உலகம் அழிவை நோக்கிய பாதையில் விரைவில் ... !!!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் பூமியின் சுற்றுச்சூழல் பாதிப்புக்குறித்த காணொளியை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது.

மனிதன் தனது சிந்தனையால் இயற்கையைக் கட்டுப்படுத்தினான் என்று பெருமிதப்பட்ட காலம் போய் மனிதன் தனது சிந்தனையால் அற்புதமான இயற்கையைச் சிதைத்து அழிவைத் தேடிக்கொண்டான் என்ற நிலை விரைந்து வருகிறதோ என்ற சந்தேகத்தை பூமி வெப்பமடைதல் என்ற மிகப்பெரிய சவால் ஏற்படுத்தி உள்ளது.கிறீன்லாந்துப் பகுதியில் பனி விரைந்து உருகி வருகிறதை காட்டுகிறது..மனிதனின் செயற்பாட்டால் வெளிவிடப்படும் பச்சைவீட்டு வாயுக்களின் (CO2, methane மற்றும் nitrogen oxides ) அளவும் அதிகரித்து வருவதுடன் சூழல் வெப்பநிலை அதிகரிப்பால் பூமியின் துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகளாக தேக்கப்பட்டிருக்கும் நீர் தற்போது திரவமாகிக் கடலுடன் கலப்பதால் கடல் மட்டமும் எதிர்பார்த்த அளவை விட வேகமாக அதிகரித்து வருகின்றது. முன்னர் பிரேரிக்கப்பட்ட அளவிலும் 59% அதிகமான அளவில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வகையில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. குறிப்பாக கிறீன்லாந்து மற்றும் ஆட்டிக் பகுதிகளில் அதிகளவு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்ற நிலையிலும்...உலகின் தனிமைப்படுத்தப்பட்ட பனிப்பாறைப் பகுதியான அந்தாட்டிக்கிலும் இதே நிலை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால்..எதிர்பார்க்கப்பட்ட அளவை விட வேகமாக கடல்மட்டம் அதிகரித்து வருகின்றது.
இது பூமியின் கரையோர தாழ்நில தரைத்தோற்றம் கடலுக்குள் உள்வாங்கப்படும் நிலையை ஏற்படுத்தி இருப்பதோடு பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புக்களும் மனிதர்களை மிக நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் கண்ணுற்றுவிட்டு அமெரிக்க அரசு பூமியில் சூழல் மாற்றம் குறித்து மக்களை அறிவுறுத்தவும் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டவும் விசேட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவே உலகில் அதிகளவு பச்சைவீட்டு வாயுக்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..!


மேலதிக தகவல் இங்குள்ள இணைப்புகளில்...
இணைப்பு 1 - கடல் மட்டம் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகரித்தல்இணைப்பு 2 - பச்சைவீட்டு வாயு அதிகரிப்பு
இணைப்பு 3 - அமெரிக்க அரசு மட்ட அறிவிப்புக்கள்

2 மறுமொழிகள் to உலகம் அழிவை நோக்கிய பாதையில் விரைவில் ... !!! :

jaisankar jaganathan said...

//"உலகம் அழிவை நோக்கிய பாதையில் விரைவில் ... !!!"//

அருமையான கண்ணோட்டம்

vivek life vivek life said...

very good sir