனியன் பாலாஜி said...

நான் சொல்ல வேண்டியதை MR சைவ கொத்து பரோட்டா சொல்லிட்டார்.{அவர் இல்லாத பின்னூட்டங்களே இல்லை}.

பனியாய் உருகி எங்களையும் உருக வைத்து விட்டீர்கள் போங்கள்
நிறைய உருக வைக்க வாழ்த்துக்கள்

இனியன் பாலாஜி

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒட்டு போட்டாச்சு

Anonymous said...

kavithaikuuda azhaga varukirathea...

pon

இளமுருகன் said...

காதல் வழியும் வரிகள்
வாழ்த்துகள்

இளமுருகன்
நைஜீரியா

Ananthi said...

//படுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....//

ரொம்ப சூப்பர்... ரொம்ப அழகா எழுதுறீங்க..
வாழ்த்துக்கள். :)

மாதேவி said...

"சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில்
சந்தோசம்தான் ...."
தொடக்கமே அருமை.

ரோகிணிசிவா said...

//படுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்..//-

-m m m ,நல்லா இருக்குங்க வெறுமையை கண் முன் நிறுத்தறீங்க,சூப்பர்

3rdeye said...

ம்ம்ம் மிகவும் நன்றாக உள்ளது தோழரே..வாழ்த்துக்கள்

Karthick Chidambaram said...

azhaga eluthi irukkeenga ....
//கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்//

Eppadinga ippudi ?