ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் !!!

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தின் வழியாக வியாபாரிகள் 1480ம் ஆண்டுகளில் நடந்து சென்று வியாபாரம் செய்திருப்பதும் வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.400 வருடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் ராமர் பாலம் மூடிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து தெளிவான ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்து சிடியாக வெளிட்டுள்ளோம் என்றார் ஹரி.


2 மறுமொழிகள் to ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் !!! :

lolly999 said...

really wonderful!!!!good information,thanx..

Vasantham Anwar said...

முதலில் ராமர் யார்? ராமாயணம் என்பது என்ன?
வால்மீகி என்கிற திருடன் மனம் மாறி எழுதிய கதை தானே அது..ராமர் வாழ்ந்தார் ,பாலம் கட்டினார் என்பதற்கான ஆதாரம் ஒன்றேனும் நீங்கள் போட்டிருக்கலாம் தானே?பாலம் இருந்தது ஆனால் அதை ராமர்தான் கட்டினதை நிரூபித்து விட்டு இதை போன்ற செய்திகளை போடுங்கள் ..அதுவரை நம்பிக்கையை தரும் உங்கள் ப்ளாகில் இது போன்ற தரமற்ற செய்திகள் தேவை இல்லை நண்பரே..